ஒரே நாளில் 627 பேர் பலி... உலகம் முழுவதும் தொடரும் கொரோனா கொடூரம்...

கொரோனா தொற்றால் உலக அளவில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 11 ஆயிரமாக அதிகரித்துள்ளது. அமெரிக்காவில் வைரஸ் பரவலை கட்டுப்படுத்த முடியாமல் அந்நாட்டு அரசு திணறி வருகிறது.


சீனாவில் உருவெடுத்த கொரோனா தொற்றால், உலக அளவில் உயிரிழப்பவர்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. உலக அளவில் கொரோனா தொற்றால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 11 ஆயிரமாக அதிகரித்துள்ளது. பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 2 லட்சத்து 84 ஆயிரத்தைக் கடந்துள்ளது. இத்தாலியில் நேற்று ஒரு நாளில் 627 பேர் உயிரிழந்தனர்.


இதுதான் ஒரே நாளில் கொரோனா காரணமாக பதிவான அதிக உயிரிழப்புகள் ஆகும். இத்தாலியில் 47021 பேர் வைரஸால் பாதிக்கப்பட்டுள்ளனர். ஒரே நாளில் இத்தாலியில் 5986 பேருக்கு வைரஸ் பாதிப்பு ஏற்பட்டுள்ளது.


கொரோனாவால் இத்தாலியில் இதுவரை 4,032 பேர் பலியாகி உள்ளனர். இத்தாலிக்கு அடுத்தபடியாக ஸ்பெயினில் 21510 பேர், இந்த வைரஸால் பாதிக்கப்பட்டு இருக்கிறார்கள்.


அங்கு நேற்று மட்டும் 3433 பேர் பாதிக்கப்பட்டார்கள். நேற்று மட்டும் 262 பேர் பலியானார்கள். இதுவரை ஸ்பெயினில் 1,326 பேர் கொரோனா வைரஸால் பலியாகி உள்ளனர்.


இன்னொரு பக்கம் ஈரானிலும் வைரஸ் வேகமாக பரவி வருகிறது. 19,644 பேர் ஈரானில் இதனால் பாதிக்கப்பட்டு இருக்கிறார்கள். அங்கு 1,433 பேர் இதுவரை பலியாகி உள்ளனர். அங்கு பலி எண்ணிக்கை மறைக்கப்படுவதாக புகார் உள்ளது. பிரான்சில் 12 612 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். 450 பேர் பலியாகி உள்ளனர்.


அமெரிக்காவில் நேற்று மட்டும் 5 ஆயிரத்து 620 பேருக்கு இந்த வைரஸ் தாக்கியது. அங்கு இதுவரை 19775 பேர் பாதிக்கப்பட்டு இருக்கிறார்கள். இதுவரை 392 பேர் பலியாகி உள்ளனர். மொத்தமாக கலிபோர்னியா, நியூயார்க், லாஸ் ஏஞ்சல்ஸ் உள்ளிட்ட 50 மாகாணங்களிலும் வைரஸ் வேகமாக பரவி வருகிறது. அமெரிக்க அரசு இதை கட்டுப்படுத்த முடியாமல் திணறி வருகிறது. ஐந்தில் ஒருவர் மட்டும் தான் வெளியே வர வேண்டும் என்ற உத்தரவை பிறப்பிக்க அதிபர் டிரம்ப் திட்டமிட்டுள்ளார்.


இங்கிலாந்தில் இதுவரை 177 பேர் உயிரிழந்துள்ளனர். அங்கு பப்கள், உணவகங்கள் மற்றும் காஃபி ஷாப்கள் மூடப்பட்டுள்ளன. ஆஸ்திரேலியாவில் கடற்கரைகளில் மக்கள் குவிந்து வருகின்றனர். இதனால், போண்டி உள்ளிட்ட புகழ்பெற்ற கடற்கரைகளுக்கு வர தடை விதிக்கப்பட்டுள்ளது.


சிங்கப்பூரில் இரண்டு பேர் உயிழந்துவிட்டதாக அந்நாட்டு அரசு அறிவித்துள்ளது. சீனாவில் 3-வது நாளாக புதிதாக யாருக்கும் வைரஸ் பாதிப்பு ஏற்படவில்லை என அந்நாடு தெரிவித்துள்ளது.


Popular posts from this blog

பஞ்சாயத்து தலைவருக்கு எவ்வளவு சம்பளம் தெரியுமாகோடிகள், புரளும் (ஊராட்சிகளில் ஊழல் நடப்பது எப்படி....

மன்னிப்பு கேட்கிறவன் மனுஷன்.. மன்னிக்க தெரிஞ்சவன் பெரிய மனுஷன்.... இந்த விவகாரத்தில் யோகிபாபு பெரிய மனுஷன் தான்..!

காவலர்கள் மீது எடுக்கப்பட்ட நடவடிக்கை போதுமானதா என்ற கேள்வி எழுகிறது.?கொதிக்கும் சமூகம்