டிமானிடேஷன் நேரத்தில் 57.29 கோடி செல்லாத நோட்டுகள் வசூல்’ டாஸ்மாக் ரிப்போட்டில் அதிர்ச்சி..

பணமதிப்பிழப்பு நடவடிக்கைக்கு பிறகு தனது வாடிக்கையாளர்களிடமிருந்து ரூ. 57.29 கோடி மதிப்புள்ள செல்லாத 500, 1000 ரூபாய் நோட்டுக்களை தமிழ்நாடு டாஸ்மாக் கடைகள் பெற்றிருப்பது தெரியவந்துள்ளது.


பழைய 500, 1000 ரூபாய் நோட்டுக்கள் செல்லாது என பிரதமர் நரேந்திர மோடி கடந்த 2016 ஆம் ஆண்டு நவம்பர் 8ஆம் தேதி அதிரடி அறிவிப்பு வெளியிட்டார். கருப்பு பணத்தை ஒழிக்கவே இத்தகைய நடவடிக்கை மேற்கொள்ளப்படுவதாக அப்போது தெரிவிக்கப்பட்டது. அறிவிப்பு வெளியான நாள் முதல் டிசம்பர் வரை பழைய 500, 1000 ரூபாய் நோட்டுக்களை வங்கிகளில் மாற்றிக் கொள்ள அவகாசம் கொடுக்கப்பட்டது.


சில குறிப்பிட்ட இடங்களுக்கு மட்டும் அவசர நிலையைக் கருதி செல்லாத நோட்டுகளை வாங்கிக் கொள்ள அனுமதிக்கப்பட்டது. மற்றபடி வேறு எங்கும் செல்லாததாக அறிவிக்கப்பட்ட நோட்டுகளை வாங்க தடையிருந்தது.


ஆட்டோகிராப் போட்டு குட்டீஸ்களை குஷிப்படுத்திய தோனி - சிஎஸ்கே வெளியிட்ட வீடியோ


இந்நிலையில், பணமதிப்பிழப்பு நடவடிக்கைக்கு பிறகு 2016, நவம்பர் 9 முதல் டிசம்பர் 31 வரையிலான காலகட்டத்தில் தனது வாடிக்கையாளர்களிடமிருந்து ரூ. 57.29 கோடி மதிப்புள்ள செல்லாத 500, 1000 ரூபாய் நோட்டுக்களை தமிழ்நாடு டாஸ்மாக் கடைகள் பெற்றிருப்பது தெரியவந்துள்ளது. இதுதொடர்பாக இந்து ஆங்கில நாளிதழ் செய்தி வெளியிட்டுள்ளது.


2016-17 நிதியாண்டில் டாஸ்மாக் தாக்கல் செய்த வருமான வரித்துறை அறிக்கை மூலம் இது தெரியவந்துள்ளது. இதில், நவம்பர் 9, 2016 நிலவரப்படி டாஸ்மாக் தொடக்க நிலுவை தொகையாக ரூ.84.23 கோடி இருந்ததாக தெரிவிக்கப்பட்டது. அதில், ரூ. 81.57 கோடி செல்லாத 500 மற்றும் 1000 ரூபாய் நோட்டுக்கள் என்பதும் ரூ. 2.66 கோடி மற்ற புழக்கத்தில் உள்ள செல்லும் நோட்டுகள் என்பதும் தெரியவந்தது. நவம்பர் 9 ஆம் தேதி வங்கி விடுமுறை என்பது இங்கு குறிப்பிடத்தக்கது.


இதையடுத்து, நவம்பர் 10 முதல் டிசம்பர் 30, 2016 வரை ரூ. 3,490.21 கோடியை டாஸ்மாக் மூலம் வசூலிக்கப்பட்டது. அந்த ரொக்க வசூல் தினசரி அடிப்படையில் அதன் வங்கிக் கணக்குகளில் டெபாசிட் செய்யப்பட்டது.


பணமதிப்பிழப்பு நடவடிக்கை காலகட்டத்தில், மொத்தம் வசூலிக்கப்பட்ட ரூ3,490.21 கோடியில் சுமார் 140 கோடி ரூபாய் செல்லாத நோட்டுகளை வங்கிக் கணக்குகளில் டாஸ்மாக் டெபாசிட் செய்துள்ளது.


அதில், நவம்பர் 9, 2016 நிலவரப்படி வசூலிக்கப்பட்ட பழைய நோட்டுகள் ரூ.81.57 கோடியைக் கழித்தால், மீதமுள்ள தொகை ரூ. 57.29 கோடி இடைப்பட்ட காலத்தில் வசூலிக்கப்பட்டது உறுதியாகிறது.


“விரும்பி திருமணம் செய்தவர்களை வாழ வழி விடுங்கள்” - கொளத்தூர் மணி


இது தொடர்பாக டாஸ்மாக் நிர்வாகம் தரப்பில், செல்லாத ரூ500 ரூ1000 நோட்டுகளை வாங்கவில்லை என்றால் வாடிக்கையாளர்கள் தகராறு செய்வார்கள், அதனால் சட்டம் ஒழுங்கு பிரச்னை ஏற்படும்,


அதனால்தான் வசூலித்தோம் என்று தெரிவிக்கப்பட்டிருக்கின்றன. இருப்பினும், வருமான வரித்துறை சார்பில் இந்த விளக்கத்தை ஏற்கவில்லை என தெரிகிறது.


Popular posts
நடுரோட்டில் கதறிய பெண் வழக்கறிஞர்-“இன்னும் எவ்வளவு பணம் வேணாலும் வாங்கித்தர்றேன்.. என்னோட வந்துடுங்க!”
Image
600 கோடியை ஏப்பம் விட்ட பாஜகவினர்; கும்பகோணத்தை அதிரவைத்த‘ஹெலிகாப்டர் பிரதர்ஸ்’.12 சொகுசு கார்களை பறிமுதல் செய்து அதிரடி!
Image
நடிகையுடன் நடைபெற்ற மது விருந்து..! பண்ணை வீட்டுக்கு சீல் வைத்த அதிகாரிகள்..!
Image
சர்ச்சையை கிளப்பிய அதிகாரி மீது நடவடிக்கை - வடக்கிற்கு உரக்கச் சொன்ன தமிழக அரசு உதவி ஆணையர் விடுவிப்பு - மாநகராட்சி ஆணையர் உத்தரவு
Image
தமிழ்நாடு மாநில மனித உரிமை ஆணையம் வழங்கிய நோட்டீஸை அடுத்து டி.ஜி.பி சைலேந்திரபாபு இந்த உத்தரவைப் பிறப்பித்துள்ளார்.
Image