கொரோனா: இந்தியாவில் உயிரிழப்பு 9 ஆக அதிகரிப்பு 

 


இந்தியாவில் கொரோனா பாதிப்பால் உயிரிழந்தோர் எண்ணிக்கை 9 ஆக அதிகரித்துள்ளது. கொரோனா பாதிப்புகள் 471 பேருக்கு உறுதி செய்யப்பட்டுள்ளது.


கொரோனா பாதிப்பில், கர்நாடகா, டெல்லி, பஞ்சாப், மகாராஷ்டிரா, குஜராத், பீகார் உள்ளிட்ட மாநிலங்களைச் சேர்ந்த 7 பேர் ஏற்கெனவே உயிரிழந்தனர். நேற்று மேலும் 2 பேர் கொரோனா பாதிப்பால் உயிரிழந்துள்ளனர்.


இவர்கள் இமாச்சலப்பிரதேசம், மேற்கு வங்கம் ஆகிய மாநிலங்களைச் சேர்ந்தவர்கள் ஆவர். இதன் மூலம் கொரோனாவால் உயிரிழந்தோர் எண்ணிக்கை 9 ஆக அதிகரித்துள்ளது என்று மத்திய சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.


+2 தேர்வுகள் காலை 10.30 மணிக்கு தொடங்கி 1.30 வரை நடைபெறும்


மேலும் நாடு முழுவதும் 471 பேருக்கு கொரோனா வைரஸ் பாதிப்பு உறுதி செய்யப்பட்டிருப்பதாக, இந்திய மருத்துவ ஆராய்ச்சிக் கவுன்சில் தெரிவித்துள்ளது. அதிகபட்சமாக மகாராஷ்டிராவில் வெளிநாட்டினர் உள்ளிட்ட‌74 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது.


“கட்டணம் இல்லாமல் பேருந்துகளை அதிகப்படுத்துங்கள்” - மு.க.ஸ்டாலின்


கேரளாவில் வெளிநாட்டினர் 7 பேர் உள்ளிட்ட 67 பேரும், கர்நாடகாவில் 33 பேரும் தெலங்கானாவில் 32 பேரும் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டிருப்பதாக மத்திய சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.


கொரோனா பரவுவதை தடுக்கும் நோக்கில் யூனியன் பிரதேசங்கள் மற்றும் மாநிலங்களில் 548 மாவட்டங்களில் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.


Popular posts from this blog

பஞ்சாயத்து தலைவருக்கு எவ்வளவு சம்பளம் தெரியுமாகோடிகள், புரளும் (ஊராட்சிகளில் ஊழல் நடப்பது எப்படி....

மன்னிப்பு கேட்கிறவன் மனுஷன்.. மன்னிக்க தெரிஞ்சவன் பெரிய மனுஷன்.... இந்த விவகாரத்தில் யோகிபாபு பெரிய மனுஷன் தான்..!

நோன்பு சட்டதிட்டங்கள்-(ஷாபியீ, ஹனபி)