வீட்டை எப்படியெல்லாம் சுத்தமாக வைத்துக்கொள்ளலாம்..

உங்களை சுத்தமாக வைத்துக்கொள்வது எவ்வளவு அவசியமோ அதே அளவு வீட்டையும் சுத்தமாக வைத்துக்கொள்வது அவசியம்.


கொரோனா அச்சுறுத்தல் காரணமாக சுத்தம் குறித்து விழிப்புணர்வு செய்துவரும் நிலையில் வீட்டை எப்படி சுத்தமாக வைத்துக் கொள்வது என்று பார்க்கலாம்.


வீட்டில் பாத்திரம் கழுவும் தொட்டி மற்றும் ஸ்பாஞ்சுகளை சுத்தம் செய்தபின் பாத்திரங்களைக் கழுவவும். ஆய்வுகளிலும் ஸ்பாஞ்சுகள் கிருமிகளின் இருப்பிடம் என்று கூறப்பட்டுள்ளது. எனவே பயன்படுத்தும் முன் வெந்நீரில் முக்கிக் கழுவிய பின் பயன்படுத்தவும்.


வீட்டில் கிச்சனில் பயன்படுத்தும் மைக்ரோவேவ் அவன், கெட்டில், காஃபி மிஷின், கிட்சன் ஷெல்ஃப் என அனைத்தையும் சுத்தமாக வைத்துக்கொள்ளுங்கள்.


வாஷிங் மிஷினை அவ்வப்போது சுத்தம் செய்து தூய்மையாக வைத்துக்கொள்வது அவசியம். துணிகளை மினிஷில் போடும் முன் ஒருமுறை துணிகளின்றி குவிக் வாஷ் மோடில் சுற்றவிட்டு பின் துணிகளை போடுங்கள்.


வீட்டில் ரிமோட் கண்ட்ரோல்கள் , கபோர்ட், மேக்அப் கிட்டுகள் என கண்களுக்கே தெரியாமல் சூழ்ந்திருக்கும் கிருமிகளை இனியும் கண்டுகொள்ளாமல் இருக்காதீர்கள்.


மூலைமுடுக்களில் தேவையற்ற தூசு, குப்பைகளை சேர விடாமல் பார்த்துக்கொள்ளுங்கள்.


சமைக்க பாத்திரத்தைப் பயன்படுத்தும் முன் வெந்நீரில் அலசிவிட்டுப் பயன்படுத்துவது நல்லது.


வீட்டில் குப்பைத் தொட்டிகளில் குப்பை சேர விடாமல் பார்த்துக்கொள்ளுங்கள்.


சோபா, கட்டில் மெத்தை ஆகியவற்றை தூசுகளின்றி பார்த்துக்கொள்ளுங்கள். வேக்யூம் கிளீனர் இருந்தால் அதைப் பயன்படுத்தி சுத்தம் செய்வது நல்லது.


உணவருந்தும் டைனிங் டேபிளை துடைத்து தூய்மையாக வைத்துக்கொள்ளுதல் அவசியம்.


ஃபிரிட்ஜையும் சுத்தமாக துடைத்துவிட்டுப் பயன்படுத்துங்கள். உணவுப் பொருட்களை  பை, டப்பாக்களில் அடைத்து வையுங்கள். நேரடியாக வைக்காதீர்கள். முடிந்தவரை உணவுப் பொருட்களை ஃபிரிட்ஜில் வைக்காமல் சாப்பிடுவது நல்லது.


Popular posts from this blog

பஞ்சாயத்து தலைவருக்கு எவ்வளவு சம்பளம் தெரியுமாகோடிகள், புரளும் (ஊராட்சிகளில் ஊழல் நடப்பது எப்படி....

மன்னிப்பு கேட்கிறவன் மனுஷன்.. மன்னிக்க தெரிஞ்சவன் பெரிய மனுஷன்.... இந்த விவகாரத்தில் யோகிபாபு பெரிய மனுஷன் தான்..!

காவலர்கள் மீது எடுக்கப்பட்ட நடவடிக்கை போதுமானதா என்ற கேள்வி எழுகிறது.?கொதிக்கும் சமூகம்