தொடர்ந்து 14 நாட்கள் ஊரடங்கு தேவை; இல்லையேல் இதுதான் நடக்கும்” - மோடிக்கு நுண்ணுயிரியல் சங்கம் கடிதம்!

கொரோனா வைரஸ் பரவலை கட்டுப்படுத்தாவிடில் ஏப்ரல் இறுதிக்குள் மருத்துவமனைகள் நோயாளிகளால் நிரம்பி வழியும் என நுண்ணுயிரியல் சங்கம் எச்சரித்துள்ளது.


கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை இந்தியாவில் தினசரி அதிகரித்து வருகிறது. அதனால் நாட்டின் 19 மாநிலங்களில் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.


இந்நிலையில், இந்திய நுண்ணுயிரியல் மருத்துவர்கள் சங்கம் சார்பில் கொரோனா வைரஸ் பரவல் தொடர்பாக பிரதமர் மோடிக்கு கடிதம் ஒன்று எழுதப்பட்டுள்ளது. அதில், அந்த சங்கத்தின் தலைவர் தேஷ்முக் குறிப்பிட்டுள்ளதாவது,


கொரோனா வைரஸை கட்டுப்படுத்த மத்திய அரசு மேற்கொண்டு வரும் நடவடிக்கைகள் பாராட்டுக்குரியவைதான். ஆனால், நேற்று ஒருநாள் பிறப்பித்த சுய ஊரடங்கை அடுத்து வரும் 14 நாட்களுக்கும் நீட்டிக்க வேண்டும்.


“தொடர்ந்து 14 நாட்கள் ஊரடங்கு தேவை; இல்லையேல் இதுதான் நடக்கும்” - மோடிக்கு நுண்ணுயிரியல் சங்கம் கடிதம்!
இவ்வாறு செய்வதன் மூலம், கொரோனா வைரஸ் பரவும் சங்கிலியை கட்டாயம் உடைத்தெறிய முடியும்.


ஆனால், இந்த தேசிய ஊரடங்கை அமல்படுத்தாவிடில் ஏப்ரல் மாதத்தின் கடைசி வாரத்தில் நாட்டில் உள்ள அனைத்து மருத்துவமனைகளும் நோயாளிகளால் நிரம்பி வழியக்கூடும். கட்டுப்படுத்த முடியாத இக்கட்டான சூழலைச் சந்திக்க நேரிடும்.


ஆகவே, இது தொடர்பான நடவடிக்கையை விரைவாக மேற்கொள்ள வேண்டும்.” என அந்தக் கடிதத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது.


இது ஒருபுறமிருக்க, உலக சுகாதார அமைப்பின் உயர்மட்ட அதிகாரி மைக் ரியான், ஊரடங்கு மட்டுமே தீர்வாகிவிடாது.


தொற்று உள்ள அனைவரையும் பரிசோதித்து அவர்கள் அனைவருக்கும் உரிய மருத்துவ சிகிச்சைகளை போர்க்கால அடிப்படையில் கொடுத்தால் மட்டுமே இந்த வைரஸ் தொற்றுக்கு தீர்வு எட்ட முடியும் எனக் கூறியுள்ளார்.


Popular posts from this blog

பஞ்சாயத்து தலைவருக்கு எவ்வளவு சம்பளம் தெரியுமாகோடிகள், புரளும் (ஊராட்சிகளில் ஊழல் நடப்பது எப்படி....

FIR-ல் வெளியான அதிர்ச்சி-பற்கள் பிடுங்கப்பட்ட விவகாரத்தை சிபிசிஐடி விசாரணைக்கு மாற்றி டிஜிபி சைலேந்திரபாபு உத்தரவிட்டுள்ளார்.

சமூக வலைதள யூடியூபருக்கு, 1 லட்சம் அபராதம் கட்டிய உதவி ஆய்வாளர் இசக்கி ராஜா – மனித உரிமை ஆணையம் உத்தரவு