144 தடை உத்தரவு - அரசு விளக்க அறிக்கை

தமிழ்நாட்டில், 144 தடை உத்தரவு அமலாகும் சமயத்தில், எவை, எவை இயங்கும், எவை இயங்காது என விளக்க அறிவிப்பாணையை மாநில அரசு வெளியிட்டிருக்கிறது. 


தமிழ்நாடு சுகாதாரத்துறையின் சார்பில் வெளியிட்டுள்ள அறிவிக்கையில், வெளிநாடுகளிலிருந்து, மார்ச் ஒன்றாம் தேதி மற்றும் அதற்கு பின்னர், தாயகம் திரும்பியோர், தங்களைத் தாங்களே வீடுகளில் கண்டிப்பாக தனிமைப்படுத்திக் கொள்ள வேண்டும்.


கொரோனா அறிகுறி இருப்பதாக, உணர்பவர்கள், கண்டிப்பாக பரிசோதனை செய்து கொள்ளுதல் அவசியமாகும். இந்த தனிமைப்படுத்துதல் கண்காணிப்பு பணிகளை, பட்டியலிட்டு, மாவட்ட நிர்வாகம், காவல்துறை, சுகாதாரத்துறையுடன் இணைந்து, நாள்தோறும் ஆய்வு செய்து உறுதி செய்திட வேண்டும் என்றும் கூறப்பட்டுள்ளது.


அத்தியாவசிய பொருட்கள் வாங்குவதற்காக மட்டுமே வீட்டை விட்டு வெளியில் வருமாறு பார்த்துக் கொள்ள வேண்டும். அவசியமற்ற முறையில், வீட்டை விட்டு வெளியில் வருவதையோ, அங்குமிங்கும் உலவுவதையோ முற்றாகத் தவிர்க்க வேண்டும்.


அத்தியாவசிய பொருட்களான பால், காய்கறிகள், மளிகைப் பொருட்கள் வாங்கச் செல்வோர், கடைகளில், ஒருவருக்கு ஒருவர், குறைந்தபட்சம் 1 மீட்டர் இடைவெளிகளில், அதாவது மூன்று அடி இடைவெளியில் நிற்க வேண்டும்.


இதனை கண்டிப்பாக பின்பற்ற வேண்டும் என்றும் அறிவுறுத்தப்பட்டுள்ளது. வாடிக்கையாளர்கள் ஒரு மீட்டர் இடைவெளியில் நிற்கிறார்களை என்பதை கடைக்காரர்கள் உறுதி செய்ய வேண்டும் என்றும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.


கூட்டமாக நிற்க கூடாது என வாடிக்கையாளர்களை கடை உரிமையாளர்கள் அறிவுறுத்த வேண்டும். கடைகளின் முகப்பில், சானிடைசர்களை வைத்து, அதில் கைகளை தூய்மைபடுத்திக் கொள்ள வாடிக்கையாளர்களை அறிவுறுத்த வேண்டும். நாளொன்றுக்கு, 3 முறை, கடைகளை சுத்தப்படுத்தி, கிருமி நாசினிகள் தெளிக்கப்படுவதை, அதன் உரிமையாளர்கள் உறுதி செய்ய வேண்டும்.


5 நபர்களுக்கும் மேல் பொது இடங்களில் கூடுவதற்கு தடை விதித்து, மாவட்ட ஆட்சியர்களும், சென்னை பெருநகரை பொறுத்தவரையில், காவல் ஆணையரும், தனித்தனியாக உத்தரவுகளை பிறப்பிக்க வேண்டும்.


அத்தியாவசிய பொருட்கள் விற்பனை கடைகள் தவிர, டாஸ்மாக் உள்ளிட்ட மற்ற கடைகள் அனைத்தும், வணிக வளாகங்களும், மறு உத்தரவு வரும் வரை, மூடப்பட்டிருக்க வேண்டும். 


Popular posts from this blog

பஞ்சாயத்து தலைவருக்கு எவ்வளவு சம்பளம் தெரியுமாகோடிகள், புரளும் (ஊராட்சிகளில் ஊழல் நடப்பது எப்படி....

FIR-ல் வெளியான அதிர்ச்சி-பற்கள் பிடுங்கப்பட்ட விவகாரத்தை சிபிசிஐடி விசாரணைக்கு மாற்றி டிஜிபி சைலேந்திரபாபு உத்தரவிட்டுள்ளார்.

சமூக வலைதள யூடியூபருக்கு, 1 லட்சம் அபராதம் கட்டிய உதவி ஆய்வாளர் இசக்கி ராஜா – மனித உரிமை ஆணையம் உத்தரவு