உதகையில் குதிரை பந்தயம், கார்ப்பரேட் சூதாடிகளால் அரசுக்கு 640 கோடி இழப்பு!

தமிழகத்தில் மக்களின் வாழ்வாதா ரத்தை சீரழித்து, பல பெண்கள் தாலியை இழந்து விதவையாக காரணமாக இருந்தது குதிரை பந்தய சூதாட்டம்!


தமிழகத்தின் முதல்வராக கருணா நிதியின் ஆட்சி காலத்தின்போது பல லட்ச புகார்களின் அடிப்படையில் 1973 ஆம் ஆண்டு சட்ட சபையில் சிறப்பு தீர்மானம் கொண்டு வந்து குதிரை பந்தய சூதாட்டத்திற்க்கு முற்றிலும் தடை விதிக்கப்பட்டது.


இருப்பினும் பொழுதுபோக்கு அம்சம் என்கின்ற அடிப்படையில் சில தளர்வுகள் கொடுக்கப்பட்டது. இதன் அடிப்படையில் மெட்ராஸ் ரேஸ் கிளப் சார்பில் கிண்டி மற்றும் உதகையில் இந்த குதிரை பந்தயம் சூதாட்டமாக அல்லாமல் பொழுதுபோக்கு அம்சமாக தொடர்ந்து கொண்டிருக்கிறது. இருப்பினும் பெங்களூர் குதிரை பந்தய சூதாட்டத்தை மையமாக வைத்து மறைமுகமாக கிண்டியிலும், உதகையிலும் குதிரை பந்தய சூதாட்டம் தொடர்கிறது .


பொழுதுபோக்கு அம்சம் என்கின்ற அடிப் படையிலேயே உதகையில் வருடாவருடம் கோடை விழாவை முன்னிட்டு ஏப்ரல் மாதம் 14 ஆம் தேதியிலிருந்து, ஜூன் 14ஆம் தேதி வரை 60 நாட்கள் குதிரை பந்தய சூதாட்டம் இங்கே தொடர்ந்து நடைபெற்று வருகிறது.


கடந்த 20 ஆண்டுகளாக தமிழகத்தில் குதிரை பந்தய சூதாட்டத்தின் பின்னணியில் 10 ஆயிரம் கோடி வங்கி மோசடி செய்த விஜயமல்லையாவும், செட்டிநாடு சிமெண்ட் எம்.ஏ.எம் இராமசாமி செட்டியாரும்தான் இருந்து வந்துள்ளனர். தற்போது எம்.ஏ.எம் ராமசாமி செட்டியாரின் வாரிசான வளர்ப்பு மகன் எம்.ஏ.எம்.ஆர் முத்தையா செட்டியாரும் இணைந்துள்ளார்.


மெட்டாஸ் ரேஸ் கிளப் எம் . ஏ . எம் இராமசாமி குடும்பத்தின் கட்டுபாட்டிலும், பெங்களூர் ரேஸ் கிளப் மல்லைய குடும்பத்தின் கட்டுப்பாட்டில் தான் இன்றளவும் செயல்பட்டு வருகிறது.


இந்த இரு கார்பரேட் சூதாடிகள் வைத்தது தான் சட்டம். பந்தய குதிரைகளின் வெற்றி தோல்வியை முன்கூட்டியே தீர்மானிப்பது இவர்கள் தான். இந்த சூதாட்டத்தில் பல ஆயிரம் கோடி களை சம்பாதித்துள் ளனர். இது ஒருபுறம் இருக்க, கிண்டி குதிரை பந்தய மைதான இட மும், ஊட்டி குதிரை பந்தய மைதானமும் ஆங்கிலேயர் காலத்தில் மெட்ராஸ் ரேஸ் கிளப்பிற்கு குத்தகை கொடுக் கப்பட்டிருந்தது. குதிரை பந்தயம் தொடங்கி சுமார் 135 ஆண்டுகள் கடந்திருந்தாலும், இறுதியாக போடப் பட்ட, 99 ஆண்டு குத்தகை முடிந்து பல வருடங்கள் ஆகின்றன.


உதகை நகரின் மையப் பகுதியில் அமைந்திருக்கும் குதிரை பந்தய மைதானம் 52.34 ஏக்கர் பரப்பளவு கொண்டது.


பல ஆயிரம் கோடி ரூபாய் இந்த சூதாட்டத்தில் கார்பரேட் முதலைகள் சம்பாதித்திருந்தாலும் கடந்த 80 ஆண்டுகளாக குத்தகை பணம் செலுத்தாமல் இருந்துள்ளனர். அதாவது இந்தியா சுதந்திரம் வாங்கியதிலிருந்தே இவர்கள் குத்தகை பணம் கட்டவில்லை.


தற்போதுவரை வட்டியில்லாமல் நிலுவை குத்தகை பாக்கி 640 கோடி. இப்படி இருக்க மாவட்ட நிர்வாகம் சார்பில், உதகை குதிரை பந்தய மைதானம் சம்மந்தமாக உயர்நீதிமன்றத்தில் போட பட்ட வழக்கில், இவர்களுக்கு மாற்று இடம் தர வேண்டுமாம். இதற்காக கோத்தகிரி கடைகம்பட்டி பகுதியில் 100 ஏக்கர் நிலம் ஒதுக்க ஆய்வும் செய்யப்பட்டது.


ஒரு சூதாட்ட கிளப் 640 கோடி வாடகை பாக்கி வைத்திருக்க எப்படி மாற்று இடம் தரலாம்? என விசாரித்த போது, இந்த வழக்கு சம்மந்தமாக அரசு தரப்பு சார்பில் வாதாடிய வழக்கறிஞர் பல லட்ச ரூபாய் கையூட்டு பெற்று வாதத்தில் 640 கோடி குத்தகை பாக்கியை மறைத்துள்ளார்.


 விபரம் கேட்டு தகவல் அறியும் உரிமை சட்டத்தின் கீழ் உதகை நகராட்சிக்கு 21.01.2020 அன்று மனு செய்தோம். அவர்களோ எங்களிடம் எந்த தகவலும் இல்லை. சட்ட பிரிவு 6 (3) கீழ் உதகை வட்டாச்சியருக்கு மாற்றினார்கள். உதகை வட்டாச்சிர் அலுவ லகமோ, சட்ட பிரிவு 8 (2) யை காரணம் காண் பித்து (ந.க.அ.1/234/2020) இது சம்மந்தமான வழக்கு நீதிமன்றத்தில் இருப்பதால் தகவல் தர மறுக்கின்றனர். நாம் மாவட்ட ஆட்சியரின் நேர்முக உதவியாளர் (பொது)க்கு மேல் முறையீடு செய்துள்ளோம்.


எங்கள்  மனுவை நகராட்சி நிர்வாகம் சட்ட பிரிவு 6(3) ன் கீழ் வட்டாச்சியருக்கு மாற்றியது முதல் தவறு. இதைவிட கேவலமாக வட்டாச்சியர் அலுவல கம் சட்ட பிரிவு 8 (2) காரணம் கூறி நிராகரித்துள்ளது. தகவல் அறியும் உரிமை சட்டம் 2005, பிரிவு 8 (2) என்ன கூறுகிறதென்றால், "நீதிமன்றம் (அ) தீர்ப்பாயம் ஆகியவற்றால் வெளிப்படை வஜயமல்லையா யாக தடை செய்யப்பட்ட தக வல் (அ) நீதிமன்ற அவமதிப் பாக கருதப்படும் தகவல்" தான் தர கூடாது என கூறியுள்ளது.


உதகை குதிரை பந்தய மைதானம் சம்மந்தமான வழக்கு தடை செய்யப்பட்ட தகவலா? (அ) அவமதிப்பு தகவலா? இதே தகவல் அறியும் உரிமை சட்டத்தின்கீழ் தொடர பட்ட வழக்கில் "நீதிமன்றத்தில் வழக்கு நிலுவையில் உள்ளது என்று தகவல் தர மறுக்க கூடாது என தமிழ்நாடு தகவல் ஆணையம்: வழக்கு எண் 14846/ ENQUIRY /2009 ( 24.09.2009)- ல் தீர்ப்பு அளித்துள்ளது.


- ஆக, உண்மை வெளியே தெரியக்கூடாது என்பதற்காகவே நகராட்சி மற்றும் வட்டாசியர் அலுவலகத்தில் இருக்கும் சில கருப்பாடுகள் மெட்ராஸ் பிரஸ் கிளப் தூக்கியெறியும் எலும்பு துண்டுக்கு வாலாட்டிக் கொண்டிருக்கின்றனர்.


_640 கோடி நகராட்சி நிர்வாகத்திற்கு கிடைத்தால் எவ்வளவோ வளர்ச்சி பணிகள் செய்யலாம் .அதே போல் குதிரை பந்தய மைதானத்தை கையகப் படுத்தினால், அந்த இடத்தில் புதிய மாவட்ட ஆட்சியர் அலுவல கத்தை கொண்டு வரலாம். வாடகையில் இயங்கும் அரசு துறை அலுவலகங்களை கொண்டு வரலாம். மிக பெரிய வாகன நிருத்தம் உருவாக்கலாம்.


வெளி சுற்று பாதையில் சுமார் 600 கடைகள் உருவாக்கி நகராட்சிக்கு வருவாய நகராட்சிக்கு வருவாய் தேடலாம். இதன் மூலம் பல குடும்பம் வியபாரத்தில் மேல் வாடகை கட்டி வாழ வேண்டிய அவசியம் இருக்காது. தற்போதய நிலையில் உதகையில் இருக்கும் தெருவோற கடைகளில் 99% மேல் வாடகையில் தான் இயங்கு கிறது.


லோக்கல் அரசியல்வாதிகளே எல்லா கடைகளையும் ஆக்கரமித்து வைத்து சோம் பேரிகளாக வாழ்ந்து மேல் வாடகை பார்த்து வருகின்றனர். சுருக்கமாக கூற வேண்டுமானால் உதகை குதிரை பந்தய மைதானம் அரசாங்க நிலம். குத்தகை காலமும் முடிந்துவிட்டது. 640 கோடி வாடகை பாக்கி. பிறகு எதற்கு மாற்று இடம் .


இந்த இடத்தை அரசு கையகப்படுத்துவதோடு, 640 கோடி வாடகை பாக்கியையும் மீட்க வேண்டும். நேர்மையான வழக்கறிஞரை வைத்து வாதிட வேண்டும். எந்த காரணத்தை கொண்டும் மாவட்ட நிர்வாகம் 640 கோடி வடகை பாக்கி வட்டியோடு செலுத்தும் வரை மாற்று இடம் தரக்கூடாது. தரவே கூடாது