.2 லட்சம் லஞ்சம் வாங்கிய அரசு வழக்கறிஞர் கைது!

ஆந்திர மாநிலம், நெல்லூரில் ஆலோசனை வழங்க 2 லட்ச ரூபாய் லஞ்சம் வாங்கிய அரசு வழக்கறிஞர் கைது செய்யப்பட்டார். 


காவாலி பகுதியை சேர்ந்த கவிதா என்பவர் 2018ஆம் ஆண்டு ஒரு வழக்கில் நீதிமன்றத்தில் சாட்சியம் அளித்திருந்தார். இந்த வழக்கு தற்போது வரை நடைபெற்று வரும் நிலையில், இதில் நீதி ஆலோசனை பெறுமாறு கவிதாவுக்கு நீதிமன்றம் உத்தரவிட்டது. அதற்காக பரத் என்ற அரசு வழக்கறிஞரையும் நீதிமன்றம் பரிந்துரை செய்திருந்தது. அதன்படி பிப்ரவரி 28ஆம் தேதி வழக்கறிஞர் பரத்திடம் ஆலோசனை வழங்குமாறு கேட்டுள்ளார். 


அதற்கு 10 லட்ச ரூபாய் வரை லஞ்சமாக கொடுக்க வேண்டுமென பரத் கேட்டதாகக் கூறப்படுகிறது. இதுபற்றி லஞ்ச ஒழிப்புத்துறை அதிகாரிகளிடம் கவிதா புகார் அளித்தார்.  வழக்கறிஞரிடம் பணம் கொடுக்குமாறு அதிகாரிகள் கவிதாவிடம் கூறினர். அவ்வாறு 2 லட்சம் ரூபாயை கவிதா வழக்கறிஞரிடம் கொடுத்துள்ளார். அப்போது மறைந்திருந்த லஞ்ச ஒழிப்பு துறை போலீசார் வழக்கறிஞர் பரத்தை கைது செய்தனர்.