பிரேக் இன்ஸ்பெக்டர் சத்தியமூர்த்தி 'ஊழலுக்கு யார் பிரேக் போடுவது...

திருச்சி மாவட்டம் லால்குடியில் வட்டார போக்குவரத்து அலுவலகம் தனியார் இடத்தில் செயல்பட்டு வருகிறது. இங்குபிரேக் இன்ஸ்பெக்டராக செயல்படுபவர் சத்தியமூர்த்தி. இவர் கோவை மாவட்டம் சூலூரில் பல தில்லாலங்கடி வேலை செய்ததினால்தான் இலால்குடிக்கு தூக்கியடிக்கப்பட்டார் என்பது தான் ஹைலைட்டான விஷயம்.


இங்கு வந்து வேலை செய்ய ஆரம்பித்ததில் இருந்து தனது (வேலையை) கைவரிசையை காட்ட ஆரம்பித்து விட்டார். அரசிற்கு வருமானம் ஈட்டுவதில் அதிக அக்கறையோடு பிரேக் இன்ஸ்பெக்டர்கள் சுழன்று கொண்டிருக்கையில் இலால்குடி பிரேக் இன்ஸ்பெக்டர்சத்தியமூர்த்தி மட்டும் “ காசேதான் கடவுளடா” என பாட்டு பாடி வசூல் வேட்டையில் ஈடுபட்டு பணத்தை மட்டுமே சேர்க்கும் நோக்கத்தில் உள்ளார்.


சத்தியமூர்த்தி ஊழலை பெருக்குவதில் குறியாக உள்ளார். ஆர்.டி.ஓ துறை தனியார் மயமாகப் போகிறது. இப்போதே கொடுக்க வேண்டியதைக் கொடுத்து உனக்கு என்ன வேணுமோ, எடுக்க வேண்டியதை எடுத்துக்கோ என ஒவ்வொரு 2 பணிக்கும் அதிகபட்ச தொகையினை லஞ்சமாக நிர்ணயம் செய்து இவருக்கு வேண்டப்பட்ட ஓட்டுநர் பள்ளி நடத்தி வரும் ஒரு நிர்வாகியையும் (எல்காட்டையும்)புரோக்கராக வைத்து வசூல் மழையில் நனைந்து வருகிறார்.


திருச்சிக்கு வரும் வாகனம் எந்த கண்டிசனில் இருந்தாலும் பரவாயில்லை, பணத்தை கொடுத்தால் வேலை முடிந்தது என சான்றிதழ் கொடுத்து விடுவார். உதாரணமாக இவர் இலால்குடி வட்டார போக்குவரத்து அலுவலராக பொறுப்பு ஏற்ற சிலநாட்களில் திருச்சிக்கு வந்த 407 வேன் கண்டிஷன் இல்லாத நிலையில் பெறுவதை பெற்று கொண்டு வேலையை முடித்து கொடுத்து உள்ளார். இவர் வாங்கும் பணத்தை இவர் மட்டுமே வைத்து கொள்வது இல்லையாம். RTO, DTC என கச்சிதமாக பிரித்து தருவதாக கூறிவருகிறார்.


ஊழலின் உச்சத்தில் வலம்வரும் சத்தியமூர்த்தியை லஞ்ச ஒழிப்பு போலீஸ் கண்காணித்து பொறிவைத்து பிடித்தால் உண்மை நிலை வெளியே வரும். லஞ்சம் வாங்கும் அதிகாரிகள் லஞ்சப்பணத்தையும், பொருள்களையும் பெரும்பாலும் வீட்டில் பதுக்கி வைப்பது இல்லை . பணம், தங்கம், வெள்ளி என வங்கிகளின்லாக்கரில் வைத்து இருக்கலாம். பிரேக் இன்பெக்டர் சத்தியமூர்த்தியின் பெயரில் இருக்கும் லாக்கரை சோதனையிட்டால் எவ்வளவு பணம், தங்கம், வெள்ளி டெபாசிட் உள்ளது என தெரியவரும். லஞ்ச ஒழிப்பு போலீசார் விசாரணையை முடுக்கிவிடுவார்களா?


Popular posts from this blog

பஞ்சாயத்து தலைவருக்கு எவ்வளவு சம்பளம் தெரியுமாகோடிகள், புரளும் (ஊராட்சிகளில் ஊழல் நடப்பது எப்படி....

மன்னிப்பு கேட்கிறவன் மனுஷன்.. மன்னிக்க தெரிஞ்சவன் பெரிய மனுஷன்.... இந்த விவகாரத்தில் யோகிபாபு பெரிய மனுஷன் தான்..!

காவலர்கள் மீது எடுக்கப்பட்ட நடவடிக்கை போதுமானதா என்ற கேள்வி எழுகிறது.?கொதிக்கும் சமூகம்