பிரபு எஸ்.ஐயை தரக்குறைவாக திட்டிய மகளிர் காவல் நிலைய ஆய்வாளர் ஆயுதப்படைக்கு மாற்றம்!

கடலூர் மாவட்டம் பண்ருட்டி அருகேயுள்ள நடுவீரப்பட்டை சேர்ந்தவர் பிரபு. இவர் திருவண்ணாமலை மாவட்டம் செய்யாறு காவல் நிலையத்தில் சப்- இன்ஸ்பெக்டராக பணியாற்றி வருகிறார். இவரது மனைவி சசிகலா.


இவர் தனது மாமியார் அல்லி, நாத்தனார் சுகந்தி ஆகியோர் சொத்து பிரச்சினை காரணமாக. தன்னை வீட்டை விட்டு துரத்தி விட்டதாக பண்ருட்டி அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் செய்தார். 


இந்த மனுவை பெற்ற அனைத்து மகளிர் காவல் நிலைய ஆய்வாளர் வனஜா உடனடியாக விசாரிக்காமல் காலம் தாழ்த்தியுள்ளார். இதனால் சசிகலா தனது கணவர் சப்- இன்ஸ்பெக்டரான பிரபுவிடம் கூறினார். இது பற்றி காவல் ஆய்வாளர் வனஜாவிடம் பிரபு தொலைபேசியில் தொடர்பு கொண்டு பேச முற்பட்டபோது வனஜா அவரிடம் பேச மறுத்துள்ளார்.


இதில் ஆத்திரமடைந்த இன்ஸ்பெக்டர் வனஜா 'உன் புருஷன் சப்- இன்ஸ்பெக்டர் என்றால் கொம்பா முளைத்துள்ளது....? என்று திட்டியதுடன், 'விசாரணை செய்ய வரணும்னா ஆட்டோ ரெடி பண்ணு' என்று சொல்லியுள்ளார். இதையும் சசிகலா தனது கணவரிடம் கூறியுள்ளார்.


அதையடுத்துபிரபு பண்ருட்டி அனைத்து மகளிர் காவல் நிலையம் சென்று ஆய்வாளர் வனஜாவிடம், 'என் மனைவி கொடுத்த புகாரின் மீது ஏன் நடவடிக்கை எடுக்கவில்லை என்று கேட்டதற்கு அவரையும் தரைக்குறைவாக பேசி அவர் மீதே வழக்கு போடுவேன் என்று மிரட்டினார் வனஜா.


இதில் வாக்குவாதம் ஏற்பட இருவரும் ஒருவருக்கொருவர் ஒருமையில் திட்டிக் கொண்டனர். அவ்வாறு இருவரும் வாக்குவாதம் செய்வதும், திட்டிக் கொள்வதும் வீடியோ எடுக்கப்பட்டு அது சமூக வலைத்தளங்களில் வைரலாக பரவியது. 


இந்த நிலையில் காவல் ஆய்வாளர் வனஜாவை ஆயுதப்படைக்கு மாற்றி விழுப்புரம் சரக டி.ஐ.ஜி சந்தோஷ்குமார் உத்தரவிட்டுள்ளார்.


Popular posts from this blog

பஞ்சாயத்து தலைவருக்கு எவ்வளவு சம்பளம் தெரியுமாகோடிகள், புரளும் (ஊராட்சிகளில் ஊழல் நடப்பது எப்படி....

மன்னிப்பு கேட்கிறவன் மனுஷன்.. மன்னிக்க தெரிஞ்சவன் பெரிய மனுஷன்.... இந்த விவகாரத்தில் யோகிபாபு பெரிய மனுஷன் தான்..!

நோன்பு சட்டதிட்டங்கள்-(ஷாபியீ, ஹனபி)