இனி 3 மணிநேரத்தில் கொரோனா வைரஸைக் கண்டறியலாம்: சாதித்த இந்தியப் பெண் மினல் போஸ்லே..!

தனது பெண் குழந்தை பிறப்பதற்கு சில மணி நேரங்களுக்கு முன்னதாக, மூன்று மணி நேரத்துக்குள்ளாக கொரோனா வைரஸுக்கான கிட்டைக் கண்டுபிடித்துள்ளார் மஹாராஷ்ட்ராவைச் சேர்ந்த வைராலஜி நிபுணர் மினல் தகாவே போஸ்லே.


இந்தியாவிற்கு கொரோனா வைரஸ் பாதிப்பைக் கண்டறியும் கருவிகள் அடங்கிய கிட், இதுவரை ஜெர்மனியில் இருந்தே இறக்குமதி செய்யப்பட்டு வந்தது. அந்தக் கருவியைக் கண்டுபிடிக்கும் பணியில் புனே நகரில் இயங்கிவரும் ’Mylab Discovery’ என்ற நிறுவனம் ஈடுபட்டது.


மை லேப் டிச்கவரி நிறுவனத்தின் ஆய்வு மற்றும் வளர்ச்சித் துறையின் தலைவர்தான் மினல் தகாவே போஸ்லே. இவர் தன் எட்டுமாதக் குழந்தையை கருவில் வைத்திருந்த கர்ப்பிணி. எனினும் நாட்டின் நலனுக்காக கொரோனா வைரஸ் கருவியை உருவாக்கும் முயற்சியில் ஈடுபட்டிருக்கிறார்.


ஆறு வார காலத்தில் கொரோனா பரிசோதனைக் கருவியை உருவாக்கி முடித்துள்ளனர் மினல் தகாவே போஸ்லே தலைமையிலான குழுவினர். பிரசவத்துக்கு சில மணி நேரங்களுக்கு முன்பும் கூட இவர் ஆய்வு பணியில் தன்னை ஈடுபடுத்திக்கொண்டுள்ளார்.


வியக்கத்தக்க இந்த அற்புதமான முயற்சிக்கு பல்வேறு தரப்பில் இருந்தும் பாராட்டு மழை பொழியத் தொடங்கியுள்ளது. தொழிலதிபர் ஆனந்த் மஹேந்திரா, வாணி கோரி உள்ளிட்ட பல பிரபலங்களும் துணைக் குடியரசுத் தலைவர் வெங்கய்யா நாயுடுவும் மினல் இரு குழந்தைகளைப் பெற்றிருப்பதாக பாராட்டியுள்ளனர்.


மினல் தகாவே போஸ்லே பிடிஐ செய்தி நிறுனத்துக்கு தொலைபேசி வழியாக பேசுகையில், ”எனது உடல் நலனைவிடவும் நாட்டின் நலனே முக்கியம் என்பதால் கொரோனா வைரஸ் பரவல் குறித்து அறிந்ததும் ஆய்வுப் பணியில் ஈடுபட்டோம். நான் இரு குழந்தைகளை பெற்றிருக்கிறேன்” என்று தெரிவித்துள்ளார்.


Popular posts from this blog

பஞ்சாயத்து தலைவருக்கு எவ்வளவு சம்பளம் தெரியுமாகோடிகள், புரளும் (ஊராட்சிகளில் ஊழல் நடப்பது எப்படி....

மன்னிப்பு கேட்கிறவன் மனுஷன்.. மன்னிக்க தெரிஞ்சவன் பெரிய மனுஷன்.... இந்த விவகாரத்தில் யோகிபாபு பெரிய மனுஷன் தான்..!

நோன்பு சட்டதிட்டங்கள்-(ஷாபியீ, ஹனபி)