கொரோனா தனி வார்டில் அனுமதிக்கப்பட்ட 59வயது பெண் உயிரிழப்பு...

கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவில் ஆசாரிபள்ளம் அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனை கொரோனா தனி வார்டில் அனுமதிக்கப்பட்ட 59 வயது பெண் உயிரிழந்தார்.


இவரது உடல், உடற்கூறாய்விற்காக பிரேதப் பரிசோதனை கிடங்கில் பாதுகாப்பாக வைக்கப்பட்டு இருப்பதாகவும், பரிசோதனை முடிவுகள் வந்த பின்னர் தான் இவர் கொரோனாவால் இறந்தாரா என்பது தெரிய வரும் என மருத்துவ கல்லூரி நிர்வாகம் அறிவித்துள்ளது.


இந்நிலையில் தற்போது வரை  4 பேர் இந்த மருத்துவமனையின் கொரோனா தனி வார்டில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். அவர்களது ரத்தம் மற்றும் சளி மாதிரிகள் திருநெல்வேலி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது