ஓசூரில் போடிச்சம்பள்ளி பஞ்சாயத்து தலைவி கணவரின் லீலைகள்..

கிருஷ்ணகிரி மாவட்டம் கெலமங்கலம் ஒன்றியத்திற்கு உட்பட்ட பஞ்சாயத்து தான் போடிச்சம்பள்ளி.


கடந்த உள்ளாட்சி தேர்தலில் ஆஞ்சி என்பவருடைய மனைவி அம்பிகா போட்டியிட்டு வெற்றி பெற்று தலைவரானார். இவர் வெற்றிக்கு பின்புலமாக பலருடைய பணம்தான் இருந்துள்ளது என்பது அச்சிரியப்படுவதிற்கில்லை.


சாதராண பஞ்சாயத்து தலைவரின் செய்தியைவெளியிடுகிறதா என படிப்பவர்கள் ஆச்சிரியப் படலாம். -இங்கே தான் ட்விஸ்ட் உள்ளது. இந்த பஞ்சாயத்து தலைவரின் கணவர் ஆஞ்சியின் மோசடி லீலைகள்தான் பகிரங்கமானவை.


உள்ளாட்சி தேர்தலுக்கு முன்பு இந்த லீலை மன்னன் ஆஞ்சி, கெலம்ங்கலத்தில் வீரபத்ரா பிரமோட்டர் லிமிடெட் கம்பெனி ஒன்றை ஆரம்பித்தார். இதன் சித்துவேலை என்னவெனில் யாரெல்லாம் முதலீடு செய்யாவர்களோ, அவர்களுக்கு தினமும் 2 ஆயிரம், 3000 என வரி பிடித்தம் போக வங்கிக் கணக்கிற்கு அனுப்பிவிடுவதோடு, முதலீடு தொகையில் குறிபிட்ட தொகை இரட்டிப்பு மடங்கு இலாபம் தருவதாக கூறப்பட்டு ஆட்கள் சேர்க்கப்பட்டதாம்.


அதன்படி கிருஷ்ணகிரி, தருமபுரி மாவட்டம் முழுவதும் இந்த ஆஞ்சி நம்பி பல பேர் ஏஜெண்டுகளாக சேர்ந்தனர். ஏஜெண்டுக ளுக்கு கூடுதல் கமிசன் வேறு.


இப்படி ஆசைவார்த்தைகள் கூறிய ஆஞ்சி ,இருமடங்கு பணம் தருகிறேன் என்று கூறி லட்சக்கணக்கில் பணத்தை வசூலித்தார்.


உள்ளாட்சி தேர்தலில் மக்கள் பணத்தை வைத்து உள்ளாசமாக இருந்து தனது மனைவி அம்பிகாவை வெற்றி பற வைத்த ஆஞ்சி, தன் சுய ரூபத்தை காண்பிக்க ஆரம்பித்தார்.


இவர் பணம் வாங்கியவர்கள் பணத்தை திரும்பி கேட்க ஆரம்பித்தனர். இதில் தினமும் கெலமங்கலத்தில் உள்ள ஆஞ்சியின் அலுவலகத்தில் பணம் கொடுத்த வர்கள் குவியத் தொடங்கினர்.


கிருஷ்ணகிரி, வேப்பனப்பள்ளி, ஓசூர், கெலமங்கலம், தேன்கனிக்கோட்டை, தளி , இராயக்கோட்டை, தருமபுரி போன்ற பல பகுதிகளில் முதலீடு செய்தவர்கள் ஒவ்வொரு வருவராக கேட்க ஆரம்பித்தவுடன், யாரும் போலிஸில் புகார் அளித்துவிடக்கூடாது என்பதற்க்காக தனித் தனியே பதில் கூறி வந்துள்ளார். பொறுமையிழந்த மக்கள் காவல்துறையில் புகார் அளித்தனர்.


புகார் அளித்த நபர்களை தேடி தேடி சமாதானம் செய்ய முயற்சிக்கும் மோசடி லீலை மன்னன் ஆஞ்சி, யாருக்கும் இதுவரை யாருக்கும் பணத்தை திருப்பி தரவில்லை.இதுபற்றி ஆஞ்சியிடம் கேட்டபோது, "சார் யாருக்கும் நான் கொடுக்க வேண்டியதில்லை, அப்படி பணம் கேட்டால் அதை பார்த்துக் கொள் கிறன்" என்றார்.. சரி பெங்களூருவிலும், கோவையிலும் இதேப் போன்ற மக்களை ஏமாற்றி தருமடி வாங்கியுள்ளீர்களாமே என்று சூசகமாக கேட்டதற்கு "அப்படியெல்லாம் ஒன்று இல்லை " என்று பதிலளித்தர்.


ஆனால் இந்த லீலை மன்னன் ஆஞ்சி பல பெண்களிடமும் தனது கைவரிசையை காட்டியுள்ளார். இதன்படி ரூபேஷ் என்பவர் மூலமாக பலரிடம் பணம் பெற்றுள்ளார்.


ரூபேசும் கெலமங்கலம் காவல்நிலையத்தில் புகார் அளிக்க ஆஞ்சி விசாரணை வலையில் சிக்கியுள்ளார். இது போன்ற மோசடி நபர்களை காவல் துறையினர் விசாரித்து, இவர்களது சொத்துக்களை முடக்க வேண்டும் என பொது மக்கள் கோரிக்கை வைத்து வருகின்றனர். 


Popular posts from this blog

பஞ்சாயத்து தலைவருக்கு எவ்வளவு சம்பளம் தெரியுமாகோடிகள், புரளும் (ஊராட்சிகளில் ஊழல் நடப்பது எப்படி....

மன்னிப்பு கேட்கிறவன் மனுஷன்.. மன்னிக்க தெரிஞ்சவன் பெரிய மனுஷன்.... இந்த விவகாரத்தில் யோகிபாபு பெரிய மனுஷன் தான்..!

காவலர்கள் மீது எடுக்கப்பட்ட நடவடிக்கை போதுமானதா என்ற கேள்வி எழுகிறது.?கொதிக்கும் சமூகம்