ஆன்லைன் முன்பதிவை சமாளிக்கஅமேசான் நிறுவனத்தில் 1 லட்சம் ஊழியர்கள் நியமனம்..

புதுடெல்லி:   அதிகரித்து வரும் ஆன்லைன் முன்பதிவுகளுக்கு ஏற்ப பொருட்களை வினியோகம்  செய்ய அமெரிக்காவில் மட்டும் சுமார் 1 லட்சம் ஊழியர்களை பணியமர்த்த உள்ளதாக  அமேசான் நிறுவனம் தெரிவித்துள்ளது.


சீனாவின் வுகான் நகரில் பரவத்  தொடங்கிய கொரோனா வைரஸ் தற்போது 130க்கும் மேற்பட்ட உலக நாடுகளை அச்சுறுத்தி  வருகிறது. உலகளவில் இதனால் பாதிக்கப்பட்ட சுமார் 7,100 பேர் இதுவரை   உயிரிழந்துள்ளனர்.  


கொரோனா அச்சுறுத்தல் காரணமாக பெரும்பாலான  நாடுகளில் பொது மக்கள் அதிகம் கூடும் இடங்களான வணிக வளாகங்கள்,  திரையரங்குகள், உணவகங்கள், கல்வி நிறுவனங்கள் உள்ளிட்டவை மூடப்பட்டுள்ளன.


பொதுமக்கள்  யாரும் வீட்டை விட்டு வெளியேற வேண்டாமென்றும், தேவையற்ற
இந்நிலையில், குவிந்து  வரும் ஆன்லைன் தேவைக்கேற்ப வினியோகம் செய்ய முடியாத சூழலுக்கு  தள்ளப்பட்டுள்ள அமேசான் நிறுவனம், அதன் வலைதள பதிவில், `கொரோனா  அச்சுறுத்தலால் அத்தியாவசிய பொருட்களை வாங்குவதற்கு மக்களின் கவனம் ஆன்லைன்  பக்கம் திரும்பி உள்ளது.  


அமேசானுக்கு பொருட்கள் கேட்டு குவியும் ஆன்லைன்  ஆர்டர்கள் அதிகரித்துள்ளது. ஆனால் ஆன்லைனில் வரும் முன்பதிவுகளுக்கு ஏற்ப  பொருட்களை வினியோகம் செய்வதற்கு வேலையாட்கள் இல்லாத நிலை உருவாகி உள்ளது.  


அமெரிக்காவில் மட்டும் சுமார் 1 லட்சம் ஊழியர்கள் தேவைப்படுகின்றனர்.  உணவு  விடுதிகள், டிராவல் ஏஜென்சி, தியேட்டர்கள், மால்கள்  மூடப்பட்டுள்ளதால்  அவற்றில் வேலை பார்த்தவர்களைக் கொண்டு இந்த இடங்கள் நிரப்பப்பட உள்ளன.  


நிலைமை சீரான பின்னர், அவர்கள் வேலை பார்த்த நிறுவனங்களே அவர்களை மீண்டும்  பணியமர்த்தும் வரை அவர்களை பயன்படுத்த இருக்கிறோம்.
கடந்த  திங்கள்கிழமை தேவைக்கு ஏற்ப ஆர்டர்களை டெலிவரி செய்ய முடியாத சூழல்  ஏற்பட்டதைத் தொடர்ந்து இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது.


புதிய ஊழியர்களை கவரும் வகையில் அடுத்த மாதம் வரை ஒருமணி நேர வேலைக்கு கூடுதலாக 2 டாலர் வழங்கப்பட உள்ளது. வடக்கு அமெரிக்கா, ஐரோப்பாவில் பணியாற்ற இருக்கும் புதிய ஊழியர்களுக்கு வழங்கப்பட உள்ள கூடுதல் ஊதியத்தின் மூலம் அமேசானுக்கு ₹2600 கோடி கூடுதல் செலவாகும்’ என்று கூறியுள்ளது.


அமெரிக்காவின்  இதர ஆன்லைன் நிறுவனங்களான அல்பர்ட்சன்ஸ், க்ரோஜெர், ராலேய்ஸ் உள்ளிட்ட  நிறுவனங்களும் ஆன்லைன் முன்பதிவுகளுக்கு ஏற்ப பொருட்களை வினியோகிக்க  புதிதாக ஊழியர்களை பணியில் அமர்த்த உள்ளதாக தெரிவித்துள்ளன.


Popular posts from this blog

பஞ்சாயத்து தலைவருக்கு எவ்வளவு சம்பளம் தெரியுமாகோடிகள், புரளும் (ஊராட்சிகளில் ஊழல் நடப்பது எப்படி....

FIR-ல் வெளியான அதிர்ச்சி-பற்கள் பிடுங்கப்பட்ட விவகாரத்தை சிபிசிஐடி விசாரணைக்கு மாற்றி டிஜிபி சைலேந்திரபாபு உத்தரவிட்டுள்ளார்.

சமூக வலைதள யூடியூபருக்கு, 1 லட்சம் அபராதம் கட்டிய உதவி ஆய்வாளர் இசக்கி ராஜா – மனித உரிமை ஆணையம் உத்தரவு