14 வயசு, 17 வயசு.. 3 சிறுமிகள்.. ஏரியில் குளிக்க வந்து.. நீரில் மூழ்கி.. திருவள்ளூர் அருகே சோகம்

திருவள்ளூர்: யாரும் வீட்டை விட்டு வெளியே வர வேண்டாம், வீட்டிற்குள்ளேயே பாதுகாப்பாக இருங்கள் என்று சொன்னாலும் கேட்பதில்லை.. ஏரியில் குளிக்க வந்து 3 சிறுமிகள் உயிரிழந்துள்ள சம்பவம் பெருத்த அதிர்ச்சியை உண்டு பண்ணி உள்ளது.


கொரோனா வைரஸ் பரவுவதை தடுக்க நாடு முழுவதும் 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.. நாடே லாக்டவுனில் உள்ளது.. வீட்டை விட்டு மக்கள் வெளியில் செல்ல வேண்டாம் என்று அறிவுறுத்தப்பட்டுள்ளது.
ஆனால், அந்த அறிவிப்புகளை எல்லாம் ஒருசிலர் மதிப்பதே இல்லை.. குறிப்பாக இளைஞர்கள், பைக்கில் ஊர் சுற்றி கொண்டிருக்கிறார்கள்..


அவர்களைதான் தேடி பிடித்து நூதன தண்டனைகளை நம் போலீசாரும் அளித்து வருகின்றனர்.
நாடு இருக்கும் இப்படிப்பட்ட ஆபத்தான சூழ்நிலையில் திருவள்ளூரில் ஏரியில் குளிக்க சென்ற சிறுமிகளில் 3 பேர் உயிரிழந்துள்ள சோகம் நடந்துள்ளது.. திருவள்ளூரை அடுத்த கூடப்பாக்கம் பகுதியை சேர்ந்தவர் ரமேஷ்... இவர் ஒரு கூலி தொழிலாளி.


மனைவி பெயர் குமாரி.. 37 வயதாகிறது.. இவர்கது 16 வயது மகள் ஐஸ்வர்யா.. இப்போது ஸ்கூல் லீவு விட்டுள்ளதால், ரமேஷின் வீட்டுக்கு அவரது சொந்தக்காரர் முருகன் என்பவரது 15 வயது மகள் பிரியதர்ஷினி வந்திருந்தார்..


இந்நிலையில்தான் ஐஸ்வர்யா, பிரியதர்ஷினி, பக்கத்து வீடுகளில் குடியிருக்கும் சங்கீதா, சந்தியா 17, சவுமியா 14 என 6 சிறுமிகளும் நேமம் கிராமத்தில் உள்ள ஏரியில் குளிக்க சென்றனர்...


ஏரியில் குளித்துக்கொண்டிருந்த போது பிரியதர்ஷினி, சந்தியா, சௌமியா, ஐஸ்வர்யா, சங்கீதா ஆகிய 5 பேரும் ஆழமான பகுதிக்கு சென்றுவிட்டனர்.. அந்த பகுதி ஆழம் என்பது தெரியாமலேயே போய் சிக்கி கொண்டனர்.. அடுத்த செகண்டே நீரில் மூழ்க தொடங்கினர்.


இதை பார்த்ததும் சற்று தூரமாக நின்று குளித்து கொண்டிருந்த குமாரி அலறி கத்தினார்.. காப்பாத்துங்க.. காப்பாத்துங்க.. யாராவது ஓடிவாங்க என்று சொல்லி கொண்டே தோழிகளை காப்பாற்ற குமாரி சென்றார்..


ஆனால் குமாரியும் தண்ணீருக்குள் மூழ்கினார்... இவர்களின் அலறல் சத்தம் கேட்டு அந்த பகுதியில் இருந்தவர்கள் ஓடிவந்தனர்.. ஏரியில் குதித்து ஒவ்வொருவராக மீட்க முயன்றனர்..


ஆனால், ஐஸ்வர்யா, குமாரி, சங்கீதா ஆகியோர் மட்டுமே மீட்கப்பட்டனர்.. மற்ற 3 பேரும் தண்ணீருக்குள்ளேயே மூழ்கி இறந்து விட்டனர்!
மீட்கப்பட்ட குமாரி, ஐஸ்வர்யா, சங்கீதா ஆகியோரை நேமம் அரசு சுகாதார நிலையத்துக்கு தூக்கி சென்றனர்.. உடனடி சிகிச்சையும் தரப்பட்டது..


எனினும் மேல் சிகிச்சைக்காக திருவள்ளூர் அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு செல்லப்பட்டனர். சிறுமிகள் நீரில் மூழ்கியது தொடர்பாக வெள்ளவேடு போலீஸார் வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்..


சிகிச்சையில் உள்ள சிறுமிகளிடமும் என்ன நடந்தது என்று விசாரணை தொடர்கிறது.
வீட்டை விட்டு வெளியே வரவேண்டாம் என்று சொன்னதை இனியாவது அலட்சியப்படுத்த வேண்டாம்.. அரசாங்கம் வேலை வெட்டி இல்லாமல் இந்த உத்தரவை பிறப்பிக்கவில்லை..


அத்தனை பேரின் உயிரையும் காப்பாற்ற ஒவ்வொரு நிமிடமும் அரசு போராடி வருகிறது.. இதை அனைவரும் புரிந்து கொள்ள வேண்டும்..


அதனால் வீட்டில் உள்ள பெரியவர்கள் குழந்தைகளை தயவு செய்து வெளியே அனுப்பாமல் இருப்பதே நல்லது.


Popular posts from this blog

பஞ்சாயத்து தலைவருக்கு எவ்வளவு சம்பளம் தெரியுமாகோடிகள், புரளும் (ஊராட்சிகளில் ஊழல் நடப்பது எப்படி....

மன்னிப்பு கேட்கிறவன் மனுஷன்.. மன்னிக்க தெரிஞ்சவன் பெரிய மனுஷன்.... இந்த விவகாரத்தில் யோகிபாபு பெரிய மனுஷன் தான்..!

நோன்பு சட்டதிட்டங்கள்-(ஷாபியீ, ஹனபி)