உள்ளாட்சி அதிகாரிகளின் - ஊழலால் அதிகரிக்கும் கட்டிடங்கள்...

இயற்கை எழில் கொஞ்சும் நீலகிரி மாவட்டம் தமிழக உயிர்சூழல் மண்டலத்தின் முக்கிய அங்கமாகும். ஊட்டி, குன்னரர். கூடலூர், பந்தலூர், குந்தா, கோத்தகிரி, என ஆறு வட்டங்களை உள்ளடக்கியதாகும். இதில் இயற்கையின் இளவரசி என்றழைக்கப்படும் கோத்தகிரி வட்டம் இரண்டாம் சுவிட்சர்லாந்து என்று அழைக்கப்படுகிறது.


மிதமான காலநிலை மட்டுமின்றி சமவெளி மாவட்டங்களாக கோவை ஈரோடு திருப்பர் வரை நீராதாரமாகவும் விளங்குகிறது. இதற்கு காரணம் கோத்தகிரி வனப்பகுதிகள் இங்கிருந்து உருவாகும் ஏராளமாக நீர் சுனைகள் ஊற்று நீரோடைகள், பசுமையான புல்வெளிகள், பள்ளதாக்குகள் பெரும் நீராதாரத்திற்கு அங்கமாக அமைகிறது.


வனவிலங்குகள், ஏராளமான பூச்சி இனங்கள், பறவைகள் அதிலும் இருவாச்சி என்கிற அபூர்வ பறவைகள், பச்சைப்புறா, இசையெழுப்பும் பறவைகள், காட்டுகோழிகள், தேனீக்கள், என அதிகமாக உள்ளன. சமீபகாலமாக புலி, கரடி, காட்டுமாடுகள், ஊருக்குள் புகுந்துவிடுவதோடு விவசாய பயிர்களை அழித்தும் வருகிறது.


இதனால் மனித விலங்கு மோதல் நடக்கும் அபாயங்களும் அச்சுறுத்தல்களும் அதிகரித்துள்ளன. இதற்கு காரணம் வனங்களை ஒட்டி கட்டப்படும் கட்டிடங்கள், சுற்றி அமைக்கப்படும் முள்வேலிகள், விவசாய நிலங்களை சுற்றி போடப்படும் சோலார் மின்வேலிகள் காரணமாக அமைகிறது.


கடந்த 10 ஆண்டுகளில் அதிகமான விவசாய தேயிலைத்தோட்டங்கள் அழிக்கப்பட்டு பலசதுர அடிப்பரப்பில் கட்டிடங்கள் எழுப்பப்படுகிறது.


குன்னூருக்கு அடுத்து அதிகமான கட்டிடங்கள் கோத்தகிரியில் கட்டி வருகின்றனர். வெளிமாநிலத்தை சேர்ந்த பணம் படைத்த பலர் அடிமாட்டு விலைக்கு நிலங்களை வாங்கி பெரும் அரசியல் வாதிகளின் ஒத்துழைப்போடு மாவட்ட உள்ளாட்சி அதிகாரிகளின் அனுமதிகளின் பேரில் விதிமுறை மீறி கட்டிடங்கள் கட்டப்பட்டு வருகிறது.


மாவட்ட ஆட்சியரின் நேரடி ஆய்வுகளுக்குப் பின் கட்டிடங்கள் கட்டியவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. பெரும் கட்டிட பெருக்கத்தால் பலர் ஆழ்குழாய் மற்றும் கிணறுகள் அமைப்பதால் நீரின் பரவல் தன்மை தடைப்பட்டு ஆயிரக்கணக்கான நீர் ஊற்றுப்பகுதிகள் காணாமல் போய்விட்டன.


இதனால் சமவெளி பகுதிக்கு செல்லும் நீர் ஒடைகள் வறண்டுவிடுவதால் பெரும் ஆபத்தை சந்திக்கும் நிலையுள்ளது. கோத்தகிரி ஈளாடா நீர்தேக்க பகுதியில் சுற்றிலும் விறகுக்காக பலர் லாரிகளில் குறுஞ்செடிகளை கூட அழித்துவிடுவதால் கோத்தகிரிக்கு நீராதாரமாக உள்ள ஈளாடா பகுதி வறண்டு நீரின்றி போகும் அபாயம் ஏற்ப்பட்டுள்ளது.


அதிகரித்து வரும் நீலகிரி நீர்மட்ட அளவால் காலநிலையில் பல மாற்றங்கள் ஏற்பட்டு சமவெளிபகுதியைப் போல கோத்தகிரியில் வெப்பநிலை உயர்ந்து வருவதை காணமுடிகிறது.


எனவே கோத்தகிரியை காப்பாற்ற அதிகரிக்கும் ஆக்கிரமிப்பு மற்றும்கட்டிட பெருக்கத்தை நிறுத்த வேண்டும். பலமுறை பத்திரிகைகளில் செய்திகள் வெளியிட்டும் முறையற்ற அனுமதியை தடுக்கமுடியவில்லை .


எனவே வரும் காலங்களில் பத்திரிகை யாளர்களின் வேண்டுகோளை ஏற்று மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்க கோரிக்கை விடப்பட்டு வருகிறது.


அழிவின் விளிம்பில் இருக்கும் கோத்தகிரி இயற்கை சூழலை காக்க அரசு நடவடிக்கை எடுக்குமா? காத்திருப்போம்.


Popular posts from this blog

பஞ்சாயத்து தலைவருக்கு எவ்வளவு சம்பளம் தெரியுமாகோடிகள், புரளும் (ஊராட்சிகளில் ஊழல் நடப்பது எப்படி....

மன்னிப்பு கேட்கிறவன் மனுஷன்.. மன்னிக்க தெரிஞ்சவன் பெரிய மனுஷன்.... இந்த விவகாரத்தில் யோகிபாபு பெரிய மனுஷன் தான்..!

காவலர்கள் மீது எடுக்கப்பட்ட நடவடிக்கை போதுமானதா என்ற கேள்வி எழுகிறது.?கொதிக்கும் சமூகம்