தீவிர கண்காணிப்பு வளையத்தில் நாட்டின் 10 மாவட்டங்கள் - மத்திய அரசு எச்சரிக்கை!

உலகையே ஆட்டிப்படைத்துக் கொண்டிருக்கும் கொரோனா வைரஸால் இந்தியாவில் இதுவரை 1,352 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். நாளுக்கு நாள் பாதிப்பு எண்ணிக்கை அதிகரித்து வருவதால் மத்திய, மாநில அரசுகள் கொரோனா தடுப்பு நடவடிக்கையை முடுக்கிவிட்ட வண்ணம் உள்ளது.


இந்நிலையில், நாட்டின் 6 மாநிலங்களில் உள்ள 10 மாவட்டங்களை தீவிரமாக கண்காணிக்கும் படி மத்திய அரசு உத்தரவிட்டுள்ளது.


அதில், கேரளாவின் பத்தனம்திட்டா, காசர்கோடு, டெல்லியின் நிஜாமுதீ, தில்சாத் கார்டன், உத்தர பிரதேசத்தின் நொய்டா மற்றும் மீரட், ராஜஸ்தானின் பில்வாரா, குஜராத்தின் அகமதாபாத், மகாராஷ்டிராவின் மும்பை மற்றும் புனே ஆகிய 10 மாவட்டங்களை தீவிர கண்காணிப்பு வளையத்தின் கீழ் கொண்டு வர உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.


கொரோனா பரவல்: தீவிர கண்காணிப்பு வளையத்தில் நாட்டின் 10 மாவட்டங்கள் - மத்திய அரசு எச்சரிக்கை!
ஏனெனில், டெல்லியின் நிஜாமுதீன் பகுதியில் மார்ச் 13 முதல் 15 வரை நடந்த மத வழிபாட்டு நிகழ்ச்சியில் தாய்லாந்து, மலேசியா உள்ளிட்ட வெளிநாட்டினர் உட்பட 2000க்கும் மேலானோர் பங்கேற்றிருக்கிறார்கள்.


அந்த மாநாட்டில் பங்கேற்ற சிலருக்கு கொரோனா தொற்று இருப்பதாக கூறப்படுவதால் மத்திய அரசு இந்த தீவிர கண்காணிப்பை பலபடுத்த உத்தரவிட்டுள்ளது.


முன்னதாக, தமிழகத்தில் சென்னை, ஈரோடு மற்றும் காஞ்சிபுரம் ஆகிய மாவட்டங்களை மத்திய அரசு தீவிரமாக கண்காணிக்க உத்தரவிட்டிருந்தது. அதேபோல, சென்னையில் உள்ள அரும்பாக்கம், புரசைவாக்கம், மேற்கு மாம்பலம், சைதாப்பேட்டை, ஆலந்தூர், போரூர், கோட்டூர்புரம், சாந்தோம், விருகம்பாக்கம் ஆகிய பகுதிகளை தீவிரமாக கண்காணிக்க பெருநகர மாநகராட்சி உத்தரவிட்டிருந்த


Popular posts
பஞ்சாயத்து தலைவருக்கு எவ்வளவு சம்பளம் தெரியுமாகோடிகள், புரளும் (ஊராட்சிகளில் ஊழல் நடப்பது எப்படி....
Image
‘நீ செத்துப் போ.. நா வீடியோ எடுக்கற’ : மனைவி தூக்கிட்டு தற்கொலை செய்ததை வீடியோ எடுத்த கணவன்!!!
Image
சிக்னலில் நின்ற பெண்ணிடம் பணம் கேட்ட திருநங்கை: தர மறுத்ததால் ஆபாச பேச்சு…முகம் சுழிக்க வைத்த செயல்..!!
Image
தி.மு.க மூத்த தலைவரை பொதுவெளியில் விமர்சித்த நிதி அமைச்சர் #PTR - உச்சக்கட்டத்தில் உட்கட்சி பூசல்! https://kathir.news/news/-ptr--1204682
Image
அதிமுக முன்னாள் அமைச்சர் ராஜேந்திர பாலாஜி உள்பட அவரது ஆதரவாளர்கள் 11 பேர் மீது வழக்கு
Image