பள்ளிவாசல் மீது பெட்ரோல் குண்டு வீசிய வழக்கில் 2 பேர் கைது
கோவையில் இந்து முன்னணி மாநகர் மாவட்ட தலைமை அலுவலகம் மீது பெட்ரோல் குண்டு வீசப்பட்ட சம்பவம் தொடர்பாக, காவல் துறையினர் விசாரித்து வருகின்றனர்.
காட்டூர் ரங்கே கோனார் வீதியில் உள்ள ஒரு கட்டிடத்தின் முதல் தளத்தில் இயங்கிவரும் இந்த அலுவலகத்தில், நேற்று முன்தினம் இரவு பணி முடிந்த பின்னர் ஊழியர்கள் அறையை பூட்டிச் சென்றனர். நேற்று காலை அலுவலக ஊழியர் சிவா, அலுவலகத்தின் வெளிப்புற பிரதான கதவைத் திறந்தபோது, படிக்கட்டு அருகே பாட்டில் உடைந்து கிடந்தது.
சுவரின் குறிப்பிட்ட பகுதி கருப்பு நிறத்தில் இருந்தது. மர்ம நபர்கள், மதுபாட்டிலில் பெட்ரோல் ஊற்றி, அதில் திரியை போட்டு பற்றவைத்து, இந்து முன்னணி அலுவலக வளாகத்தில் வீசிச் சென்றது தெரியவந்துள்ளது. காற்றின் வேகத்துக்கு திரியில் இருந்த தீ அணைந்து இருக்கலாம் என தெரிகிறது.
இந்த சம்பவம் தொடர்பாக ஆய்வாளர் லதா தலைமையிலான காட்டூர் காவல் துறையினர், சம்பவ இடத்துக்குச் சென்று விசாரணையில் ஈடுபட்டனர். சட்டம் ஒழுங்கு துணை ஆணையர் பாலாஜி சரவணன், துணைக் கண்காணிப்பாளர் கார்த்திகேயன் ஆகியோர் சம்பவ இடத்தைப் பார்வையிட்டு விசாரணையை துரிதப்படுத்தியுள்ளனர்