வேலூர் லஞ்ச வங்கிய துணை கலெக்டரின் 5 வங்கி கணக்கு முடக்கம்

வேலுார், தனி துணை கலெக்டர் தினகரனின், ஐந்து வங்கி கணக்குகள் முடக்கப்பட்டுள்ளன. அவர் வாங்கிய சொத்துகள் குறித்து, போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.


வேலுார், முத்திரைத்தாள் தனி துணை கலெக்டர் தினகரன், 47; இவர், விவசாயி ஒருவரிடம், 50 ஆயிரம் ரூபாய் லஞ்சம் வாங்கியபோது, பிப்., 27ம் தேதி- இரவு, கைது செய்யப்பட்டார். அவரது அலுவலகம், வீடு, உள்ளிட்ட இடங்களில் சோதனை நடத்தி, 79 லட்சம் ரூபாயை போலீசார் கைப்பற்றினர்.


திருவண்ணாமலை மாவட்டம், போளூரில் அவரது வீட்டில் இருந்து, பல கோடி ரூபாய் மதிப்புள்ள சொத்து ஆவணங்களை கைப்பற்றினர்.


வேலுார், திருவண்ணாமலை மாவட்ட பத்திரப்பதிவு அலுவலகங்களில், அவரது சொத்து விபரங்களின் அறிக்கைகளை கேட்டுள்ளனர்.


தற்போது, தினகரனின் ஐந்து வங்கி கணக்குகளையும் போலீசார் முடக்கியுள்ளனர்.தினகரன், 2018ல் பதவி உயர்வு பெற்று, தனி துணை கலெக்டராக பணிக்கு வந்தார்.


தினகரன், மாலை நேரங்களில் மட்டும் அலுவலகத்துக்கு வருவதை வழக்கமாக கொண்டுள்ளார்.அலுவலகம் அல்லது மற்ற இடங்களில் லஞ்சம் வாங்கினால், எளிதில் சிக்கி விடுவோம் என்பதால், காரில் இருந்தபடியே லஞ்சப் பணத்தை வசூல் செய்துள்ளார்