வரும் 5 தேதி மக்கள் மன்ற மாவட்ட செயலாளர்களை சந்திக்கும் நடிகர் ரஜினி

ரஜினி மக்கள் மன்றத்தின் மாவட்டச் செயலாளர்களை நடிகர் ரஜினி, வரும் 5 மற்றும் 6-ம் தேதியில் நேரில் சந்தித்து ஆலோசனை நடத்த உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.


ரஜினி தற்போது நடித்து வரும் அண்ணாத்தா திரைப்படத்தின் முதற்கட்ட படப்பிடிப்பை முடித்துக்கொண்டு, ஓய்வு எடுத்து வருகிறார். இந்த நிலையில், மக்கள் மன்றத்தின் அனைத்து மாவட்ட செயலாலர்களையும், ராகவேந்திரா திருமண மண்டபத்தில் ரஜினி சந்திக்க உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.


இதில் மக்கள் மன்றத்தின் செயல்பாடுகள், மாநிலத்தின் அரசியல் சூழல் போன்றவற்றை கேட்டறிவார் என எதிர்பார்க்கப்படுகிறது. மேலும், கட்சித் தொடங்குவது குறித்து இக்கூட்டத்தில் விரிவாக ஆலோசிக்கப்பட்டு, முக்கிய முடிவுகள் எடுக்கப்பட வாய்ப்புள்ளதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.


Popular posts from this blog

பஞ்சாயத்து தலைவருக்கு எவ்வளவு சம்பளம் தெரியுமாகோடிகள், புரளும் (ஊராட்சிகளில் ஊழல் நடப்பது எப்படி....

FIR-ல் வெளியான அதிர்ச்சி-பற்கள் பிடுங்கப்பட்ட விவகாரத்தை சிபிசிஐடி விசாரணைக்கு மாற்றி டிஜிபி சைலேந்திரபாபு உத்தரவிட்டுள்ளார்.

சமூக வலைதள யூடியூபருக்கு, 1 லட்சம் அபராதம் கட்டிய உதவி ஆய்வாளர் இசக்கி ராஜா – மனித உரிமை ஆணையம் உத்தரவு