வக்ப் தீர்ப்பாயத்தின் முடிவு சரிதானா என்பதனை நீதிமன்றம் ஆய்வு செய்யலாம் சான்றுகளை மறுபரிசீலனை செய்யலாம்

எஸ். பாலசுப்பிரமணியன் - என்.ஆறுமுகத் திற்காக - மனுதாரரின் வழக்கறிஞர். டி. நல்லதம்பி - எதிர் வழக்கீட்டாளரின் வழக்கறிஞர். உ.சீ.ம. அனுமதிக்கப்பட்டது செலவுத் தொகை இல்லை ப.ம. தள்ளுபடி செய்யப்பட்டது.


கோரிக்கை : மு.வ.எண் 378/2010இல் 21.10.2011 தேதியிடப்பட்ட தீர்ப்பு மற்றும் தீர்ப்பாணை- வஃப் தீர்ப்பாயத்தின் (முதன்மை சார்நிலை நீதிமன்றம், திருநெல்வேலி) கோப்பில் உள்ளது. இந்தச் சீராய்வு மனுவை அனுமதித்து கோரப்பட்டவாறு தீர்ப்பாணை அளிக்க - இந்திய அரசமைப்புச் சட்டத்தின் 227ஆம் உறுப்பின்படி இந்தத் தீர்ப்பு மற்றும் தீர்ப்பாணையைத் தள்ளுபடி செய்யக் கோரி இந்த உரிமையியல் சீராய்வு மனு முன்னிடப்பட்டுள்ளது.


தீர்ப்பு


1. சீராய்வு மனுவானது- வஃப் சட்டம் 1995 உவா இந்திய அரசமைப்பின் 227ஆம் உறுப்பின் படி முன்னிடப்பட்டது. இது வஃப் தீர்ப்பாயம் (முதன்மை சார்நிலை நீதிமன்றம்) திருநெல்வேலி யில் மு.வ.எண் 378/2010 21.10.2011 தேதியி டப்பட்ட தீர்ப்பு மற்றும் தீர்ப்பாணைக்கு எதிரானது.


2. மனுதாரர் - வழக்கின் வாதியாவார் - மனுதாரர் - இந்த நீதிமன்றத்தின் முன்பு மனுவை முன்னிட்டுள்ளார். இதில் எதிர் வழக்கீட்டாளருக்கு எதிராக - நிலையான தடையுறுத்துஆணையைக் கோரியுள்ளார். இந்த வழக்கில் மனுதாரருக்கு வழக்கில் உள்ள சொத்து சொந்தமானது. மனுதாரர் - தெய்க்கா மற்றும் மனுதாரரின் உரிமை மூல பாத்தியதை, இவை நீதிமன்றத்தில் இ.மே.எண் 1758/1968 தீர்ப்பின் மூலம் தீர்ப்பாணை 23.9.1930 தேதியிட்டதன் மூலமும் தீர்மானிக்கப்பட்டது. எதிர் வழக்கீட்டாளர் எந்த உரிமையும் இன்றி தனிப்பட்ட தகுதியில் - அந்தச் சொத்தின் உடைமை மற்றும் அனுபோகத்தை இடையீடு செய்ய முயற்சித்துள்ளார்.


3. எதிர் வழக்கீட்டாளர்கள் கூறியதாவது: மனுதாரருக்கு எந்த உரிமையும் இல்லை - அதாவது வழக்கில் உள்ள சொத்தின்மீது மற்றும் முந்திய தீர்ப்பில் - இரண்டாவது மேல்முறையீட் டில் - உறுதியாகச் சொல்லப்பட்டதாவது - தைக்கா அந்த காலியிடத்தின்மீது உரிமை கொண்டிருக்கவில்லை. எனவே மனுதாரர் சொல்லப்பட்ட தீர்ப்பின் மூலம் கட்டுப் படுத்தப்படுவார் என்பது. எதிர் வழக்கீட்டாளர் மேலுமான கோரிக்கையை முன் வைத்துள்ளார். அதாவது மனுதாரர் வழக்கில் உள்ள சொத்தினை ஏற்கெனவே துய்த்து வரவில்லை. அந்தச் சொத்தானது - பள்ளி வாசலுக்குச் சொந்தமானது - இது அங்கு தொழுகைக்கு வருபவர்களால் பயன்படுத்தப்பட்டு வருகிறது என்பது.


4. மனுதாரர் தன்னை வா.சா.1. ஆக விசா ரணைக்கு உட்படுத்தப்பட்டார். உசேன் வா.சா.2 ஆவார். வா.சா.ஆ.1 முதல் 12 வரையிலான ஆவணங்கள் மனுதாரர் தரப்பில் குறியீடு செய் யப்பட்டவை ஆய்ந்து அறியப்பட்டன. எதிர் வழக்கீட்டாளர் தம்மை எ.வா.சா.1. ஆக விசாரணைக்கு உட்படுத்திக் கொண்டார் அவரது தரப்பில் எ.வா.சா.ஆ.1 முதல் 5 வரையிலான ஆவணங்கள் குறியீடு செய்யப்பட்டன.


5. தீர்ப்பாயம் அந்தப் பொருண்மைகளையும் சூழ்நிலைகளையும் கருதுகை செய்ததன் பேரிலும் முந்திய தீர்ப்பினைக் கருதுகை செய்த பின்னரும் - அதாவது இந்த நீதிமன்றத்தினால் இ.மே.எண். 1758/1969க்கு பின்னர் கூறியதாவது: தைக்கா வழக்கில் சொத்தின்மீது எந்த உரிமையையும் கொண்டிருக்கவில்லை. இந்தக் கண்டறிதலின் அடிப்படையில் கீழமை நீதிமன்றம் கூறியதாவது: மனுதாரர் முந்திய தீர்ப்புக்குக் கட்டுப்பட்டவர், மனுதாரரின் உரிமை மூல பாத்தியதை மீது தெளி வான நிலை உள்ளது. இந்த வழக்கு செல்லத் தக்கதல்ல இதில் உரிமை மூல பாத்தியதையின் விளம்புகையினைக் கோருதல் வேண்டும்.


6. மனுதாரரின் வழக்கறிஞர் பணிந்தளிப்ப தாவது: இதில் மூன்று இரண்டாவது மேல் முறையீடுகள் உள்ளன. இவை இந்த வழக்கில் உள்ளடங்கியுள்ளது. முந்தி இ.மே.எண். 497/1951அதன் பின்னர் இதே பிரச்சினை தலை தூக்கியது. இ.மே. 604/1960இல் மற்றும் அறுதியாக - இது இ.மே.எண் 1758/1969இல் முடிவுற்றது. இந்த நீதிமன்றத்தின் அறிவிப்பு தீர்ப்பு இ.மே.எண் 1758/ 1969 இல் இது வா.சா.ஆ.2 என்று குறியிடப் பட்டது. வழக்கறிஞர் பணிந்தளித்ததாவது - காலியிடம் அதாவது தைக்கா கட்டிடத்திற்குக் கிழக்கில் அமைந்துள்ளது. வழக்கில் உள்ள சொத்து, நடைபாதை அதாவது பள்ளிவாசலுக்குச் செல்லும் பாதை - இது வழக்கில் உள்ள சொத் திற்கு வடக்காக உள்ளது. இவை ஒரே சொத்தல்லஇவை வேறுபட்ட சொத்துக்களாகும். முந்திய தீர்ப்பு, அதாவது இ.மே.எண் 1758/1969இல்9உள்ளதில் உறுதியாகக் கூறப்பட்டதாவது - தைகா மற்றும் இதன் உக்தாரர் வழக்கில் உள்ள சொத் துக்கு உரிமையுடையவராவார். இதில் ஒரே நிபந் தனை விதிக்கப்பட்டதாவது - நடைபாதை அதாவது ஆஸாத் சாலையிலிருந்து கிழக்காகப் பள்ளிவாசலுக்கு மேற்கே செல்வது இதனைத் தொல்லை செய்யக் கூடாது என்பது. இவை கீழமை நீதிமன்றத்தினால் ஏற்கப்படவில்லைகீழமை நீதிமன்றம் முழுவதுமாக இதனைத் தவறாக வழிகாட்டின - அதாவது முந்திய தீர்ப்பைத் தவறாகப் புரிந்து - இ.மே.லும் (1758/1969இனை )


7. மாறாக, எதிர் வழக்கீட்டாளர் சார்பாக முன்னிலையாகிற வழக்கறிஞர் பணிந்தளிப்ப தாவது: கீழமை நீதிமன்றம் பொருண்மையின் படியான கண்டறிதல்களை அளித்துள்ளதுஇவற்றைச் சீராய்வு அதிகாரத்தினைப் பயன்படுத்தி, நீதிமன்றங்கள் மாற்ற முடியாது - இவற்றின் கண்டறிதல்கள் தவறானதாகவும் சட்ட முரணானதாகவும் இருந்தாலன்றி. வழக்கறிஞர் பணிந்தளித்துள்ளதாவது: இந்த நீதிமன்றத்திற்கு மிகவும் குறைந்த அதிகாரவரம்பே உள்ளது. எனவே இந்த உரிமையியல் சீராய்வு மனுவினை இவை முறையான மேல் முறையீடாகக் கொள்ள முடியாது என்பது. வழக்கறிஞர் மேலும் பணிந்தளித்ததாவது இமேஎண் 1758/1969இன் தீர்ப்பை - கவனமாகப் படிப்பதில் தெளிவாக அறியப்படுவதாவது: வழக்கில் உள்ள சொத்து தைக்காவிற்கு சொந்தமானதல்ல இதனைக் குறிப்பிட்ட வழக்கறிஞர் பணிந்தளிப்பதாவது: மனுதாரரின் உரிமை மூல பாத்தியதையில் ஒரு களங்கம் என்பது எனவே வழக்கு செல்லத்தக்க தல்ல என்பது. அதாவது மனுதாரர் உரிமை மூலபாத்தியதையை விளம்பக்கோருதல்வேண்டும்; அவ்வாறே, வழக்கறிஞர் பணிந்தளிப்பதாவது - தற்போதைய உரிமையியல் சீராய்வு மனு தள்ளுபடி செய்யத்தக்கதாகும். இந்த வழக்கின் கூறுகளை அறிவதற்கு முன்னர், இந்த நீதிமன்றத்தை அதன் அதிகார வரம்பு பற்றி ஞாபகப்படுத்த வேண்டி யுள்ளது. இதனை அது உரிமையியல் சீராய்வு மனுவில் பயன்படுத்துதல் வேண்டும். சட்டத்தின் நிலை இது இன்னும் தீர்மானிக்கப்படாத பொருட் கூறு அல்ல. சமீப காலத் தீர்ப்பு இதில் உச்ச நீதிமன்றம் நிலையினைத் தெளிவாக விளக்கியுள்ளது.


1969இல்9. உச்சநீதிமன்றமானது அலியத்தம்முதா பூக்காய மற்றும் ஒருவர் எதிர் பட்டக்கால் செரியகோயா மற்றும் பிறர் எனும் வழக்கில் பின்வருமாறு கூறியுள்ளது.


11. மேல் முறையீட்டாளர்கள் தொடர்பாக சீராய்வு அதிகார வரம்பு தொடர்பான வாதங்களாவன உயர்நீதிமன்ற அதிகார வரம்பு தொடர்பாக வஃக்ப் தீர்ப்பாயத்தின் ஆணைக்கு எதிரான ஆணை இதில் கவனிக்கப்பட வேண்டியதாவது: 1995ஆம் ஆண்டின் வஃப் சட்டத்தின் பிரிவு 83(9) வகை செய்வதாவது:


தீர்ப்பாயத்தினால் பிறப்பிக்கப்பட்ட முடிவு அல்லது ஆணை - அது இடை நிலையானதானா லும் பிறவாறானதானாலும், அதன் முடிபு அல்லது செயற்பாட்டிற்கு எதிராக மேல் முறையீடு எதுவும் செய்யப்படுதலாகாது; வரம்புரையாக, உயர்நீதிமன்றமானது தானே முற்பட்டு அல்லது வாரியத்தின் அல்லது குறையுற்றவரின் விண்ணப்பத்தின் பேரில் அந்தப் பதிவேடுகளை கேட்டுப் பெற்று விசாரிக்கலாம் அதாவது தீர்ப் பாயத்தினால் தீர்மானிக்கப்பட்ட பூசல், கேள்வி, அல்லதுபிற பொருட்பாடு எவை தொடர்பாகவும், இதன்மூலம் இது தன்னையே மன நிறைவு கொள்ளச் செய்யும் வகையில், அதாவது தீர்மானிக்கப்பட்டது தொடர்பாக அதன் சரியான தன்மை, சட்டச் சீர்மை, அல்லது சட்ட நிலையை அறிந்து கொள்ளும் வகையில் மேலும் அவ்வாறு தீர்மானிக்கப்பட்டதை உறுதி செய்யும் வகையில் தீர்ப்பை எதிர் மாறாக்கலாம் அல்லது மாற்றலாம், இது தக்கதெனக் கருதும் வேறு ஆணைகளைப் பிறப்பிக்கலாம்;


12. நன்கு தீர்மானிக்கப்பட்டதாவது: சாதாரணமாகச் சீராய்வு அதிகார வரம்பு என்பது கீழமை நீதிமன்றங்களினால் பதிவு செய்யப்பட்ட அனைத்துப் பொருண்மையின் கண்டறிதல் பற்றியும் இடையீடு செய்தல் என்பதல்ல. உயர்நீதிமன்றமானது ஒருபொருண்மையின் கண்டறிதலைத் திருத்தலாம் - அது பொருட்டான சான்றின் அடிப்படையைக் கருதுகை செய்யாது தீர்மானிக்கப்பட்டிருக்குமானால், அல்லது தவ றாகச் சான்றைப் படித்து அளிக்கப்பட்டிருக்கு மானால், முற்றிலும் தவறானதாக இருக்குமானால் இதனால் நீதி பிறழும் நிலை ஏற்படுமானால், அல்லது வேறு வகையில் சட்டத்திற்கு இணங்கி யதல்லாததாக இருக்குமானால், (இந்த நீதிமன்ற - அரசமைப்பு ஆயத்தின் முடிபைப் பார்க்க இந் துஸ்தான் பெட்ரோலியம் கார்ப்பரேசன் வரம்பிடப் பட்டது எதிர் தில்பார் இஸ் வழக்கில் முக்கியமாக, இத்தகைய சீராய்வு அதிகார வரம்பின் வீச்சு விரிவானதாகும். இதில் உயர்நீதிமன்றத்திற்குக் கீழமை நீதிமன்ற ஆணைகளின் சட்டச் சீர்மை அல்லது சட்டமுறையை பற்றி ஆய்வு செய்யும் அதிகாரம் உள்ளது. செய்சட்டங்களின்படி சீராய்வு அதிகாரங்கள் அத்தகைய நிலைகளில், உயர்நீதிமன்றம் பொருண்மைகளின் கண்டறிதல் களின் சரியான தன்மையினை ஆய்வு செய்யும் மீண்டும் சான்றினைஆராயும் உச்சநீதிமன்றம் ராம்தாஸ் எதிர் ஈஸ்வரசந்தர் எனும் வழக்கில் இந்த நிலையில் மேல்முறையீட்டாளரின் வாதம் கருதுகை செய்யப்பட வேண்டும்”


10. இதில் தெளிவாக்கப்படுவதாவது: மேற்சொல்லப்பட்ட தீர்ப்பில் இந்த நீதிமன்றம்அதன் சீராய்வு அதிகாரத்தினால் செலுத்துவதில் இதற்கு அதிக முக்கியமான அதிகாரம் உள்ளது. இந்த நீதிமன்றம் இதன் சரியான தன்மை குறித்த விசாரணை செய்யும் பொருண்மையைக் கண்டறிவது தொடர்பாகவும், மீண்டும் சான்றினை மறுமதிப்பீடு செய்யும். ஏனெனில் இதில் முறை யான மேல் முறையீட்டுத் தீர் வழி கிடைக்கத் தக்கதாக இல்லை - அதாவது வஃப் தீர்ப்பாயத் தினால் பிறப்பிக்கப்பட்ட ஆணைக்கு எதிராக எனவே, முறைப்படியான அணுகுமுறையில் சீராய்வு அதிகாரத்தினைப் பயன்படுத்தி சீராய்வு அதிகாரம் ஆணைக்கு எதிராகப் பயன்படுத் தப்படுதலாகாது. இந்த நிலையே மீண்டும் உச்சநீதிமன்றத்தினால் மேல் சொல்லப்பட்ட தீர்ப்பில் வலியுறுத்தப்பட்டுள்ளது.


11. தற்போதைய வழக்கின் பொருண்மை களைப் பொருத்தவரை இந்த நீதிமன்றத்தினால் இ.மே.எண். 1758/1969 இல் பிறப்பிக்கப்பட்ட முந்திய தீர்ப்பினை இது கவனிக்கும். இதுவே போதுமானதாகும். இதன்மூலம் சொத்தின்மீதான உரிமை, உரிமை மூல பாத்தியதை மற்றும் உரித்தம் தொடர்பானவற்றை இந்த நீதிமன்றம் கண்டறிய இது இயல்விக்கும்.


12. தொடர்புடைய தீர்ப்பின் பகுதி - அதாவது இ.மே. எண் 1758/1969இன் சுருக்கம் பின்வருமாறு


எ.வா.சா.ஆ.10 தீர்ப்பினைக் கூர்ந்தாய்வு செய்வதில் கண்டறியப்படுவது தைக்காப்பகுதி என்று சுட்டப்பட்ட பகுதி பள்ளிவாசலுக்குச் சொந்த மானதல்ல என்பது அதே நேரத்தில், தைக்காவின் ஹக்தாரின் மேலாளண்மைக்கு உரிமையளிக்கப் பட்டது. இதனால் தீர்ப்பில் வா.சா.ஆ.3 & எ.வா.சா.ஆ.10 தெளிவாகவும், சந்தேகமின்றியும் இந்தப் பொருண்மையினை ஏற்கிறது. அந்த மசூதிக்கு தைக்கா சொத்தின்மீது எந்த உரிமையும் இல்லை என்பது தைக்கா சொத்து - மசூதியின் சொத்திலிருந்து மாறுபட்டது. அந்தச் சொத்தின் மேலாண்மை பல்வேறு பரம்பரையாக உள்ளது.ஹக்தார் இந்த அலுவலகம் பரம் பரையானது. எனவே இதனை மேலோட்டமாகப் பார்க்கும்போதே எவ்வாறு மசூதிக்கு இந்த தைக்கா பகுதியின் மேலாண்மை உரிமை உள்ளது என்பதும் எவ்வாறு அதற்கு மேலாண்மை அல்லது கட்டுப்பாட்டு உரிமை உள்ளது என்பதும் அறியப்படவில்லை. வேறு வகையில், இரண்டு முடிவுகள் - தெளிவாக்குவதாவது தைக்காவின் அனுபோகத்தில் உள்ள பகுதி நிலம் தைக்காவிற்கு கெளிலல்லைலதுல் காக்ககாவின் பங்களைய வர்களை முழுவதுமாகச் சொந்தமானது. இது பகுதியுடன் தொடர்புடையதல்ல தைக்கா ஹக்தாரன் தனிப்பட்ட மேலாண்மைக்கு உட்பட்டது. இந்த அளவுக்கு தெளிவாயிருக்குமானால் இதில் முரண்பாடு எதுவும் இல்லை. அதாவது ஹக்தார் - எதிர்வாதி புதுப்பித்தல் அல்லது பழுதுபார்த்தல் என்னும் வகைக்குத் தேவையான அனைத்து நட வடிக்கைகளையும் மேற்கொள்ள உரிமையுடைய வராவார். இதில் புதிய சுவர்களை அமைத்தல் புதிய கட்டுமானங்களையும் செய்யலாம். இவை தைக்காவின் நலன்களைப் பாதுகாக்கவும் காக்கும் நோக்கத்திற்குமானதாகும். உரியவாறு கடமைகளைச் செய்வதற்கு ஹக்தார்களுக்குத் தற்போது எதிர்வாதி என்ன செய்யக் கருதியுள்ளார் என்பது இதில் துறவிகள் புதைக்கப்பட்ட பகுதிகளைச் சுற்றி அதனை வெய்யில் மற்றும் மழையிலிருந்து பாதுகாப்பதற்கான உரிய நடவடிக்கையை மேற்கொள்ளுதல் இந்தக் காரணங்களுக்காக, கீழமை நீதிமன்றத்தின் முடிவுகள் தெளிவாகத் தவறானவை என்று கூறுவதில் எனக்கு எந்தத் தயக்கமும் இல்லை . வா.சா.ஆ.3 & எ.வா.சா.ஆ.10 தீர்ப்பின் நீதிமன்ற முடிவில் தவறாகப் புரியப்பட்டுள்ளன. இரண்டா வது மேல் முறையீட்டின் முடிவு - அனுமதிக்கப் படுகிறது. வாதியின் வழக்கு தள்ளுபடி செய்யப்படுகிறது.


13. மமேற் சொல்லப்பட்ட கண்டறிதல் இதனைத் தெளிவாக்குவதாவது - இந்த நீதிமன்றம் வழங்கியத் தீர்ப்புகள் இ.மே.எண் 4971951 & இ.மே. எண் 604/1960இல் முன்பு பிறப்பிக்கப்பட்டவற்றைக் கருதுகைக்கு எடுத்துக் கொண்டுள்ளது. இந்த நீதிமன்றம் கூறியுள்ள தாவது: தைக்காவிற்குச் சொந்தமான சொத்தின் மீது பள்ளிவாசலுக்கு எந்த உரிமையும் இல்லை என்பது தைக்கா சொத்து - மசூதியின் சொத்தி லிருந்து முழுவதும் மாறுபட்டது. இந்தச் சொத்து பல தலைமுறைகளாக உள்ளது. ஹக்தார் - இன் பரம்பரை அலுவலகத்துக்குச் சொந்தமானதுஇத்தகைய முடிவிற்கு வரும்போது இந்த நீதிமன்றம் கூறியதாவது: தைக்காவினால் அனுபோகத்தில் கொள்ளப்பட்டுள்ள சொத்தின் பகுதி (அதாவது தற்போதைய வழக்கில் பூசலில் உள்ள சொத்து) தைக்காவிற்குச் சொந்தமான சொத்து அனைத்தும் பள்ளி வாசலில் இருந்து வேறுபட்டவை. இந்த நீதிமன்றம் இதன் கண் டறிதலில் எந்த சந்தேகமும் கொண்டிருக்க வில்லை. இதுவே இ.மே.எண் 1758/1969இல் கூறப்பட்ட கண்டறிதல்.


14. கீழமை நீதிமன்றம் இந்தத் தீர்ப்பை வாசிப்பதில் அதனைத் தவறாகப் புரிந்துள்ளது. அதாவது தைக்காவின் உரிமை அதன் கட்டடத்திற்கு மட்டுமே உரியது என்று அதனைச் சுற்றியுள்ள நிலங்களின் மீது அன்று என்றும் இது நீதிமன்றக் கருத்தில் முந்தியத் தீர்ப்பு தவறாகப் படிக்கப்பட்டதன் காரணம் - இது இந்த நீதிமன்றத்தினால் பிறப்பிக்கப்பட்டது.


15. இந்த நீதிமன்றம் ஏற்கெனவே கூறியுள்ள தாவது: முந்திய மூன்று நேர்வுகளில் அதாவது உரிமை மூல பாத்தியதை உரித்தம் - தொடர்பான உரிமை - அதாவது வழக்கில் தைக்காவின் சொத்து தொடர்பாக இந்த வழக்கில் உய்தியாக விளம்புகை செய்யக் கோருவது தேவையில்லை. எதிர் வழக்கீட்டாளர் - பள்ளிவாசலின் சார்பாற்றுநராகக் கோரியுள்ளார். அவர் இந்த வழக்கில் வாதாடியதாவது - தனிப்பட்ட நிலையில், அவருக்குப் பள்ளிவாசலில் எந்த உரிமையும் இல்லை . கீழமை நீதிமன்றம் இந்த முக்கிய விவரத்தினைக் கவனிக்கத் தவறியுள்ளது.


16. இந்த நீதிமன்றத்தின் கருதுகையின் படியான கருத்தாவது: கீழமை நீதிமன்றத் தீர்ப்பு இந்த நீதிமன்றத்தின் இடையீட்டைத் தேவையாக் குகிறது. அதாவது வட்டார அதிகார வரம்பைச் செலுத்துவதில் கீழமை நீதிமன்றத்தினால் அளிக் கப்பட்ட கண்டறிதல் சட்டத்திற்கு முரணானது உறுதியற்றது. இது தவறான புரிதலின் பேரில் அமைந்துள்ளது. இதில் முந்திய இ.மே.எண். 1758/ 1969இன் தீர்ப்பு தவறாகப் புரிந்து கொள்ளப் பட்டுள்ளது.


17. விளைவாக - உரிமையியல் சீராய்வு மனு அனுமதிக்கப்படுகிறது. வஃப் தீர்ப்பாயத்தினால் முதன்மை சார்பு நீதிமன்றம் திருநெல்வேலியினால் மு.வ.எண். 378/2010இல் அளிக்கப்பட்ட தீர்ப்பு மற்றும் தீர்ப்பாணை தள்ளுபடி செய்யப்படுகிறது. மனுதாரரினால் முன்னிடப்பட்ட வழக்கில் கோரப்பட்டவாறு தீர்ப்பாணை பெறுகிறது. செலவுத் தொகையில்லை - இதன் விளைவாக தொடர் புடைய பல்வகை மனு தள்ளுபடி செய்யப்படுகிறது.


Popular posts from this blog

பஞ்சாயத்து தலைவருக்கு எவ்வளவு சம்பளம் தெரியுமாகோடிகள், புரளும் (ஊராட்சிகளில் ஊழல் நடப்பது எப்படி....

FIR-ல் வெளியான அதிர்ச்சி-பற்கள் பிடுங்கப்பட்ட விவகாரத்தை சிபிசிஐடி விசாரணைக்கு மாற்றி டிஜிபி சைலேந்திரபாபு உத்தரவிட்டுள்ளார்.

சமூக வலைதள யூடியூபருக்கு, 1 லட்சம் அபராதம் கட்டிய உதவி ஆய்வாளர் இசக்கி ராஜா – மனித உரிமை ஆணையம் உத்தரவு