உலகம் அதிகரிக்கும் உயிரிழப்பு... அச்சத்தில் அமெரிக்கா...

அமெரிக்காவில் கொரோனா நோய்த் தொற்றால் ஒரு லட்சத்திற்கும் அதிகமானோர் பாதிக்கப்பட்டிருக்கும் நிலையில் ஒரே நாளில் 400க்கும் மேற்பட்டவர்கள் உயிரிழந்துள்ளதால், அந்நாட்டு மக்கள் அச்சத்தில் ஆழ்ந்துள்ளனர்.


சீனாவின் வூகான் நகரில் கடந்த ஆண்டின் இறுதியில் பரவிய கொரோனா வைரஸ் அந்நாட்டின் நேரெதிர் திசையிலுள்ள அமெரிக்காவை 3 மாதங்களில் தாக்கியுள்ளது. ஆனால் சீனாவைவிட அமெரிக்காவில் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை உயர்ந்துள்ளது.


அமெரிக்காவே கொரோனா தாக்கத்தின் மையப்புள்ளியாக மாறும் என உலக சுகாதார அமைப்பு கடந்த வாரம் எச்சரித்திருந்தது. அதைப் போலவே அந்நாட்டில் மட்டும் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை ஒரு லட்சத்தைத் தாண்டியுள்ளது.


மேலும் புதிதாக 18 ஆயிரம் பேர் நோய்த் தொற்றால் பாதிக்கப்பட்டுள்ள நிலையில், 400 க்கும் மேற்பட்டோர் ஒரே நாளில் தொற்று நோய்க்கு பலியாகினர்.


இதையடுத்து அமெரிக்காவில் கொரோனாவுக்கு மரணித்தவர்களின் எண்ணிக்கை ஆயிரத்து 700ஐ நெருங்கியுள்ளது. நாடு முழுவதும் 6 லட்சத்து 85 ஆயிரம் பேருக்கு கொரோனா சோதனை செய்யப்பட்டுள்ளதாக துணை அதிபர் மைக் பென்ஸ் தெரிவித்துள்ளார்.


இந்த நிலையில் அமெரிக்காவின் விமானம் தாங்கிக் கப்பலான யுஎஸ்எஸ் தியோடர் ரூஸ்வெல்ட் கப்பலில் உள்ள 25 வீரர்களுக்கு நோய்த்தொற்று இருப்பது உறுதியாகியுள்ளது.


இந்த வாரத் தொடக்கத்தில் அந்தப் போர்க்கப்பலில் இருந்த மூன்று வீரர்களுக்கு கொரோனா நோய்த் தொற்று உறுதி செய்யப்பட்டதையடுத்து அவர்கள் உடனடியாக வெளியேற்றப்பட்டு சிகிச்சைக்கு அனுப்பப்பட்டனர்.


இதைத் தொடர்ந்து தற்போது மேலும் 23 வீரர்களுக்கு நோய்த் தொற்று இருப்பது தெரிய வந்துள்ளது. இந்தக் கப்பலில் 5 ஆயிரத்துக்கும் அதிகமான வீரர்கள் உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.


பல்வேறு மீட்புப் பணிகளில் ஈடுபட்டிருந்த 200க்கும் அதிகமான நியூயார்க் நகர தீயணைப்பு வீரர்களுக்கும் நோய்த் தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. 


Popular posts from this blog

பஞ்சாயத்து தலைவருக்கு எவ்வளவு சம்பளம் தெரியுமாகோடிகள், புரளும் (ஊராட்சிகளில் ஊழல் நடப்பது எப்படி....

மன்னிப்பு கேட்கிறவன் மனுஷன்.. மன்னிக்க தெரிஞ்சவன் பெரிய மனுஷன்.... இந்த விவகாரத்தில் யோகிபாபு பெரிய மனுஷன் தான்..!

காவலர்கள் மீது எடுக்கப்பட்ட நடவடிக்கை போதுமானதா என்ற கேள்வி எழுகிறது.?கொதிக்கும் சமூகம்