காவல் நிலையம் அருகே, அடுத்தடுத்து 2 நாட்டு வெடிகுண்டுகளை வீசி மர்ம நபர்கள்

சென்னையில், காவல் நிலையம் அருகே, அடுத்தடுத்து 2 நாட்டு வெடிகுண்டுகளை வீசி மர்ம நபர்கள் நடத்திய தாக்குதல் சம்பவம் அதிர்வலைகளை ஏற்படுத்தியிருக்கிறது. 


சென்னை அண்ணா மேம்பாலத்தில் இருந்து இறங்கி, மாலை 4 மணியளவில், தேனாம்பேட்டை நோக்கி செல்லும் அண்ணா சாலையில் இரு சக்கர வாகனம் ஒன்று வந்துள்ளது. அதில் வந்த நபர்கள், எதிர்புறம் வந்த ஃபார்ட்சூனர் கார் மீது அடுத்தடுத்து 2 நாட்டு வெடிகுண்டுகளை வீசியதாக சொல்லப்படுகிறது.


சுதாரித்துக் கொண்ட அந்த காரில் இருந்த நபர்கள், இடது புறம் உள்ள மேயர் சுந்தர்ராவ் சாலையில் திரும்பி தப்பிச் சென்றதாக கூறப்படுகிறது. இதைக்கண்டு, சக வாகன ஓட்டிகள் அதிர்ச்சியடைந்தனர்.


அடுத்தடுத்த விழுந்த நாட்டு வெடிகுண்டுகளின் சப்தத்தால், நிகழ்விடத்திலிருந்து, 100 மீட்டர் தொலைவில் இருந்த காவல் நிலையத்தில் இருந்து போலீசார் ஓடிவந்தனர்.


பெரும் சப்தத்துடன் நாட்டு வெடிகுண்டுகள் வெடித்தபோது ஏற்பட்ட அதிர்வு காரணமாக, சொகுசு கார் விற்பனை நிலைய கண்ணாடிகள் மற்றும் விற்பனை நிலையத்தின் முன்பாக நிறுத்தப்பட்டிருந்த கார் கண்ணாடி உள்ளிட்டவை சேதமடைந்தன. மேலும் மொத்த கட்டிடமே அதிர்ந்ததால் கட்டிடத்தில் இருந்தவர்கள் பதறியபடி வெளியே ஓடி வந்துள்ளதாக தெரிவித்துள்ளனர்.


நாட்டு வெடிகுண்டுகளை வீசிச்சென்ற நபர்கள் நிற்காமல் வேகமாக சென்றுள்ளனர். இது தொடர்பாக தேனாம்பேட்டை காவல்துறையினர் புகார் பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். தடயவியல் துறை உதவி இயக்குனர் சோபியா நேரில் வந்து ஆய்வு செய்து வெடித்த நாட்டு வெடிகுண்டுகளின் வேதிப்பொருட்களின் துகள்கள் சேகரிக்கப்பட்டது.


வெடிகுண்டு வீசிய நபர்கள் யார், எதற்காக வீசிசென்றனர், காரில் தப்பிச் சென்றவர்கள் யார்? என்பது குறித்து தீவிர விசாரணை நடைபெற்று வருகிறது. இதனிடையே சம்பவம் நடந்த இடத்திற்கு வந்த சென்னை காவல் ஆணையர் ஏ.கே.விஸ்வநாதன் நேரில் பார்வையிட்டு விசாரணையை முடுக்கிவிட்டுள்ளார்.


Popular posts from this blog

பஞ்சாயத்து தலைவருக்கு எவ்வளவு சம்பளம் தெரியுமாகோடிகள், புரளும் (ஊராட்சிகளில் ஊழல் நடப்பது எப்படி....

மன்னிப்பு கேட்கிறவன் மனுஷன்.. மன்னிக்க தெரிஞ்சவன் பெரிய மனுஷன்.... இந்த விவகாரத்தில் யோகிபாபு பெரிய மனுஷன் தான்..!

காவலர்கள் மீது எடுக்கப்பட்ட நடவடிக்கை போதுமானதா என்ற கேள்வி எழுகிறது.?கொதிக்கும் சமூகம்