அதிருப்தியில் ரஜினி மா.செக்கள்!.

 


சென்னை: "எங்களுக்கு ஒன்னுமே புரியல" என்று பெரும்பாலான மாவட்ட செயலாளர்கள் ரஜினியை சந்தித்து விட்டு புலம்பி கொண்டுதான் இருக்கிறார்களாம்... காரணம், "காசு.. பணம்... துட்டு" சமாச்சாரம்தான்!


நேற்று முன்தினம் மன்றத்தின் நிர்வாகிகளை சந்தித்து ஆலோசனை நடத்தினார் நடிகர் ரஜினிகாந்த்.. அப்போது கட்சி ஆரம்பிப்பது, அக்கட்சிக்கு பெயர், சின்னம், கொடி, உள்ளிட்ட விவகாரங்கள் பேசப்பட்டதாக தகவல்கள் வந்தன.


ரஜினி மன்றத்தின் மாவட்ட செயலாளர்கள் அனைவருமே, தீவிரமான ரசிகர்கள்... ரஜினிகாந்த் எப்போது கட்சியை ஆரம்பிப்பார் என்று கால் நூற்றாண்டுக்கும் மேலாக காத்து கிடப்பவர்கள்.. தன் தலைவனை பற்றின ஆயிரம் விமர்சனங்களை பிற கட்சியினரும், பொதுமக்களும் எசகுபிசகாக கருத்து சொன்னாலும், அதனை துணிவுடன் எதிர்ப்பவர்கள்.. என்றாவது கட்சியை நம் தலைவர் ஆரம்பித்து விடுவார் என்ற கனவிலும், நினைவிலும் திளைப்பவர்கள்!


இப்படிப்பட்டவர்களே நேற்று முன்தினம் நொறுங்கி போனதாக கூறப்படுகிறது.. கலந்து கொண்ட 32 மாவட்ட செயலாளர்களில் 12 பேர் மட்டுமே ரஜினியின் குட்புக் லிஸ்ட்டில் தேர்வாகி உள்ளனர்.. மற்றவர்கள் எல்லோருக்குமே செம டோஸ் விழுந்திருக்கிறது.. கொடுத்த வேலையை யாருமே சரியாக செய்யவில்லை என்று ரஜினி டென்ஷன் காட்டியதாக சொல்லப்படுகிறது.. இதனால் மீதமுள்ள 18 மா.செ.க்களும் கடுமையான அதிர்ச்சிக்கு உள்ளானார்களாம்.


இதற்கு காரணம், ரஜினி செலக்ட் செய்த மா.செ.க்களில் எல்லோரும் வசதி படைத்தவர்கள்... மற்றவர்கள் பணபலம் இல்லாதவர்கள்.. இது காரணமாக பார்க்கிறார்கள். மற்றொன்று, கட்சி ஆரம்பிப்பது பற்றி ரஜினியிடமே இப்போது கூட ஒரு தெளிவு இல்லையே என்ற ஆதங்கமும் இவர்களுக்கு ஏற்பட்டுள்ளது. அடிப்படையில் தாங்கள் வசதி படைத்தவர்களாக இல்லாவிட்டாலும்கூட, ஒருவேளை சம்பாதித்த பணத்தை கட்சியில் போட்டாலும், எதிர்காலம் எப்படி இருக்குமோ என்ற பயம் வந்துள்ளது.
ஒருவேளை கட்சி ஆரம்பித்து, தாங்கள் பணத்தையும் கொட்டி செலவு செய்யும்போது திடீரென உடம்பு சரியில்லை என்று சொல்லி ஒதுங்கி விட்டால் என்ன செய்வது? என்ற கலக்கம்தான் பெரும்பாலான மா.செ.க்களை பீடித்துள்ளதாம். அப்படியே பணத்தை கொட்டினாலும் மா.செ.க்களுக்கான பதவி பற்றின உறுதியும் இல்லை.
மாற்று கட்சிக்காரர்களுக்கும் பதவி, பொறுப்பு தர வேண்டி வரும் என்கிறார்... ஒரு வருஷமா என்ன பண்ணீங்கன்னு தங்களை கேட்கிறாரே, இவர் மட்டும் 2 படம் நடிச்சதை தவிர வேறு என்ன செய்தார்? உள்ளே உட்கார்ந்து இருக்கும்போது மீடியாகிட்ட யாரும் பேசக்கூடாதுன்னு சொல்லிட்டு, வெளியே வந்து ஏமாற்றம்-ன்னு இவரே சொல்லலாமா? எங்களுக்கு எதுவுமே புரியவில்லை" என்று புலம்பி தள்ளுகிறார்களாம்.


Popular posts from this blog

பஞ்சாயத்து தலைவருக்கு எவ்வளவு சம்பளம் தெரியுமாகோடிகள், புரளும் (ஊராட்சிகளில் ஊழல் நடப்பது எப்படி....

மன்னிப்பு கேட்கிறவன் மனுஷன்.. மன்னிக்க தெரிஞ்சவன் பெரிய மனுஷன்.... இந்த விவகாரத்தில் யோகிபாபு பெரிய மனுஷன் தான்..!

நோன்பு சட்டதிட்டங்கள்-(ஷாபியீ, ஹனபி)