லாக்டவுனை மீறி வெளியே வந்தால், கடும் நடவடிக்கை.. மத்திய அரசு அதிரடி வார்னிங்!

டெல்லி: தமிழகத்தில் சென்னை, காஞ்சிபுரம், ஈரோடு ஆகிய மூன்று மாவட்டங்கள் உட்பட நாடு முழுவதும் 75 மாவட்டங்களை தனிமைப்படுத்த மத்திய அரசு ஏற்கனவே பரிந்துரை செய்திருக்கிறது. இந்த ஊரடங்கை கடுமையாக கடைபிடிக்க வேண்டும் என்று மத்திய அரசு அறிவுரை வழங்கி இருக்கிறது.


முன்னதாக, விதிமுறைகளை மக்கள் முறையாக கடைபிடிக்கவில்லை என்று பிரதமர் நரேந்திர மோடி கவலை தெரிவித்திருந்தார். அதனை தொடர்ந்து இந்த அறிவுரை வெளியாகியிருக்கிறது


தமிழக சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் இன்று வெளியிட்ட ட்வீட்டில், சிலர் இந்த வைரசை சீரியசாக எடுத்துக்கொள்ளவில்லை என்றும் அரசு கொடுக்க கூடிய நெறிமுறைகளை அவர்கள் முழுமையாக பின்பற்றவில்லை என்றும் தெரிவித்து இருந்தார்.


அதனை தொடர்ந்து தற்போது மத்திய உள்துறை அமைச்சகத்தின் சார்பில், இப்படி ஒரு அறிக்கை மாநில அரசுகளுக்கு அனுப்பப்பட்டுள்ளது. ஊரடங்கை மீறுவோர் மீது கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று, அறிவுறுத்தல் கொடுக்கப்பட்டுள்ளது.


அதேபோல குவாரன்டைன் என்று சொல்லப்படக்கூடிய தனிமைப்படுத்தப்பட்டு இருக்கக்கூடிய நபர்கள், தனிமைப் படுத்தப்பட வேண்டும் என்று சொல்லி தனிமைப்படுத்தப்பட்ட நபர்கள் அனைவரும் அவர்கள் வீட்டின் உள்ளே இருப்பதை உறுதிப்படுத்த வேண்டும் என்றும், அவர்கள் அந்த விதிமுறைகளை மீறும் பட்சத்தில் அவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுங்கள் என்றும் அறிவுறுத்தல்கள் கொடுக்கப்பட்டிருக்கின்றது.
கொரோனா கண்காணிப்பு வளையத்தில் தமிழகம் முழுக்க 9424 பேர்..


நேற்றுஒரே நாளில் 400 பேர்
சில மாநில அரசுகள் ஊரடங்கை சரிவர செய்யாமல் இருந்தார்கள் என்றும் மத்திய உள்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.


ஒருவேளை, மக்கள் வீடுகளுக்குள் இருக்காமல், அரசு உத்தரவை மீறினால், ஊரடங்கு விவகாரத்தை நேரடியாக மத்திய அரசே கையில் எடுத்து, வெளியில் வரக்கூடிய மக்கள் மீது நடவடிக்கை எடுக்கவும் வாய்ப்பு உள்ளது.