அமீத் ஷாவின் ‘ஆட்டம்’ ஆரம்பமாகிவிட்டது

ஒரு நீதிபதியை துரத்திவிட்டு, நாலு வாரங்கள் , பாஜக வினர் தூண்டிய காணொளிகளைப்  பார்த்து ஒரு முடிவுக்கு வரச் சொல்லி பணிந்து படுத்துவிட்டது உயர்நீதிமன்றம்.*


தில்லி காவல்துறை இன்னும் காணொளிகளைப்  பார்க்கவில்லை என்றது பாஜகவினரின் அடாவடிகள் தொடர்பானவற்றைதான். 


இதோ  இன்னொரு காணொளியை தெளிவாக பார்த்திருக்கிறது தில்லி போலீஸ் . விளைவு தாஹிர் ஹிசைன் என்ற ஆம் ஆத்மி தில்லி மாநகராட்சிமன்ற உறுப்பினர் மீது இந்த கலவரங்களின் போது இறந்த ஒரே காவலரின் கொலைக் குற்ற வழக்கு பாய்ந்து விட்டது. அதற்கு சாட்சியம் அவரது கட்டடத்தின் மீதிருந்து கற்கள் வீசப்பட்டது, பெட்ரோல் குண்டுகள் வீசப்பட்டது தொடர்பான காணொளிகள்தான்.


என்ன சாமர்த்தியம் !?!


இது அமீத் ஷா ஆட்டத்தின் துவக்கம்தான், இனி வரிசையாக இஸ்லாமியர்கள் மீது தொடராக வழக்குகள் சுமத்தப்படும். கபில் மிஸ்ராக்கள் திமிராக வளம் வருவார்கள்.


விரைவில் அமீத் ஷாவின் signature act ஆன என்கௌண்டர்கள் ஆரம்பமாகலாம்.


எல்லாம் ஏற்கனவே எங்கேயோ பார்த்தது கேட்டது போல இருக்கிறதா? உண்மைதான் 2002ல் குஜராத்தில் இதை இன்னும் ‘சிறப்பாக செய்து காட்டியவர்தானே அமீத் பாய்’. 


குற்றத்தை  தூண்டியவனும் துவங்கியனும் திமிராய் உலவ, தடுத்தவனும், தவிர்த்தவனும் குற்றவாளிகளாய் நிற்பது புதிதல்ல. 


வரலாற்றின் இருண்டநாட்களின் கலக்கத்திலிருந்து விடுபட , அதே வரலாற்றின் முன்னூதாரணங்களே ஒரு சிறிய கீற்றான வெளிச்சத்தை சாத்தியமாக்கும்.


பாசிசத்தின் இறுதி முடிவு பாதாள அறை தற்கொலைகளிலோ அல்லது தெருமுனை விளக்குக் கம்பங்களில் பிணங்களாக தொங்கவிடப்படுவதிலேயே என்பதே அந்த வரலாறு. 


*உச்சநீதி மன்றம் வழங்கியுள்ள நான்குவாரங்கள் கால அவகாசத்தின் போது அவசியம் இந்த வரலாற்று காட்சிகளையும் பார்க்கும்படி வேண்டுகிறேன்.*


*🖊️Subaguna Rajan*


Popular posts
முதல் மனைவியுடன் உறவை துண்டிக்காததால் தகராறு - இரும்பு பைப்பால் அடித்து மனைவி கொலை கணவன் கைது.
Image
சசிகலாவுக்கு கடும் நிமோனியா காய்ச்சல்: அதிதீவிர நுரையீரல் தொற்றால் பாதிப்பு....விக்டோரியா அரசு மருத்துவமனை அறிக்கை
Image
ஜெயலலிதாவின் வேதா இல்லம் வரும்28-ந்தேதி பொதுமக்கள் பார்வைக்கு திறப்பு
Image
மதுரவாயல் - வாலாஜாபேட்டை இடையே உள்ள சுங்கச்சாவடிகளில் 50 சதவீத கட்டணம் பெற வேண்டும் என்ற உத்தரவு நீட்டிப்பு - சென்னை உயர்நீதிமன்றம்
Image
அ.தி.மு.க-வுக்குத் தலைமையேற்கும் `சசிகலா - ஓ.பி.எஸ்’ - குருமூர்த்தி பேச்சின் பின்னணி ரகசியங்கள்!
Image