பாழைடைந்த பள்ளிக் கட்டிடம்! பீதியுடன் படிக்கும் மாணவர்கள்!

திருநெல்வேலி மாவட்டம் திருநெல்வேலி தாலுகா சங்கர் நகர் சிறப்பு நிலைப் பேரூராட்சிக்கு உட்பட்ட தாதனூத்து கிராமத்தில் 200 குடும்பத்திற்கு மேல் வாழ்ந்து வருகின்றனர்.


திருநெல்வேலி மாவட்டம் சங்கர் நகர் சிறப்பு நிலைப் பேரூராட்சிக்கு உட்பட்ட தாதனூத்து கிராமத்தில் உள்ள தாதனூத்து ஊராட்சி ஒன்றிய துவக்கப்பள்ளி ஒன்று முதல் ஐந்து வரை 1966 ஆம் ஆண்டில் இருந்து ஓட்டு கட்டிடத்தில் ஐம்பது ஆண்டுகளாக செயல்பட்டு வருகிறது. தாதனூத்து கிராமத்தில் ஊராட்சி ஒன்றிய துவக்கப்பள்ளியில் படித்து பலர் அரசு பணியில் பணி புரிந்து வருகின்றனர். 


ஒரு சிலர் பணி புரிந்து ஓய்வு பெற்று உள்ளனர். தாதனூத்து ஊராட்சி ஒன்றிய துவக்கப்பள்ளி ஐம்பது ஆண்டுகளுக்கு முன்பு உள்ள கட்டிடம் என்பதால் ஓடுகள் உடைந்து விட்டது மற்றும் மரக்கம்புகளை முழுமையாக உழுத்து விட்டதால் மழை நாட்களில் தண்ணீர் பள்ளிக்குள் இறங்குகின்றன. அதுமட்டுமல்லாமல் பழைய கட்டிடம் என்பதால் மாணவர்கள் பெற்றோர்கள் அச்சப்படுகின்றனர்.


அதுமட்டுமல்லாமல் தாதனூத்து கிராம மக்கள் தங்கள் குழந்தைகளை வெளி பள்ளிகளில்குழந்தைகளை சேர்க்கின்றனர். தாதனூத்து ஊராட்சி ஒன்றிய துவக்கப் பள்ளியின் கட்டிடம் பழைய கட்டிடம் என்பதால் தங்கள் குழந்தைகளை இந்த பள்ளியில் சேர்ப்பது இல்லை.


தாதனூத்து கிராம மக்கள் தங்கள் குழந்தைகளை தாதனூத்து ஊராட்சி ஒன்றிய துவக்கப் பள்ளியில் படிக்க வைக்க விருப்பப்படுகின்றனர். ஆனால் கட்டிடம் பழமையாக இருப்பதால் தங்கள் குழந்தைகளை சேர்க்க தயங்கின்றனர்.


அதனால் திருநெல்வேலி மாவட்டம் சங்கர் நகர் சிறப்பு நிலைப் பேரூராட்சிக்கு உட்பட்ட தாதனூத்து ஊராட்சி ஒன்றிய துவக்கப்பள்ளியை முழுமையாக இடித்து விட்டு புதிய கட்டிடம் ஒன்று முதல் ஐந்து வரைதனி கட்டிடம் மற்றும் ஆசிரியர் அவர்களுக்கு தனி அறை, கழிப்பறை வசதியுடன் புதிய கட்டிடம் தர வேண்டும் என்று கேட்டுக் கொள்கிறோம்.


மேற்கண்ட புகார் மனு மீது திருநெல்வேலி மாவட்ட ஆட்சியர் அவர்கள் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கேட்டுக் கொள்கிறோம். தாதனூத்து கிராம மக்கள் மற்றும் தாதனூத்து ஊராட்சி ஒன்றிய துவக்கப்பள்ளி மாணவர்கள்.


Popular posts from this blog

பஞ்சாயத்து தலைவருக்கு எவ்வளவு சம்பளம் தெரியுமாகோடிகள், புரளும் (ஊராட்சிகளில் ஊழல் நடப்பது எப்படி....

FIR-ல் வெளியான அதிர்ச்சி-பற்கள் பிடுங்கப்பட்ட விவகாரத்தை சிபிசிஐடி விசாரணைக்கு மாற்றி டிஜிபி சைலேந்திரபாபு உத்தரவிட்டுள்ளார்.

மன்னிப்பு கேட்கிறவன் மனுஷன்.. மன்னிக்க தெரிஞ்சவன் பெரிய மனுஷன்.... இந்த விவகாரத்தில் யோகிபாபு பெரிய மனுஷன் தான்..!