ரஜினி சொன்னது உண்மையா...`சட்டமன்றத்தில் பார்த்தால் 50, 55, 60, 65 வயதுக்கு மேற்பட்டவர்கள்தான் அதிகம் பேர் இருக்கிறார்கள்'

சட்டமன்றத்தில் பார்த்தால் 50, 55, 60, 65 வயதுக்கு மேற்பட்டவர்கள்தான் அதிகம் பேர் இருக்கிறார்கள். என் கட்சியில் 65 சதவிகிதம் வரையில் 50 வயதுக்குக் கீழ் உள்ளவர்களுக்கு சீட் கொடுப்பேன்'' - மார்ச் 12-ம் தேதி நடந்த பத்திரிகையாளர் சந்திப்பில் ரஜினி சொன்ன வார்த்தைகள் இவை.


சட்டசபையில் எத்தனை வயதில் எத்தனையெத்தனை பேர் இருக்கிறார்கள் என்று ஆராய்ந்தோம்.தேர்தலில் போட்டியிட 25 வயது நிரம்பியிருக்க வேண்டும். ஆனாலும், அந்த வயதையொட்டிய சட்டமன்ற உறுப்பினர்கள் தமிழக சட்டசபையில் குறைவுதான்.


26 வயதில் இருந்து 35 வயதுக்குள்ளான சட்டமன்ற உறுப்பினர்கள் 8 பேர்தான் தமிழக சட்டசபையில் இருக்கிறார்கள்.36 வயதில் இருந்து 45 வயதுக்குட்பட்ட சட்டமன்ற உறுப்பினர்கள் 40 பேர் உள்ளனர். 46 வயதிலிருந்து 55 வயதுக்குள்ளாக இருக்கிற சட்டமன்ற உறுப்பினர்களின் எண்ணிக்கை 85 பேர். 56 முதல் 65 வரையில் உள்ளவர்கள் 80 பேர் இருக்கிறார்கள்.


66 வயது முதல் 75 வயது வரை உள்ள சட்டமன்ற உறுப்பினர்கள் 19 பேர் உள்ளனர். 76 முதல் 85 வரையில் ஒருவரும் 86 முதல் 95 வரையில் ஒருவரும் சட்டசபைக்குள் நுழைந்துள்ளார்கள்.இந்த வயது விவரப்படி பார்த்தால் 46 முதல் 55 வயது வரையில் உள்ளவர்கள்தான் சட்டசபையில் அதிகமாக இடம்பெற்றிருக்கிறார்கள்.


அவர்களின் மொத்த எண்ணிக்கை 85. இதற்கு அடுத்தபடியாக 56 வயது முதல் 65 வயது வரையில் உள்ளவர்கள் இருக்கிறார்கள். அவர்களின் எண்ணிக்கை 80. மூன்றாவது இடத்தில் 36 வயது முதல் 45 வயது நிரம்பியவர்கள் உள்ளனர். அவர்களின் எண்ணிக்கை 40.இந்த விவரங்கள் அனைத்தும் 2016 சட்டசபைத் தேர்தலில் வென்று சட்டசபைக்குள் நுழைந்தவர்களின் அடிப்படையில் திரட்டப்பட்டது.


அதன்படிதான் 86 முதல் 95 வயது வரையில் ஒருவர் சட்டமன்ற உறுப்பினராகக் கணக்கிடப்பட்டிருக்கிறார். அவர் மறைந்த முன்னாள் முதல்வர் கருணாநிதி.


``50 வயதுக்கு மேற்பட்டவர்கள் அதிகம் பேர் சட்டசபையில் இருக்கிறார்கள்'' என ரஜினி சொன்ன கணக்கு உண்மைதான். 56 வயது முதல் 95 வயது வரையில் உள்ள சட்டமன்ற உறுப்பினர்களின் எண்ணிக்கை 101. இதில் 46 வயது முதல் 55 வயது வரையில் உள்ள 85 பேர்களைக் கணக்கில் சேர்த்துக் கொண்டால் இந்த எண்ணிக்கை 186 ஆகிவிடும்.


``என் கட்சியில் 65 சதவிகிதம் வரையில் 50 வயதுக்குக் கீழ் உள்ளவர்களுக்கு சீட் கொடுப்பேன்'' - ரஜினியின் வார்த்தைகளுடன் கட்டுரையை முடிப்போம்.


Popular posts from this blog

பஞ்சாயத்து தலைவருக்கு எவ்வளவு சம்பளம் தெரியுமாகோடிகள், புரளும் (ஊராட்சிகளில் ஊழல் நடப்பது எப்படி....

மன்னிப்பு கேட்கிறவன் மனுஷன்.. மன்னிக்க தெரிஞ்சவன் பெரிய மனுஷன்.... இந்த விவகாரத்தில் யோகிபாபு பெரிய மனுஷன் தான்..!

நோன்பு சட்டதிட்டங்கள்-(ஷாபியீ, ஹனபி)