20 நிமிடங்களுக்குள் ஜும் ஆ தொழுகை... கைகுலுக்குவதை தவிர்க்கவும் - ஜமா அத்துல் உலமா சபை வேண்டுகோள்!

கொரோனா வைரஸ் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக தமிழகத்தில் உள்ள பள்ளிவாசல்களுக்கு தமிழக ஜமாஅத்துல் உலமா சபை முக்கிய வேண்டுகோள் விடுத்து அறிக்கை வெளியிட்டுள்ளது.


அதில், கூறப்பட்டிருப்பதாவது, உலகை அச்சுறுத்தி வருகிற கொரோனா வைரஸ் பரவலிலிருந்து பாதுகாத்துக் கொள்ள எதிர்வரும் 15 நாட்கள் மிக எச்சரிக்கையாக இருக்க வேண்டியவை என்று இந்திய அரசு அறிவித்துள்ளது.


அதனால் சில எச்சரிக்கைகளக் கடைபிடிக்குமாறு தமிழ்நாடு ஜமா அத்துல் உலமா சபை கேட்டுக் கொள்கிறது.


1. சளி, இருமல், தொண்டை வலி, உயர் ரத்த அழுத்தம் போன்ற நோய்களால் பாதிக்கப்பட்டவர்கள் மற்றும் சீக்கிரமாக கிருமித்தொற்று ஏற்படக் கூடிய நபர்கள் பள்ளிவாசல்கள் மற்றும் மக்கள் அதிகம் கூடும் இடங்களுக்குச் செல்வதை தவிரிக்கவும். அவசியமாக வெளியே சொல்ல நேர்ந்தால் முகக்காப்பு அணிந்து செல்லவும்.


2.மதரசாக்கள், அரபுக் கல்லூரிகளுக்கு வரும் 31-ம் தேதி வரை விடுமுறை அளிக்கவும்.


3.அதிக நேரங்கள் நெருக்கமாக மக்கள் ஒன்றுகூடுவதைத் தவிர்க்க வேண்டும் என்பதால் ஆலிம்கள் இனிவரும் மூன்று ஜும் ஆ தொழுகைகளை 20 நிமிடங்களுக்குள் நிறைவு செய்திடவும்.


4.கைகுலுக்குவதைத் தவிர்க்குமாறு கேட்டுக் கொள்ளப்பட்டிருப்பதால் இந்த எச்சரிக்கை காலம் முடியும் வரை தவிர்த்துக் கொள்வது நல்லது.


5.பள்ளிவாசல்களில் கை, கால்கள் கழுவும் இடங்கள், கழிவறைகள் ஆகியவற்றின் தூய்மையில் அதிக கவனம் செலுத்தவும்.


தொழுகைக்கு முன்பும் பின்பும் கிருமி நாசினிகளை பயன்படுத்தவும்.


6.தங்கள் சொந்த தொப்பிகளையே தொழுகையாளிகள் பயன்படுத்தவும்.


7.புனித மிராஃஜ் இரவு நிகழ்ச்சிகளின் நேரத்தை சுருக்கிக் கொள்ளவும்.” இவ்வாறு அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது


Popular posts from this blog

பஞ்சாயத்து தலைவருக்கு எவ்வளவு சம்பளம் தெரியுமாகோடிகள், புரளும் (ஊராட்சிகளில் ஊழல் நடப்பது எப்படி....

மன்னிப்பு கேட்கிறவன் மனுஷன்.. மன்னிக்க தெரிஞ்சவன் பெரிய மனுஷன்.... இந்த விவகாரத்தில் யோகிபாபு பெரிய மனுஷன் தான்..!

காவலர்கள் மீது எடுக்கப்பட்ட நடவடிக்கை போதுமானதா என்ற கேள்வி எழுகிறது.?கொதிக்கும் சமூகம்