லஞ்சம் கொடுப்பவருக்கே பசுமை வீடு... இது காட்பாடி BDO-வின் நிலைபாடு...

நம் நாட்டில் வீடு இல்லாத ஏழை மக்கள் பயன் பெறும் வகையில் மத்திய அரசு பிரதமர் வீடு வழங்கும் திட்டத்தின் கீழ் ஒரு லட்சத்து ஏழுபத்தி ஐந்தாயிரமும், மாநில அரசு பசுமை வீடு வழங்கும் திட்டத்தின் கீழ் இரண்டு லட்சத்து இருபத்தி ஐந்தாயிரமும் வழங்குகிறது.


இத்திட்டத்தில் வீடு இல்லாத ஏழைகளை பயனாளர்களாக தேர்வு செய்ய வேண்டும். ஆனால் லஞ்சம் கொடுப்பவர்களுக்கே பசுமைவீடு ஒதுக்கப்படுவதாக காட்பாடி பகுதி மக்கள் தெரிவிக்கின்றனர்.


வேலூர் மாவட்டம், காட்பாடி வட்டம்,கல்புத்தூர் என்ற பகுதியில் அமைந்துள்ளது. காட்பாடி ஊராட்சி ஒன்றிய அலுவலகம். இங்கு அரக்கோணத்தை சேர்ந்த சாந்தி என்பவர் ரெகுலர் BDO வாகவும், பானுமதி என்பவர் ஸ்கீம் BDO வாகவும், சசிகலா என்பவர் ஜெரனல் BDO வாகவும் பணிபுரிந்து வருகிறனர்.


இப்பகுதியில் எந்த ஒரு திட்டம் செயல்படுத்த வேண்டும் என்றாலும், இந்த முப்பெரும் தேவிகளுக்கு கவனிக்க வேண்டியதை கவனித்தால் மட்டுமே திட்டம் உடனே நிறைவேற்றப்படுகிறதாம். கமிஷன் பிரிப்பதில் இம்மூவருக்குமே, ஒருவருகொருவர் ஏழாம் பொருத்துமாம். மானிய விலையில் ஏழைகளுக்கு வீடு கட்ட வழங்கும் சிமென்டில் பெரும் உழல் நடைபெறுகிறதாம்.


உண்மையான ஏழைகளுக்கு சிமென்ட் வழங்காமல் அரசியல்வாதிகளுக்கும், வசதி படைத்தவர்களுக்கும் கமிஷன் பெற்று கொண்டு எவ்வளவு சிமென்ட் வேண்டு மானலும் வழங்கப்படுகின்றதாம்.


மேலும் ஏழைகளுக்கு பசுமை வீடு கட்ட அனுமதி வழங்க ஒரு தொகை BDO-வின் நிலைபாடு... கேட்கப்படுகிறதாம். லஞ்சம் கொடுக்க இயலாத ஏழைகளின் மனு BPL மற்றும் PIP பட்டியலில் உங்கள் பெயர் இல்லை என்றும் மகளிர் குழுவின் மூலமாக PIP பட்டியலில் பெயர் சேர்க்க ஒரு தொகை வேண்டும் என்றும் பின்னர் ஆன்லைனில் உங்கள் பெயர் PIP பட்டியலில் இடம் பெறவில்லை என்றும் நிராகரிப்படுகிறதாம்.


அதே வேலையில் அரசியல்வாதிகளின் பரிந்துரையில் வரும் நபர்களுக்கும், வசதி படைத்த நபர்களுக்கும் BPL மற்றும PIP பட்டியலில் பட்டியலில் பெயர் இல்லை என்றால் கூட கமிஷன் பெற்றுக் கொண்டு எந்த வித விதிமுறைகளும் பின்பற்றமால் உடனே அனுமதி அளிக்கப்படுகிறதாம்.


மேலும் ரெகுலர் BDO சாந்தி தினமும் அரக்கோணத்தில் இருந்து காட்பாடிக்கு இரயில் வந்து செல்கிறாரம். காலை 11.30 மணிக்கு மேல் வந்து மாலை 4.00 மணிக்கே சென்று விடுகிறாரம். வரும் பொழுதே பொதுமக்கள், சகா ஊழியர்கள் என அனைவரிடமும் ஒருமையிலே பேசுகிறாரம்,


மேலும் இவர் ஜீலையில் ஒய்வு பெற உள்ளதாகவும், அதற்குள் ஒரு தொகை பார்த்து விட வேண்டும் என்ற எண்ணத்தில் தீவீரமாக உள்ளாராம். இவருக்கான கமிஷன் பங்கு காடபாடி இரயில் நிலையத்திற்க வந்து கிராம ஊராட்சி செயலாளர்கள் செட்டில் செய்கிறார்களாம்.


மேலும் ஸ்கீம் BDO பானுமதியோ வீட்டுமனைகள் அனுமதி வழங்கவும், பயனாளிகளுக்கு சிமென்ட் வழங்குவதிலும் ஒரு பெரிய தொகை பார்த்து விடுகிறாராம். ஜெரனல DUO என்ற முறையில் சசிகலாவின் கமிஷன் செட்டில் செய்யப்படுகிறதாம். இம்மூவரின் பின்புலங்களை ஆராய்ந்தால் இவர்களின் ஆபார வளர்ச்சி தெரியும் என்கிறார்கள். 


எனவே காட்பாடி ஊராட்சி ஒன்றியத்தில் இதுவரை பசுமை வீடு கட்ட அனுமதி பெற்றவர்களின் பட்டியல் மற்றும் சிமென்ட் பெற்றவர்களின் பட்டியல்களை ஆராய்ந்தாலே இது தெரியும் என்கிறார்கள் பாதிக்கப்பட்ட பொதுமக்கள். ஏழை பயனாளிகளுக்கு பசுமை வீடு கிடைக்க சம்மந்தப்பட்ட துறை சார்ந்த அதிகாரிகள் செய்வார்களா?