திருமண நிகழ்ச்சிகளில் 20 பேருக்கு மேல் கூட தடை - மத்திய அரசு முக்கிய அறிவிப்பு!

கொரோனா வைரஸ் அச்சத்தை தொடர்ந்து மத்திய அரசு முக்கிய அறிவிப்பை வெளியிட்டுள்ளது.


உலக நாடுகளை அடுத்து, இந்தியாவில் கொரோனா வைரஸ் குறித்த அச்சம் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. இதுவரை 4 பேர் உயிரிழந்த நிலையில் 167 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர்.


இப்படி இருக்கையில், மலேசியா, பிலிப்பைன்ஸ், ஆஃப்கானிஸ்தான் ஆகிய நாடுகளில் இருந்து இந்தியாவுக்கு விமானங்கள் தரையிறங்க மத்திய அரசு மார்ச் 31ம் தேதி வரை தடை விதித்திருந்தது.


திருமண நிகழ்ச்சிகளில் 20 பேருக்கு மேல் கூட தடை  - மத்திய அரசு முக்கிய அறிவிப்பு!
மேலும், உள்நாட்டில் கர்நாடகா, கேரளா, டெல்லி போன்ற மாநிலங்களுக்கான விமான சேவைகளும் ரத்து செய்யப்பட்டுள்ளன. இந்நிலையில், முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக மத்திய அரசு முக்கியமான அறிவிப்புகளை வெளியிட்டுள்ளது.


அதன்படி, மார்ச் 22ம் தேதி நள்ளிரவு 12 மணி முதல் மார்ச் 29ம் தேதி நள்ளிரவு 12 மணி வரை வெளிநாட்டு விமானங்கள் இந்தியாவில் தரையிறங்க தடை விதிக்கப்பட்டுள்ளது.


ரயில் மற்றும் விமானங்களில் நோயாளிகள், மாணவர்கள் மற்றும் மாற்றுத் திறனாளிகள் தவிர மற்றவர்களுக்கான பயண சலுகைகள் ரத்து.


65 வயதுக்கு மேற்பட்ட முதியவர்களும், 10 வயதுக்குட்பட்ட குழந்தைகளும் தங்களது வீடுகளை விட்டு வெளியே செல்லக் கூடா
தனியார் துறை ஊழியர்கள் வீட்டிலிருந்தபடியே (work from home) பணியாற்ற மாநில அரசுகள் அனுமதிக்க வேண்டும் என மத்திய அரசு அறிவுறுத்தியுள்ளது.


இதேபோல, மார்ச் 31ம் தேதி வரை டெல்லியில் உள்ள ஹோட்டல்களில் உட்கார்ந்து உணவு உண்ண தடை விதித்ததோடு, பார்சல்களை மட்டும் வாங்கிச் செல்ல அனுமதித்துள்ளது டெல்லி அரசு.


மேலும், 20 பேருக்கு மேல் திருமணம் உள்ளிட்ட பொது நிகழ்ச்சிகளில் கூடக் கூடாது என முதலமைச்சர் கெஜ்ரிவால் அறிவித்துள்ளார்.


Popular posts from this blog

பஞ்சாயத்து தலைவருக்கு எவ்வளவு சம்பளம் தெரியுமாகோடிகள், புரளும் (ஊராட்சிகளில் ஊழல் நடப்பது எப்படி....

FIR-ல் வெளியான அதிர்ச்சி-பற்கள் பிடுங்கப்பட்ட விவகாரத்தை சிபிசிஐடி விசாரணைக்கு மாற்றி டிஜிபி சைலேந்திரபாபு உத்தரவிட்டுள்ளார்.

சமூக வலைதள யூடியூபருக்கு, 1 லட்சம் அபராதம் கட்டிய உதவி ஆய்வாளர் இசக்கி ராஜா – மனித உரிமை ஆணையம் உத்தரவு