தொடரும் உயிரிழப்புகள்.... அச்சத்தில் அகிலம்...

லகம் முழுவதும் கொரோனாவால்  உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 14 ஆயிரத்து 600ஐத் தாண்டியுள்ளது. கொரோனா தொற்றால் 3 லட்சத்து 35 ஆயிரம் பேர் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர்.


 சீனாவில் தொடங்கி உலகில் 185 நாடுகளில் பரவியுள்ள கொரோனா கிருமியால் பாதிக்கப்பட்டவர்களில் 10 ஆயிரத்து 500க்கும் மேற்பட்டவர்கள் இன்னும் அதிதீவிரக் கண்காணிப்பில் இருப்பதால் உயிரிழந்தோர் எண்ணிக்கை அதிகரிக்கும் அபாயம் ஏற்பட்டுள்ளது. சீனாவில் கடந்த சில நாட்களாக புதிய தொற்றும் உயிரிழப்பும் இல்லாத நிலையில் இத்தாலி, அமெரிக்கா, ஸ்பெயின், ஈரான் மற்றும் பிரான்ஸ் ஆகிய நாடுகளில் நூற்றுக்கணக்கானோர் உயிரிழந்துள்ளனர்.


உலகின் பல்வேறு நாடுகளில் ஆயிரத்து 598 பேர் மரணித்துள்ளனர். இங்கிலாந்தில் ஏற்கனவே 281 பேர் உயிரிழந்திருந்த நிலையில் ஒரே நாளில் 48 பேர் கொரோனாவால் பலியாகி உள்ளனர்.


மேலும் புதிதாக 665 பேருக்கு தொற்று நோயின் தாக்கம் இருப்பது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இதேபோல் நெதர்லாந்திலும் 43 பேர் உயிரிழந்துவிட அங்குள்ள மக்கள் அச்சத்தில் ஆழ்ந்துள்ளனர்.


இந்த நிலையில் இந்தியாவைப் போல கிரீசும் மக்கள் நடமாட்டத்திற்குத் தடை விதித்துள்ளது. இந்தத் தடை உத்தரவு இன்று முதல் அமலுக்கு வருகிறது. அத்தியாவசியப் பொருட்கள் வாங்குவதற்குத் தவிர மக்கள் வெளியில் நடமாடக் கூடாது என அந்நாட்டு அரசு உத்தரவிட்டுள்ளது. செக் குடியரசு நாட்டில் கொரோனாவால் முதல் உயிரிழப்பு ஏற்பட்டுள்ளது.


சிரியாவில் கொரோனா நோயின் தாக்கம் இதுவரை அறிவிக்கப்படாத நிலையில் முதன்முறையாக கொரோனா தொற்று ஏற்பட்டுள்ளது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. நோய்த் தொற்று காரணமாக கியூபாவில் வெளிநாட்டு சுற்றுலா பயணிகளுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது


Popular posts from this blog

பஞ்சாயத்து தலைவருக்கு எவ்வளவு சம்பளம் தெரியுமாகோடிகள், புரளும் (ஊராட்சிகளில் ஊழல் நடப்பது எப்படி....

மன்னிப்பு கேட்கிறவன் மனுஷன்.. மன்னிக்க தெரிஞ்சவன் பெரிய மனுஷன்.... இந்த விவகாரத்தில் யோகிபாபு பெரிய மனுஷன் தான்..!

நோன்பு சட்டதிட்டங்கள்-(ஷாபியீ, ஹனபி)