EX அ.தி.மு.க எம்.பி குற்றவாளி” - லஞ்ச வழக்கில் சிறப்பு நீதிமன்றம் அதிரடி தீர்ப்பு!

அ.தி.மு.க முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் கே.என்.ராமச்சந்திரன் குற்றவாளி என்று சென்னை சிறப்பு நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.


கடந்த 2014 முதல் 2019 வரை ஸ்ரீபெரும்புதூர் மக்களவைத் தொகுதி அ.தி.மு.க உறுப்பினராக இருந்த கே.என்.ராமச்சந்திரன், கண்ணம்மாள் கல்வி அறக்கட்டளையின் அறங்காவலராக உள்ளார்.


அந்த அறக்கட்டளையின் கீழ் இயங்கும் சக்தி மாரியம்மன் பொறியியல் கல்லூரியை விரிவாக்கம் செய்ய சென்ட்ரல் பேங்க் ஆஃப் இந்தியாவில் கடன் பெற ராமசந்திரன் விண்ணப்பித்துள்ளார்.


அப்போது, விண்ணப்பத்தை பரிசீலிக்க, அறக்கட்டளையிடமிருந்து தானும் குடும்பத்தாரும் அமெரிக்கா சென்று வர விமான கட்டணம் 2 லட்சத்து 69 ஆயிரம் ரூபாயை லஞ்சமாகப் பெற்ற மேலாளர் தியாகராஜன், 20 கோடி ரூபாய் கடன் கொடுத்ததாக குற்றச்சாட்டு எழுந்தது.


"முன்னாள் அ.தி.மு.க எம்.பி குற்றவாளி” - லஞ்ச வழக்கில் சிறப்பு நீதிமன்றம் அதிரடி தீர்ப்பு!
இதுதொடர்பாக, வங்கி மேலாளர் தியாகராஜன், கல்லூரி தலைவர் ராஜசேகரன் (ராமச்சந்திரன் மகன்), அறக்கட்டளை நிர்வாகியாக இருந்த ராமச்சந்திரன், அறக்கட்டளை ஆகியோர் மீது 2015ம் ஆண்டில் சி.பி.ஐ வழக்குப் பதிவு செய்தது.


இந்த வழக்கை சென்னை மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில் உள்ள எம்.பி. - எம்.எல்.ஏ. மீதான வழக்குகளை விசாரிக்கும் சிறப்பு நீதிமன்ற நீதிபதி டி.லிங்கேஸ்வரன் விசாரித்தார்.


அனைத்து விசாரணையும் முடிவடைந்த நிலையில் தீர்ப்பை வழங்கிய நீதிபதி லிங்கேஸ்வரன் வங்கி மேலாளர் தியாகராஜன், ராஜசேகர், முன்னாள் அ.தி.மு.க எம்.பி., ராமச்சந்திரன் ஆகியோர் குற்றவாளிகள் எனத் தீர்ப்பு வழங்கியுள்ளார்.


Popular posts from this blog

பஞ்சாயத்து தலைவருக்கு எவ்வளவு சம்பளம் தெரியுமாகோடிகள், புரளும் (ஊராட்சிகளில் ஊழல் நடப்பது எப்படி....

மன்னிப்பு கேட்கிறவன் மனுஷன்.. மன்னிக்க தெரிஞ்சவன் பெரிய மனுஷன்.... இந்த விவகாரத்தில் யோகிபாபு பெரிய மனுஷன் தான்..!

காவலர்கள் மீது எடுக்கப்பட்ட நடவடிக்கை போதுமானதா என்ற கேள்வி எழுகிறது.?கொதிக்கும் சமூகம்