டெல்லி வன்முறை : சூறையாடப்பட்ட 14 மசூதி, தர்காக்கள்.. இந்துத்வ கும்பலின் திட்டமிட்ட வெறிச்செயல்!

குடியுரிமை சட்டத்திருத்தத்துக்கு எதிராக வடகிழக்கு டெல்லியின் மவுஜ்பூர், கோகுல்புரி உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் கடந்த பிப்ரவரி 23ம் தேதி போராட்டம் தொடங்கியது.


அமெரிக்க அதிபர் ட்ரம்ப் இந்தியா வந்திருந்த போது, பிப்ரவரி 24ம் தேதி போராட்டத்தில் ஈடுபட்ட இஸ்லாமியர்கள் மீது இந்துத்வ கும்பல் வன்முறை வெறியாட்டத்தை நிகழ்த்தியது.


இந்த வன்முறை சுமார் 32 மணிநேரத்துக்கு நீடித்தது. இதனால் இதுவரை 53 பேர் பலியாகியும், நூற்றுக்கும் மேலானோர் படுகாயமுற்று மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.


மேலும், இந்துத்வ கும்பலால் வடகிழக்கு டெல்லியின் முக்கால்வாசி பகுதி சூறையாடப்பட்டதால் இதுகாறும் நகரம் முழுவதும் மயானம் போன்றே காட்சியளிக்கிறது. இதனால் மக்களில் இயல்பு வாழ்வு பாதிக்கப்பட்டுள்ளது.    


 இந்நிலையில், இஸ்லாமியர்களின் இருப்பிடம், மசூதிகள், தர்காக்கள் உள்ளிட்டவை குறிவைத்து இந்துத்வ வெறியர்களால் சூறையாடப்பட்டுள்ளது தொடர்பான புகைப்படங்கள் வெளியாகியுள்ளது. இந்த தாக்குதல்கள் அனைத்தும் பட்டப்பகலில் அரங்கேற்றியுள்ளனர்.


ஜெய் ஸ்ரீராம் என கோஷமிட்டபடி, இஸ்லாமியர்களின் இருப்பிடங்களை தேடித்தேடி அதன் மீது பெட்ரோல் குண்டுகளை வீசி, இல்லங்களில் உள்ள பொருட்களை சூறையாடியிருக்கின்றனர்.


இதுவரை வடகிழக்கு டெல்லியில் கோகுல்புரி, அசோக்நகர், சந்த்பாக், ஷிவ் விஹார், கரிமெண்டு, காம்ரி, பாகிராதி விஹார் முகுந்த் நகர், பிரிஜ்புரி ஆகிய பகுதிகளில் உள்ள 14க்கும் மேற்பட்ட மசூதிக்கள், தர்காக்கள் ஒட்டுமொத்தமாக இந்துத்வ வெறியர்களின் தாக்குதலுக்கு உள்ளாகியுள்ளது.  


வடகிழக்கு டெல்லியில் நடத்தப்பட்ட வன்முறை திட்டமிட்டு அரங்கேற்றப்பட்டது என தொடர்ந்து குற்றச்சாட்டுகள் எழுந்து வருகிறது. ஆனால், ஆட்சியாளர்களோ இருதரப்பு மக்களும் கலவரத்தில் ஈடுபட்டதாக தெரிவித்துவருகின்றனர். உண்மையில், வடகிழக்கு டெல்லியில் நடந்த வன்முறையில் ஒரு இந்துக் கோவில்கள் கூட சேதமடையவில்லை.


இது முழுக்க முழுக்க பாஜகவினரின் தூண்டுதலால் இந்துத்வ வெறியர்களின் மதவாதச் செயல் என்பது பட்டவர்த்தனமாகியுள்ளது. இது தொடர்பாக பேசியுள்ள இந்து மக்களே இதனை மதசகிப்புத் தன்மைக்கான அறிகுறி என சாடியுள்ளனர்.


மசூதிகளை குறிவைத்து தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது ஒட்டுமொத்தமாக இஸ்லாமியர்களை அழிப்பதற்கான முன்னோட்டமாகவே இதன் மூலம் கருதப்படுகிறது.


Popular posts
நடுரோட்டில் கதறிய பெண் வழக்கறிஞர்-“இன்னும் எவ்வளவு பணம் வேணாலும் வாங்கித்தர்றேன்.. என்னோட வந்துடுங்க!”
Image
600 கோடியை ஏப்பம் விட்ட பாஜகவினர்; கும்பகோணத்தை அதிரவைத்த‘ஹெலிகாப்டர் பிரதர்ஸ்’.12 சொகுசு கார்களை பறிமுதல் செய்து அதிரடி!
Image
நடிகையுடன் நடைபெற்ற மது விருந்து..! பண்ணை வீட்டுக்கு சீல் வைத்த அதிகாரிகள்..!
Image
தமிழ்நாடு மாநில மனித உரிமை ஆணையம் வழங்கிய நோட்டீஸை அடுத்து டி.ஜி.பி சைலேந்திரபாபு இந்த உத்தரவைப் பிறப்பித்துள்ளார்.
Image
சர்ச்சையை கிளப்பிய அதிகாரி மீது நடவடிக்கை - வடக்கிற்கு உரக்கச் சொன்ன தமிழக அரசு உதவி ஆணையர் விடுவிப்பு - மாநகராட்சி ஆணையர் உத்தரவு
Image