என் மனைவி உனக்கு... உன் கணவர் எனக்கு... சென்னையில் நடக்கும் ஹைடெக் செக்ஸ் பிசினஸ்

துணைகளை மாற்றிக்கொள்ளும் ஆபத்தான விளையாட்டு சென்னையில் நடப்பது அம்பலமாகியுள்ளது. மேலும் நட்சத்திர ஹோட்டல்கள், கடற்கரைகளில் பதிவு செய்த புகைப்படங்கள், வீடியோக்கள் கசிந்துள்ளன.


வசதிபடைத்த ஜோடிகள் ஓர் இடத்தில் கூடி, தங்களது கார் சாவியை குலுக்கல் செய்து, கையில் சிக்கும் கார் சாவியைக்கொண்டு ஜோடிகளை மாற்றிக்கொள்ளும் நிகழ்சிகள் சென்னையில் பல ஆண்டுகளுக்கு முன்பு நடந்ததாக செய்திகள் வெளியாகின. ஆனால், டிஜிட்டல் யுகத்தில், சமூக வலைதங்களின் உதவியுடன், துணைகளை மாற்றிக்கொள்ளும் அந்த ஆபத்தான விளையாட்டு இப்போதும் நடப்பதாக சில ஆதாரங்கள் வெளியாகியுள்ளன.


அப்படி சென்னை ஈ.சி.ஆர் சாலையில் உள்ள நட்சத்திர விடுதியில் எடுக்கப்பட்ட புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களின் பின்னணி தற்போது அம்பலமாகியுள்ளது. ‘மீவீ’ என்ற சேட்டிங் செயலி மூலம் துணை மாற்றும் ஆபத்தான விளையாட்டு நடக்கிறது என்கிறார்கள் இந்த விளையாட்டில் அனுபவம் வாய்ந்தவர்கள்.


சென்னையைச் சேர்ந்த 40 வயது கொண்ட தொழிலதிபரும், அவரது மனைவியும் இந்த துணை மாற்ற விளையாட்டை நடத்திவருவதாக, அடையாளப்படுத்த விரும்பாத ஒருவர் நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சிக்கு சில ஆதாரங்களை பகிர்ந்துள்ளார்.


எப்படி செயல்படுகிறது இந்தக்கும்பல்?
'மீவீ'  செயலி மற்றும் முகநூல் பக்கத்தின் மூலம் துணை மாற்றும் விளையாட்டு அறிவிப்பு வெளியிடப்படுகிறது. சென்னையில் உள்ள நட்சத்திர ஹோட்டல்களில் முதலில் ஜோடிகளின் சந்திப்பு நடக்கும். இரண்டாவது, நிகழ்ச்சியை நடத்தும் நிர்வாகிகளின் வீடுகளில் கெட் டூ கெதர் ஏற்பாடு செய்யப்படுகிறது. அதன் மூலம் தம்பதிகளுக்கு இடையே நல்ல அறிமுகம் ஏற்படுகிறது.


பின்னர், தம்பதிகளின் விருப்பத்திற்கு ஏற்ப வெளியூர் சாகச பயணங்கள் ஏற்பாடு செய்யப்படுகிறது. தனிமையில் இருக்கும் வீடியோக்களையும், ஆடியோக்களையும் பதிவு செய்து, வாட்ஸ் அப் குழுக்களில் பகிரப்படுகிறது.


ஆடியோ, வீடியோவைப்பார்க்கும் வசதிபடைத்த ஜோடிகள், துணை மாற்றும் விளையாட்டில் பங்கேற்க தூண்டப்படுகிறார்கள். சென்னையைத்தாண்டி, டெல்லி, பெங்களூரு ஆகிய நகரங்களிலும்


இந்த துணை மாற்றக்கும்பல் கிளை விரித்துள்ளது தெரியவந்துள்ளது. யாருடன் வேண்டுமாலும் ஜோடியாக அமர்ந்து சரக்கடிக்கலாம், சுற்றலாம், விளையாடலாம் என்பதால், இது தவறு இல்லை என்றும், மகிழ்ச்சியாக இருக்கவே இந்த ஏற்பாடு என்றும் கூறி ஏற்பாட்டாளர்கள் உசுப்பேத்தியுள்ளனர்.


குறிப்பாக, திருமண பந்தத்தை விட்டு தனிமையில் வசிக்கும் ஆண், பெண்களையே இந்த கும்பல் குறிவைத்து செயல்படுவது தெரியவந்துள்ளது.


சென்னையில் ஆடம்பரமான கார்களில் வலம்வரும் இந்த கும்பல், தினம் ஒரு துணையுடன் சுற்றுவதும் தெரியவந்துள்ளது.


தனிய எடுத்து உல்லாசமாக இருக்க வாய்ப்பில்லாதவர்கள், சொகுசுக்கார்களிலேயே தனிமையை அனுபவிப்பதாகவும் இந்த விளையாட்டில் ஈடுபட்டவர்கள் தெரிவித்துள்ளனர்.


மேலும் தன்னுடன் ஆடிப்பாடி, மகிழ்ச்சியாக இருந்த துணைக்கு பெண்மணி ஒருவர் நன்றி சொல்லும் ரகசிய வீடியோவும் வெளியாகியுள்ளது.


இது ஜெஸ்ட் டைம்பாஸ் என்று ஒரு தரப்பினரும், இது கலாச்சார சீரழிவு என்று இன்னோர் தரப்பினரும் விமர்சிக்கிறார்கள்.


தெரியாத துணையுடன் செல்லும் போது எதுவேண்டுமாலும் நடக்கலாம், மிரட்டி பணம் பறிக்கப்படலாம் என பல்வேறு ஆபத்துகளைக்கொண்ட இந்த விளையாட்டை போலீசார் தடுத்து நிறுத்துவார்களா? இந்த வினோத கும்பல் மீது காவல்துறை நடவடிக்கை எடுக்குமா?


Popular posts from this blog

பஞ்சாயத்து தலைவருக்கு எவ்வளவு சம்பளம் தெரியுமாகோடிகள், புரளும் (ஊராட்சிகளில் ஊழல் நடப்பது எப்படி....

FIR-ல் வெளியான அதிர்ச்சி-பற்கள் பிடுங்கப்பட்ட விவகாரத்தை சிபிசிஐடி விசாரணைக்கு மாற்றி டிஜிபி சைலேந்திரபாபு உத்தரவிட்டுள்ளார்.

சமூக வலைதள யூடியூபருக்கு, 1 லட்சம் அபராதம் கட்டிய உதவி ஆய்வாளர் இசக்கி ராஜா – மனித உரிமை ஆணையம் உத்தரவு