சுடுகாட்டில் வைத்து. 12 வயது. சிறுமியை.. கூட்டு பலாத்காரம்..

சுடுகாட்டிற்கு தூக்கி சென்று 12 வயது சிறுமியை 3 பேர் சேர்ந்து நாசம் செய்துள்ளனர்..


நிர்வாண நிலையில் கிடந்த சிறுமி,கடைசியில் சுடுகாட்டில் பிணத்துக்கு போர்த்தப்பட்டிருந்த ஒரு துணியை உடம்பில் சுற்றி தட்டு தடுமாறி வீடு வந்து சேர்ந்துள்ள இந்த சம்பவம் மக்களை பெருமளவு உலுக்கி எடுத்து வருகிறது!


பாணயம்பாடியில், ஆறாம் வகுப்பு படிக்கும் சிறுமியை, கூட்டு பலாத்காரம் செய்த, மூன்று பேரை போலீசார் கைது செய்தனர்.


வேலூர் மாவட்டம், வாணியம்பாடி பகுதியைச் சேர்ந்தவர் சிறுமிக்கு 12 வயது.6ம் வகுப்பு படிக்கிறார்.. பெற்றோர் இல்லை .காப்பாளர் ஒருவரின் உதவியில் தங்கி படித்து வருகிறார்... இந்த வீட்டில் பாத்ரூம் இல்லை ... அதனால் கழிப்பிட வசதிக்காக ஆற்றங்கரையோரம்தான் வரவேண்டும்.


அதனால், கடந்த 6ம் தேதி சாயங்காலம் 6.30 மணிக்கு பாலாற்று கரையோரம் பாத்ரூம் சென்றுள்ளார்.. அந்த சமயத்தில் அதே பகுதியை சேர்ந்த சந்துரு 24, பார்த்திபன் 21, கண்ண ன் 30 ஆகியோர் ஒன்றாக உட்கார்ந்து தண்ணி அடித்து கொண்டிருந்து இருக்கிறார்கள்.


சிறுமியை பார்த்ததும் 3 பேருமே வாயை பொத்தி, சுடுகாட்டு பகுதிக்கு தூக்கி சென்றுள்ளனர். மாறி மாறி பலாத்காரமும் செய்துள்ளனர்.


அந்த சமயத்தில் சிறுமி அலறி கத்தி இருக்கிறார். உடனே அவர்கள் கையில் இருந்த பீர் பாட்டிலை உடைத்துள்ளனர். இருந்த பீர் பாட்டிலை உடைத்துள்ளனர்.


உடைந்த பாட்டிலை சிறுமியிடம் காட்டி, கத்தினால் குத்திவிடுவோம் என்று மிரட்டி அதன்பிறகும் பலாத்காரம் செய்துள்ளனர்.


இறுதியில் அவர்கள் தப்பி ஓடிய நிலையில், சுதாரித்து எழுந்து, தட்டு தடுமாறி சுடுகாட்டில் வழி தெரியாமல் அழுதுள்ளார் சிறுமி...


அங்கே மயானத்தின் சடலத்தின் மீது போர்த்தி வீசப்பட்ட துணிகளில் இருந்து ஒன்றை எடுத்து உடம்பில் சுற்றி கொண்டு.. அழுதுக் கொண்டே அந்த ராத்திரி நேரத்தில் வீடு வந்து சோந்திருக்கிறார்.


நடந்த சம்பவத்தை காப்பாளரிடம் சொல்லவும், அவரோ இதை கேட்டு பயந்துபோய், வெளியில் சொல்லாமல் மறைத்துள்ளார்.


எனினும் இந்த குழந்தையின் நிலைமை வேறு யாருக்கும் வந்துவிடக்கூடாது என்பதற்காக சிறுமியின் சொந்தக்காரரே ஒருவர் வாணியம்பாடி தாலுகா போலீசுக்கு புகார் செய்தார்.


போலீசார் விசாரணை நடத்தி அந்த காமுகர்கள் சந்துரு, பார்த்திபன், கண்ணன் 3 பேரையும் போக்சோவில் இப்போது கைது செய்துள்ளனர்.


தமிழகம் மட்டுமல்லாமல் பிற மாநில மக்களையும் இந்த சம்பவம் பெருத்த அதிர்ச்சிக்கு உள்ளாக்கி வருகிறது.


Popular posts from this blog

பஞ்சாயத்து தலைவருக்கு எவ்வளவு சம்பளம் தெரியுமாகோடிகள், புரளும் (ஊராட்சிகளில் ஊழல் நடப்பது எப்படி....

FIR-ல் வெளியான அதிர்ச்சி-பற்கள் பிடுங்கப்பட்ட விவகாரத்தை சிபிசிஐடி விசாரணைக்கு மாற்றி டிஜிபி சைலேந்திரபாபு உத்தரவிட்டுள்ளார்.

சமூக வலைதள யூடியூபருக்கு, 1 லட்சம் அபராதம் கட்டிய உதவி ஆய்வாளர் இசக்கி ராஜா – மனித உரிமை ஆணையம் உத்தரவு