இந்தியாவில் கொரோனாவை எதிர்கொள்ள ரிலையன்ஸ் ஜியோ மேற்கொண்டுள்ள சிறப்பு முயற்சிகள்!

இந்தியாவில் கொரோனா வைரஸ் தாக்கத்தை எதிர்கொள்ள ரிலையன்ஸ் ஜியோ சில சிறப்பு முயற்சிகளை தொழில்நுட்ப ரீதியாகவும் மருத்துவ ரீதியாகவும் மேற்கொண்டுள்ளது.


இன்றைய சூழலில் கொரோனா வைரஸ் பரவலைக் கட்டுப்படுத்த பலரும் வீட்டிலிருந்து பணி செய்ய வேண்டியாதாய் உள்ளது. இத்தகைய வேளையில் இணைய சேவையின் அத்தியாவசத்தை உணர்ந்து ரிலையன்ஸ் ஜியோ சில அதிரடி ஆஃபர்களை அறிவித்துள்ளது.


ப்ராட்பேண்ட் வரிசையில் 699 ரூபாய்க்கு 100Mbps வேகத்தில் 150 ஜிபி வழங்கப்படும். இதில் 50 ஜிபி என்பது கூடுதல் போனஸ் ஆறு மாதங்களுக்கான கூடுதல் வேலிடிட்டி உடன் கொடுக்கப்படுகிறது.


அடுத்ததாக 849 ரூபாய்க்கு 100Mbps வேகத்தில் மொத்தம் 400 ஜிபி, இதில் 200 ஜிபி போனஸ் ஆக அடுத்த ஆறு மாதங்களுக்குக் கிடைக்கும்.


அடுத்ததாக 1,299 ரூபாய்க்கு 250Mbps வேகத்தில் மொத்தம் 500 ஜிபி வழங்கப்படும். இதிலும் 250 ஜிபி உங்களுக்காக போனஸ் ஆகவே வழங்கப்பட்டுள்ளது. இதற்கடுத்த 2,499 ரூபாய் திட்டத்தின் கீழ் 1,250 ஜிபி டேட்டா வழங்கப்படும். இதனுள் உள்ள 250 ஜிபி டேட்டா உங்களுக்கான கூடுதல் பயன்.


இதேபோல் ஜியோ ஃபைபர் இன்னும் கூடுதல் சலுகைகளைக் கொண்டுள்ளது. ஜியோ ஃபைபர் வாடிக்கையாளர்களுக்கு ஒரு திரைப்படத்தின் முதல் நாள் முதல் காட்சி அனுபவம் வீட்டிலிருந்தே கிடைக்கும்.


கூடுதலாக சிறப்பு விளையாட்டு நிகழ்வுகளையும் நேரடியாகக் காண முடியும். இதில் குறைந்தபட்சமாக 3,999 ரூபாய்க்கான ப்ளான் உள்ளது. 1Gbps வேகத்தில் மாதத்துக்கு 2,500 ஜிபி டேட்டா வழங்கப்படும். அதிகப்பட்ச ப்ளான் ஆக 8,499 ரூபாய் ப்ளான் உள்ளது. இது 1Gbps வேகத்துடன் மாதம் 5,000 ஜிபி டேட்டா கிடைக்கும்.


ஜியோ ஃபைபரின் அனைத்து ப்ளான்களுக்கும் ஹாட்ஸ்டார், சோனி லைவ், ஜீ5, சன்நெக்ஸ்ட், வூட் மற்றும் ஜியோ சினிமா ஆகிய தளங்களுக்கான சந்தா இலவசமாகவே கிடைக்கும். இதிலேயே மாத கட்டண முறைகள் இன்றி ஆண்டு சந்தா போன்ற ஆப்ஷன்களைத் தேர்ந்தெடுத்தால் இன்னும் பல ஆஃபர்கள் உள்ளன.


ஜியோ மொபைல்:


வீட்டிலிருந்து பணியாற்றுவதால் மொபைல் டேட்டா சேவை தீர்ந்துவிடுவதற்கான சாத்தியக் கூறுகள் அதிகம். இதற்காக 4ஜி டேட்டா கூப்பன்களை ரிலையன்ஸ் ஜியோ அறிவித்துள்ளது.


இந்தக் கூப்பன்கள் 11 ரூபாய், 21 ரூபாய், 51 ரூபாய், 101 ரூபாய் என நான்கு ப்ளான்களில் உள்ளது. ஃப்ரீபெய்டு ப்ளான்கள் எது பயன்படுத்தினாலும் இதை இணைப்பாக எடுத்துக்கொள்ளலாம்.


11 ரூபாய் கூடுதல் கூப்பன் பெற்றால் 800MB 4ஜி டேட்டா மற்றும் கூடுதல் 75 நிமிடங்களுக்கான டாக் டைம் கிடைக்கும். 21 ரூபாய் கூடுதல் கூப்பனுக்கு 2ஜிபி-க்கான 4ஜி டேட்டா மற்றும் கூடுதல் 200 நிமிடங்களுக்கான டாக் டைம் கிடைக்கும். 51 ரூபாய்க்கு 6ஜிபி டேட்டா மற்றும் 500 நிமிடங்களுக்கான கூடுதல் டாக் டைம் வழங்கப்படும். 101 ரூபாய்க்கு 12 ஜிபி கூடுதல் டேட்டா மற்ற்ய்ம் 1,000 கூடுதல் நிமிடங்களுக்கான டாக் டைம் கிடைக்கும்.


வீட்டிலிருந்து பணி:


இதனுடன் தொலைதொடர்பு சேவைகளில் புதிதாக Work From Home plan அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. 251 ரூபாய்க்கு 51 நாட்களுக்கான வேலிடிட்டி உடன் தினமும் 2ஜிபி டேட்டா வழங்கப்படும். இது இணைய சேவைக்கு மட்டும் என்பதால் டாக்டைம் வசதிகள் ஏதும் கிடையாது.


ஒரு நாளுக்கு வழங்கப்படும் 2ஜிபி டேட்டா முடிவடைந்துவிட்டால் தொடர்ந்து பயனாளர்களுக்கு இணைய சேவை 64kbps வேகத்தில் வழங்கப்படும். இதற்கு எவ்வித டேட்டா எல்லையும் கிடையாது.


ஜியோ மைக்ரோசாஃப் நிறுவனத்துடன் கூட்டணி அமைத்துள்ளது. இதன் மூலம் தனி நபர்கள், மாணவர்கள், கல்வி மற்றும் மருத்துவ மையங்களைச் சார்ந்தோர் ஆன்லைன் மூலம் தங்களது பணிகளைத் தனித்து இருந்து மேற்கொள்ள முடியும்.


Healthcare at Home திட்டம் மூலம் ஒருவர் தன் வீட்டிலிருந்தே கொரோனா தொடர்பான பரிசோதனைகளை மேற்கொள்ள முடியும். இதன் மூலம் மருத்துவமனைகளில் தேவையில்லாமல் கூட்டம் சேருவது குறையும்.


இக்கட்டான நிலையில் பணியாற்றும் மருத்துவர்களின் வேலைப் பளுவையும் இது குறைக்கும். கூடுதலாக, கொரோனா குறித்த உடனுக்குடன் தகவல்களும் சரியான, நேர்மறையான முறைகளில் இடம்பெற்றிருக்கும்.


ரிலையன்ஸ் நிறுவனத்தில் Jio Haptik தொழில்நுட்பம்தான் இந்திய அரசின் வாட்ஸ்அப் உதவி சேவைக்குத் துணை புரிந்து வருகிறது.


இதன் மூலம் தான் அரசின் 'MyGov Corona Helpdesk' செயல்படுகிறது. மக்கள் கொரோனா வைரஸ் குறித்த அதிகாரப்பூர்வ சந்தேகங்களை இதன் மூலம் நிவர்த்தி செய்துகொள்ளலாம். அரசின் வேண்டுகோளுக்கு இணங்க Jio Haptik சேவை முற்றிலும் அரசின் தேவைக்கு ஏற்ப உடனுக்குடனான அப்டேட்களுடன் இலவசமாக வடிவமைக்கப்பட்டு வழங்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது


Popular posts from this blog

பஞ்சாயத்து தலைவருக்கு எவ்வளவு சம்பளம் தெரியுமாகோடிகள், புரளும் (ஊராட்சிகளில் ஊழல் நடப்பது எப்படி....

மன்னிப்பு கேட்கிறவன் மனுஷன்.. மன்னிக்க தெரிஞ்சவன் பெரிய மனுஷன்.... இந்த விவகாரத்தில் யோகிபாபு பெரிய மனுஷன் தான்..!

காவலர்கள் மீது எடுக்கப்பட்ட நடவடிக்கை போதுமானதா என்ற கேள்வி எழுகிறது.?கொதிக்கும் சமூகம்