மார்ச் 31 வரை பயணிகள் ரயில் ரத்து

மார்ச் 31 ம் தேதி வரை, நாடு முழுவதும் பயணிகள் ரயில்கள் அனைத்தும் ரத்து செய்யப்பட்டு உள்ளன.


குறிப்பாக புற நகர் ரயில்களும் ஓடாது என அறிவிக்கப்பட்டு உள்ளது. கொரோனா வைரஸ் சமூக தொற்றாக பரவாமல் தடுக்க இந்தியன் ரயில்வே இந்நடவடிக்கையை எடுத்துள்ளது. ரயில்கள் ரத்து குறித்து வெளியிட்டுள்ள அறிவிப்பின் படி, தொலைதூர மெயில் - விரைவு ரயில்கள், இண்டர்சிட்டி இணைப்பு ரயில்கள் உள்பட அனைத்து பயணிகள் ரயில்களும் 31 ம் தேதி நள்ளிரவு 12 மணி வரை இயங்காது.


இதேபோல, பறக்கும் ரயில், புறநகர் ரயில் சேவையும் ரத்து செய்யப்பட்டு உள்ளது.  நாடு முழுவதும் மெட்ரோ ரயில்களும் மார்ச் 31 ம் தேதி நள்ளிரவு 12 மணி வரை ஓடாது என தெரிவிக்கப்பட்டு உள்ளது.  


அதே நேரம், நாடு முழுவதும் சரக்கு  ரயில்கள் மட்டும் இயங்கும் என அறிவிக்கப்பட்டு உள்ளது.