39 பேர் கொரோனா மருத்துவ கண்காணிப்பில் உள்ளனர் - சுகாதாரத்துறை

தமிழ்நாட்டில் 39 பேர் கொரோனா மருத்துவ கண்காணிப்பில் உள்ளனர் - சுகாதாரத்துறை


தமிழகத்தில் கொரோனா வைரஸ் அறிகுறியால் 39 பேர் தனிமைப்படுத்தப்பட்டு, மருத்துவ கண்காணிப்பில் வைக்கப்பட்டுள்ளதாக சுகாதாரத்துறை அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.


விமான நிலையங்களில் மேற்கொள்ளப்பட்ட மருத்துவ சோதனையின் அடிப்படையில் இதுவரை , மூவாயிரத்து 481 பேர் வீட்டு கண்காணிப்பில் வைக்கப்பட்டுள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது.


320 பேரின் மாதிரிகள் ஆய்வுக்கு உட்படுத்தப்பட்டதில், 232 பேருக்கு நோய் தொற்று இல்லை என்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.


84 பேரின் ஆய்வு முடிவுகள் இன்னும் கிடைக்க வில்லை என்றும், புதியதாக 2 மாதிரிகள் ஆய்வகத்திற்கு எடுத்து செல்லப்பட்டு இருப்பதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. நோய்த்தொற்று உறுதிசெய்யப்பட்ட டெல்லியில் இருந்து வந்தவரின் உடல் நிலை சீராக இருப்பதாகவும்  அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.