கோவையில் புகார் அளிக்க வந்த இளைஞரைத் தாக்கிய பெண் ஏட்டு: மனித உரிமை ஆணையம் நோட்டீஸ்

கோவையில் காவல் நிலையத்துக்குப் புகார் அளிக்க வந்த இளைஞரை லஞ்சம் கேட்டு பெண் தாக்கினார். இதுகுறித்து கோவை காவல்துறை கண்காணிப்பாளர் விரிவான அறிக்கை தாக்கல் செய்ய மாநில உத்தரவிட்டுள்ளது.


கோவை மாவட்டம் பேரூர் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் தலைமைக் காவலராகப் பணியாற்றியவர் கிருஷ்ணவேணி. இவர் புகார் அளிக்க வருபவர்களிடம் லஞ்சம் கேட்டு மிரட்டுவதாகவும், லஞ்சம் கொடுக்கவில்லை என்றால் அவர்கள் மீது நடத்துவதாகவும் புகார் எழுந்தது.


இந்நிலையில் புகார் அளிக்க வந்த இளைஞர் ஒருவர் லஞ்சம் அளிக்க மறுத்தார். இதனால் கிருஷ்ணவேணி, அவரின் சட்டையப் பிடித்து பளார் என கன்னத்தில் அடிக்கும் காணொலி சமூக வலைதளங்களில் வைரலானது.


இதனிடையே இந்தச் சம்பவம் தொடர்பாக இளைஞரைத் தாக்கிய கிருஷ்ணவேணி சஸ்பெண்ட் செய்யப்பட்டார். இது தொடர்பான செய்தி நாளிதழ்களில் வெளியானது. அந்தச் செய்தியின் அடிப்படையில் மாநில தாமாக முன் வந்து வழக்கை விசாரணைக்கு எடுத்தது.


இந்த வழக்கை விசாரித்த நீதித்துறை நடுவர் சித்தரஞ்சன் மோகன்தாஸ், காவல் நிலையத்தில் புகார் அளிக்க வருபவர்களிடம் லஞ்சம் கேட்டு பெண் நடத்தியது குறித்து கோவை மாவட்டக் காவல்துறை கண்காணிப்பாளர் இரண்டு வாரத்தில் விரிவான அறிக்கை தாக்கல் செய்ய உத்தரவிட்டுள்ளார்.