டெல்லி மத நிகழ்ச்சியில் பங்கேற்ற 2 ஆயிரம் பேரில் 300 பேருக்கு கொரோனா அறிகுறி... அதிர்ச்சி தகவல்

மலேசியா, இந்தோனேசியா, சவுதி அரேபியா மற்றும் கிர்கிஸ்தான் உள்ளிட்ட 2,000 க்கும் மேற்பட்ட பிரதிநிதிகள் மார்ச் நடுப்பகுதியில் ஒரு முஸ்லீம் மத அமைப்பான தப்லீ-இ-ஜமாத்தின் கூட்டத்தில்  கலந்து கொண்டனர்.


மார்ச் 24 அன்று 21 நாள் நாடு தழுவிய ஊரடங்கு விதிக்கப்பட்டிருந்தாலும், இந்த காலகட்டத்திற்குப் பிறகும் 1,400 பேர் ஜமாஅத்தின் மர்க்காஜ் என அழைக்கப்படும் அமைப்பில்  தொடர்ந்து தங்கியிருந்தனர்.


இதில் ஒரு பகுதியாக இருந்த 300 க்கும் மேற்பட்டோர் டெல்லியில் கொரோனா வைரஸ் பரிசோதனை செய்ய வெவ்வேறு மருத்துவமனைகளுக்கு கொண்டு செல்லப்பட்டு தனிமையில் வைக்கப்பட்டுள்ளனர்.


அந்தமான் மற்றும் நிக்கோபார் தீவுகளில் ஒன்பது பேருக்கு இருப்பது உறுதிபடுத்தப்பட்டு உள்ளது.அவர்களில் ஒருவரின் மனைவிக்கு கொரோனா பாதிப்பு இருப்பது சோதனையில் தெரியவந்து உள்ளது.


தெலுங்கானாவில் உள்ள 6 பேரில், இரண்டு பேர் காந்தி மருத்துவமனையிலும், அப்பல்லோ மருத்துவமனை, குளோபல் மருத்துவமனை, நிஜாமாபாத் மற்றும் கட்வாலிலும் தலா ஒருவர் இறந்தனர்.


தெலுங்கானாவைச் சேர்ந்த பலர் மூன்று நாள் ஜமாத்தில் கலந்து கொண்டதாகவும், அவர்களில் பலர் கொரோனா வைரஸ் நோயால் பாதிக்கப்பட்டுள்ளனர். இதில்  சம்பந்தபட்டவர்கள் பரிசோதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருவதாகவும் கூறப்பட்டு உள்ளது.


இந்த ஜமாத்தில் பங்கேற்ற அனைவரும் அதிகாரிகளை தொடர்பு கொள்ளுமாறு அதிகாரிகள் வேண்டுகோள் விடுத்துள்ளனர். இந்த நிகழ்வுக்குப் பிறகு தெலுங்கானாவுக்குச் சென்ற குறைந்தது 10 இந்தோனேசியர்களுக்கு கொரோனா இருப்பது உறுதி செய்யப்பட்டு உள்ளது.


இந்நிலையில், மத நிகழ்ச்சிகள் முடிந்த பின்னரும் மசூதிக்குள் தங்கியிருந்த 200-க்கும் அதிகமானோர் இருமல், காய்ச்சல், ஜலதோஷம் உள்ளிட்ட கொரோனா அறிகுறிகள் டெல்லியில் உள்ள பல்வேறு மருத்துவமனைகளில் நேற்று அனுமதிக்கப்பட்டனர்.


இதையடுத்து, மசூதிக்குள் இருந்த அனைவரையும் அங்கிருந்து போலீசார் அப்புறப்படுத்தி கொரோனா பரிசோதனைக்கு உள்படுத்தியுள்ளனர். 


மேலும், மசூதி இருந்த பகுதி முழுவதும் சீல் வைக்கப்பட்டு போலீசாரின் கட்டுப்பாட்டின் கீழ் கொண்டுவரப்பட்டுள்ளது. 


'வாகன பாஸ் வழங்கப்படாததால் சீல் வைக்கப்பட்டதை தொடர்ந்து நிஜாமுதீன் மார்க்கஸில் சுமார் 1,000 பேர் சிக்கிக்கொண்டுள்ளனர்.


டெல்லியின் நிஜாமுதீன் மேற்கு பகுதியில் திங்கள்கிழமை போலீசார் மற்றும் துணை ராணுவ வீரர்கள் சுற்றி வளைத்து உள்ளனர். 


இதற்கிடையே, இஸ்லாமிய மத நிகழ்ச்சிக்கு ஏற்பாடு செய்த ஒருங்கிணைப்பாளர்கள் மீது வழக்குப்பதிவு செய்ய டெல்லி முதல்மந்திரி அரவிந்த் கெஜ்ரிவால் உத்தரவிட்டுள்ளார். 


டெல்லி காவல்துறை, மத்திய ரிசர்வ் போலீஸ் படை (சிஆர்பிஎஃப்) அதிகாரிகள் மற்றும் மருத்துவக் குழுக்கள் ஞாயிற்றுக்கிழமை இரவு தென் டெல்லி பகுதிக்குச் சென்றுள்ளன. ஏராளமான மக்கள் இந்த நோய்க்கான அறிகுறிகள் இருப்பதாக தகவல்கள் தெரிவித்தன.


தமிழகத்தில் இருந்தும் பலர் டெல்லி மத நிகழ்ச்சியில் பங்கேற்றுள்ளனர். அவர்களது தகவல்களை திரட்டும் பணி தீவிரமாக நடைபெற்றுவருவதாக தமிழக அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.


Popular posts from this blog

பஞ்சாயத்து தலைவருக்கு எவ்வளவு சம்பளம் தெரியுமாகோடிகள், புரளும் (ஊராட்சிகளில் ஊழல் நடப்பது எப்படி....

மன்னிப்பு கேட்கிறவன் மனுஷன்.. மன்னிக்க தெரிஞ்சவன் பெரிய மனுஷன்.... இந்த விவகாரத்தில் யோகிபாபு பெரிய மனுஷன் தான்..!

நோன்பு சட்டதிட்டங்கள்-(ஷாபியீ, ஹனபி)