சென்னை அருகே எண்ணெய் கிடங்கில் பயங்கர தீ விபத்து !
சென்னை அருகே கும்மிடிப்பூண்டியில் உள்ள எண்ணெய் கிடங்கில் பயங்கர தீ விபத்து ஏற்பட்டுள்ளது. நான்கு மணி நேரமாக கொழுந்து விட்டு எரிந்து வரும் தீயை அணைக்க தீயணைப்பு துறையினர் போராடி வருகின்றனர்.
தற்பொழுது ஐந்துக்கும் மேற்பட்ட தீயணைப்பு வாகனங்கள் ஏற்பட்டுள்ள தீயை அணைக்க போராடி வருகின்றது.
கரும்புகை வானுயர வெளிய எழும்பி வருவதால் இந்த தீ விபத்து அப்பகுதியில் பெரும் பதற்றத்தை ஏற்படுத்தியுள்ளது. ஏற்கனவே 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ள நிலையில் மேலும் போலீசார் பாதுகாப்புக்காக குவிக்கப்பட்டுள்ளனர்.
அங்கு டன் கணக்கில் எண்ணெய் இருப்பதால் எப்பொழுது இந்த தீ கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வரப்படும் என்பது தெரியாமல் தீயணைப்பு வீரர்கள் திகைப்பில் உள்ளனர்