பஞ்சமி நிலங்களை குறி வைக்கும் அதிமுக.. அதிர போகும் திமுக, சசிகலா!

சென்னை: திமுகவுக்கு எந்தெந்த வகைகளில் செக் வைத்து.. நெருக்கடி தரலாம் என்ற வியூகங்களை தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி மிக நாசூக்காக எடுத்து வருகிறார்!!!


இந்த 3 வருட தேர்தல்களில் எம்பி தேர்தலில் திமுகவின் மாஸ் வெற்றியை போல் அதிமுக சந்திக்கவில்லைதான்... ஆனால் இடைத்தேர்தல்களில் தொகுதிகளை வாரி சுருட்டியது..


அதுபோலவே உள்ளாட்சி தேர்தல்களிலும் டஃப் கொடுத்துதான் மேலே வந்தது.. வேலூர் தொகுதி தேர்தலில் கிட்டத்தட்ட சரிக்கு சரியான ஓட்டுக்களையே பெற்றது.


எப்படி பார்த்தாலும் எந்த இடைத்தேர்தலாக இருந்தாலும் ஆளும் தரப்பே அபார வெற்றி பெறும் என்பது பொதுவான கருத்து..


ஆனால் இதில் அதிமுக சுணங்கிதான் உள்ளது.. அதனால்தான் வரும் சட்டசபை தேர்தலை கணக்கில் வைத்து இப்போதே காய் நகர்த்த துவங்கிவிட்டதாம் கட்சி தலைமை.


இப்போதைக்கு மத்தியில் ஆளும் பாஜகவைவிட, இங்கிருக்கும் திமுகவை சமாளிப்பதும், எதிர்ப்பதும்தான் அவரது முதல் வேலையாக உள்ளது.


சமீபத்தில் திமுக 3 பேருக்கு ராஜ்ய சபா உறுப்பினர்களாக அறிவித்தது.. இதில் அந்த வேட்பாளர்கள் 3 பேருமே இன்னமும் அதிருப்திக்கு மத்தியில்தான் உள்ளனர்..


அதில் ஒருவர் அந்தியூர் செல்வராஜ்.. இவரை தேர்ந்தெடுப்பார்கள் என்று யாருமே எதிர்பார்க்கவில்லையாம்.. கொங்கு மண்டலத்தை பொறுத்தவரை எடப்பாடியாரின் சமூகத்தினர் ஏராளமானோர் உள்ளனர்.. இவர்கள்தான் அதிமுகவின் வாங்கு வங்கியை நிர்ணிப்பவர்கள்.


அதேபோல, இந்த சமூகத்துக்கு இணையாக இருப்பவர்கள் பட்டியலினத்தவர்கள்தான்..


அச்சமூக மக்களுக்கு ஒரு நம்பிக்கை தரவும், இதை வைத்து வரும் தேர்தலில் வாக்குகளை அள்ளவுமே அந்தியூர் செல்வராஜை முக ஸ்டாலின் முன்னிறுத்தி உள்ளதாக சொல்கிறார்கள்.
இந்த விஷயம்தான் எடப்பாடியாரை சிந்திக்க வைத்து வருகிறது..


காலங் காலங்கமாக அதிமுகவின் கோட்டையான கொங்கு மண்டலத்தில் ஒருபோதும் திமுகவை மேலோங்கி வர செய்துவிடக் கூடாது என்பதிலும் மிக தீவிரமாக இருக்கிறார்.. எ


பார்த்தாலும் தன் சமுதாய ஓட்டுக்கள் தானாகவே கிடைத்துவிடும் என்பது எடப்பாடியாரின் ஆழமான நம்பிக்கை.. அப்படியானால் பட்டியலின வாக்குகளை பெற என்ன செய்வது? ராஜ்ய சபா வேட்பாளரை திமுக நிறுத்தியதற்கு என்ன பதிலடி தருவது என்று கணக்கு போட்டு வருகிறார்.


அதன்படி ஒரு தகவலும் வெளியாகி உள்ளது... தமிழகம் முழுக்க உள்ள பஞ்சமி நிலங்களை மீட்பது குறித்து சட்டமன்றத்தில் முடிவெடுத்து...


அதை பரவலாக உள்ள பட்டியல் சமூக மக்களுக்கு வழங்க முடிவு செய்துள்ளாராம்....


மேலோட்டமாக பார்க்க இது வெறும் பஞ்சமி நிலம் என்றுதான் தோன்றினாலும் உள்ளுக்குள் ஒரு சின்ன அரசியலும் பொதிந்துள்ளது..


இந்த பஞ்சமி நிலத்தில் சிறுதாவூர பங்களாவும், முரசொலி அலுவலகமும் லிஸ்ட்டில் அடங்குமாம்.
அதாவது பஞ்சமி நிலங்களை மீட்டு மக்களுக்கு பரவலாக வழங்கி அதன்மூலம் பட்டியன மக்களிடையே மொத்த நன்மதிப்பையும் பெற்று, அதையே வாக்காக மாற்ற முடிவு செய்துள்ளாராம்..


அதேசமயம் முரசொலி அலுவலகம் மூலம் திமுகவுக்கும், சிறுவாதாவூர் பங்களா மூலம் சசிகலாவுக்கும் செக் வைக்கவும் போகிறாராம்!


ஏற்கனவே சிஏஏவுக்கு எதிரான தீர்மானத்தை இயற்ற முதல்வர் செய்துள்ளதாக கூறப்பட்ட நிலையில், அது எப்படியோ திமுகவுக்கு தலைவலியாகவே உருவெடுக்கும்.
அதுபோலவே முரசொலி அலுவலகத்திலும் கையை வைக்க நேர்ந்தால் இதனை திமுக எப்படி சமாளிக்கும்? அதற்கு எடப்பாடியார் எப்படி பதிலடி தருவார்? அப்படி பதிலடி தரும்போது டாக்டர் ராமதாஸின் ஒத்துழைப்பு எவ்வளவு இருக்கும் என்பதெல்லாம் போகபோகத்தான் நமக்கு தெரியும்.


Popular posts from this blog

பஞ்சாயத்து தலைவருக்கு எவ்வளவு சம்பளம் தெரியுமாகோடிகள், புரளும் (ஊராட்சிகளில் ஊழல் நடப்பது எப்படி....

FIR-ல் வெளியான அதிர்ச்சி-பற்கள் பிடுங்கப்பட்ட விவகாரத்தை சிபிசிஐடி விசாரணைக்கு மாற்றி டிஜிபி சைலேந்திரபாபு உத்தரவிட்டுள்ளார்.

சமூக வலைதள யூடியூபருக்கு, 1 லட்சம் அபராதம் கட்டிய உதவி ஆய்வாளர் இசக்கி ராஜா – மனித உரிமை ஆணையம் உத்தரவு