டெல்லியில் மதக் கூட்டத்தில் பங்கேற்ற 441 பேருக்கு கொரோனா அறிகுறி உள்ளது என்று டெல்லி அரசு தெரிவித்துள்ளது.

இந்தியத் தலைநகர் டெல்லியில் மார்ச் 21-ம் தேதி தப்லீகீ ஜமாத் அமைப்பு சார்பில் நிசாமுதின் பகுதிகயில் மதக் கூட்டம் நடைபெற்றது. இந்தக் கூட்டத்தில் 1,746 பேர் பங்கேற்றுள்ளனர். அதில், 1530 பேர் இந்தியர்கள். மேலும், 216 பேர் வெளிநாட்டினர்.


மேலும், 824 வெளிநாட்டினர் நாட்டில் பல்வேறு பகுதிகளில் தப்லீகி ஜமாத் அமைப்பு சார்ந்த நிகழ்வில் பங்கேற்றிருந்தனர். டெல்லியில் கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்ட 97 பேரில் 24 பேர் இந்த மதக் கூட்டத்தில் பங்கேற்றவர்கள்.


இந்த விவகாரம் குறித்து செய்தியாளர்களிடம் பேசிய டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால், ‘மதக் கூட்டம் நடத்தியவர்கள் மீது வழக்குப் பதிவு செய்யவேண்டும் என்று துணை நிலை ஆளுநருக்கு டெல்லி அரசு கடிதம் எழுதியுள்ளது.


அவர், விரைவில் வழக்குப் பதிவு செய்வார் என்று முழு நம்பிக்கை உள்ளது. அலட்சியமாக அதிகாரிகள் இருப்பது தெரியவந்தால் அவர்கள் மீதும் வழக்குப் பதிவு செய்யப்படும். டெல்லியில் கொரோனா பாதிக்கப்பட்டுள்ள 97 பேரில் 24 பேர் டெல்லி மதக் கூட்டத்தில் பங்கேற்றவர்கள்.


41 பேர் வெளிநாடுகளுக்கு சென்று திரும்பியவர்கள். 22 பேர் வெளிநாடு சென்று திரும்பியவர்களின் குடும்பத்தினர். அந்தக் கூட்டத்தில் பங்கேற்ற 441 பேருக்கு கொரோனா அறிகுறி உள்ளது’ என்று தெரிவித்தார்.


இதுகுறித்து தெரிவித்த மத்திய உள்துறை அமைச்சகம், ‘824 வெளிநாட்டினரின் விவரங்கள் மாநில காவல்துறைக்கு வழங்கப்பட்டுள்ளது. அவர்களைக் கண்டுபிடித்து தனிமைப்படுத்துவதற்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.


இந்தியன் தலீபாக் ஜமாத் நிர்வாகிகளின் விவரங்களைச் சேகரிப்பதற்கு மார்ச் 28-ம் தேதி மாநில காவல்துறைக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.


அந்தக் கூட்டத்தில் பங்கேற்ற வெவ்வேறு மாநிலங்களைச் சேர்ந்த 2,137 பேர் அடையாளம் காணப்பட்டுள்ளனர். அவர்கள், மருத்துவச் சோதனை செய்யப்பட்டு தனிமைப்படுத்தப்படுகின்றனர்.


இன்னும் பலர் அடையாளம் காணப்படவேண்டிய அவசியம் உள்ளது’ என்று தெரிவித்துள்ளது.


இந்தநிலையில், தபிலீகி ஜமாத்தின் மவுலானா மீது தொற்றுநோய் தடுப்புச் சட்டத்தின் கீழ் வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது.


Popular posts from this blog

பஞ்சாயத்து தலைவருக்கு எவ்வளவு சம்பளம் தெரியுமாகோடிகள், புரளும் (ஊராட்சிகளில் ஊழல் நடப்பது எப்படி....

FIR-ல் வெளியான அதிர்ச்சி-பற்கள் பிடுங்கப்பட்ட விவகாரத்தை சிபிசிஐடி விசாரணைக்கு மாற்றி டிஜிபி சைலேந்திரபாபு உத்தரவிட்டுள்ளார்.

சமூக வலைதள யூடியூபருக்கு, 1 லட்சம் அபராதம் கட்டிய உதவி ஆய்வாளர் இசக்கி ராஜா – மனித உரிமை ஆணையம் உத்தரவு