தங்கைன்னு கூட பார்க்காம.. கதறிய 13 வயது சிறுமி.. 15 வயசு அண்ணன் கைது

சென்னை: "என் சொந்த அண்ணன் என்னுடைய கை, கால்களை கட்டிப்போட்டு பாலியல் தொல்லை தந்தான்.. நான் இப்போ தப்பிச்சு வந்துட்டேன்.. அண்ணன் மீது நடவடிக்கை எடுக்கணும்" என்று 13 வயது சிறுமி 15 வயது சகோதரன் குறித்து போலீசில் புகார் தெரிவித்துள்ளது கடுமையான அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.


வில்லிவாக்கம் பகுதியை சேர்ந்த 13 வயது சிறுமி, வில்லிவாக்கம் மகளிர் ஸ்டேஷனில் ஒரு புகார் தந்துள்ளார்.. அதில் கூறி இருப்பதாவது:


"என் அம்மாவும், அப்பாவும் குடும்பத்தகராறு காரணமாக சில வருஷங்களுக்கு முன்பு பிரிந்து விட்டனர்.. எனக்கு வயது 13 ஆகிறது.. என் அண்ணனுக்கு 15 வயதாகிறது.
நிர்பயா வழக்கு.. கடைசி வாய்பை கையில் எடுத்த பவன் குப்தா.. ஜனாதிபதிக்கு கருணை மனு அனுப்பினார்!


என் அம்மா வேறொருவரை 2வதாக கல்யாணம் செய்து கொண்டு அதே பகுதியில் குடும்பம் நடத்தி வருகிறார். அதனால் வீட்டில் நானும், என் அண்ணனும் மட்டும்தான் வசித்து வந்தோம்.


ஆனால் கடந்த சில மாதங்களாக எனது அண்ணன் எனக்கு பாலியல் தொல்லை கொடுத்து வந்தான்.


நான் கண்டித்தேன். இந்நிலையில் என்னுடைய கை, கால்களை கட்டிப்போட்டு பாலியல் தொல்லை கொடுத்தான்.


இப்போது அவனிடம் இருந்து தப்பி வந்துள்ளேன். அண்ணன் மீது மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்" என்று கேட்டுக் கொண்டிருந்தார்.
இந்த புகாரின் பேரில் சிறுவனை பிடித்து போலீசார் விசாரித்தனர்..


அப்போது, தங்கையை கட்டி வைத்து பாலியல் தொல்லை கொடுத்ததை ஒப்புக் கொண்டுள்ளான்..


இதையடுத்து வில்லிவாக்கம் மகளிர் போலீசார் போக்சோ சட்டத்தின் கீழ் சிறுவனை கைது செய்தனர். பிறகு கோர்ட்டில் ஆஜர்படுத்தி, கெல்லீசில் உள்ள அரசு சிறுவர் சீர்திருத்த பள்ளியில் அடைத்தனர்.


கூடப்பிறந்த தங்கையை கட்டி வைத்து சிறுவன் பாலியல் தொல்லை தந்த சம்பவம் சென்னைவாசிகளை பெருத்த அதிர்ச்சியிலும் கவலையிலும் ஆழ்த்தி உள்ளது.


Popular posts from this blog

பஞ்சாயத்து தலைவருக்கு எவ்வளவு சம்பளம் தெரியுமாகோடிகள், புரளும் (ஊராட்சிகளில் ஊழல் நடப்பது எப்படி....

மன்னிப்பு கேட்கிறவன் மனுஷன்.. மன்னிக்க தெரிஞ்சவன் பெரிய மனுஷன்.... இந்த விவகாரத்தில் யோகிபாபு பெரிய மனுஷன் தான்..!

காவலர்கள் மீது எடுக்கப்பட்ட நடவடிக்கை போதுமானதா என்ற கேள்வி எழுகிறது.?கொதிக்கும் சமூகம்