கொரோனா: பிரதமர் மோடி உரையின் கவனிக்க வேண்டிய 10 முக்கிய அம்சங்கள்
இந்தியாவில் கொரோனா வைரஸ் வேகமாக பரவி வரும் நிலையில், பிரதமர் மோடி நேற்று இரவு 8 மணிக்கு (மார் 19,2020) நாட்டு மக்களுக்கு உரையாற்றினர்.
அதில் கவனிக்க வேண்டிய 10 முக்கிய அம்சங்களின் விவரம் வருமாறு:-
1. “மக்கள் தங்களை தனிமைப்படுத்திக்கொண்டு விழிப்புணர்வுடன் செயல்பட வேண்டும். அடுத்த சில வாரங்களுக்கு உங்களது நேரம் எனக்கு தேவை.
2. மார்ச் 22 அன்று காலை 7 முதல் இரவு 9 மணி வரை நாட்டு மக்கள் வீட்டை விட்டு வெளியே வர வேண்டாம். இதைப் பொறுத்தே எந்த மாதிரியான நடவடிக்கை எடுக்கலாம் என்று முடிவெடுக்கப்படும்.
3. உறுதியுடனும், கட்டுப்பாடுடனும் மக்கள் செயல்பட வேண்டும்.
4. மருத்துவமனைகள் போன்ற அத்தியாவசிய இடங்கள் வழக்கம் போல் செயல்படும். அரசு பணியாளர்கள், ஊடகப் பணியாளர்களை தவிர எவரும் வெளியே வரவேண்டாம்.
5. இந்த காலகட்டத்தில் வீணாக கடைகளுக்கு சென்று பதற்றத்துடன் எல்லாப் பொருட்களையும் வாங்குவதை தவிர்க்க வேண்டும்.
6. அத்தியாவசிய தேவையின்றி மருத்துவமனைகளில் மக்கள் கூடுவதை தவிர்க்க வேண்டும்.
7. ஊழியர்கள் பணிக்கு வராவிட்டால் அவர்களுக்கு நிறுவனங்கள் ஊதியத்துடன் கூடிய விடுப்பு அளிக்க வேண்டும்.
8. வீண் வதந்திகளை நம்பவேண்டாம்.
9. கொரோனாவுக்கும் மக்களுக்கும் இடையே பணியாற்றும் பணியாளர்களை உற்சாகப்படுத்த மார்ச் 22 மாலை 5 மணிக்கு அவரவர் இருப்பிடத்தில் இருந்து 5 நிமிடங்களுக்கு கைதட்டி பாராட்ட வேண்டும்.
10. மனித குலம் மகத்தானது என்பதை இந்த சமயத்தில் அனைவரும் கைகோர்த்து செயல்பட்டு உணர்த்துவோம்