தமிழகத்தைச் சேர்ந்த ஐ.பி.எஸ் அதிகாரியான முனிராஜின் பணியிட மாற்றம்தான் தற்போது உத்தரப்பிரதேசத்தில் ஹாட் டாப்பிக்.

தர்மபுரி மாவட்டம் பாப்பாரப்பட்டியில் ஒரு விவசாயக் குடும்பத்தில் பிறந்தவர் முனிராஜ். அரசுப் பள்ளியில் படித்த இவர், கோவையில் உள்ள தமிழ்நாடு வேளாண் பல்கலைக்கழகத்தில் இளநிலை விவசாயம் படித்தார். ஹரியானாவில் முதுகலை விவசாயம் முடித்தார். சிவில் சர்வீஸில் ஆர்வம் காட்டிய அவருக்கு, 2009-ம் ஆண்டு ஐ.பி.எஸ் போஸ்டிங் கிடைத்தது.


அதுவரை விவசாயக் குடும்பம் என்ற அடையாளத்துடன் வலம் வந்துகொண்டிருந்தவர், ஐ.பி.எஸ் ஆக வலம் வரத்தொடங்கினார். பத்து ஆண்டுகளில் 30-க்கும் மேற்பட்ட என்கவுன்டர்கள். 12 ட்ரான்ஸ்ஃபர்கள். அதிகபட்சம் ஓர் இடத்தில் பணியாற்றியது ஒன்றரை ஆண்டு. குறைந்தபட்சம் பணியாற்றியது 12 மணி நேரம். பி.ஜே.பி ஆளும் உ.பி-யில், ஆளுங்கட்சி எம்.எல்.ஏ மீதே எப்.ஐ.ஆர் போட்டு, அரஸ்ட் வாரன்ட் பிறப்பித்தவர். இவருக்கு பயந்து அந்த எம்.எல்.ஏ தலை மறைவாகிவிட்டார்.


பிறகு, ஜாமீன் வாங்கிவிட்டுத்தான் ஊருக்குள் தலையைக் காட்டினார் எம்.எல்.ஏ. உ.பி-யில், லோக்கல் தாதா முதல் ஆளுங்கட்சிப் பிரமுகர்கள் வரை பயப்படும் ஒரே போலீஸ் அதிகாரி இவர்தான். இந்து, முஸ்லிம் பிரச்னைகளைத் தடுத்ததால், இரண்டு மக்களாலும், சிங்கம்' என்றும் அன்புடன் அழைக்கப்படுகிறார்.


முக்கியமாக, தமிழக தங்க நகை வியாபாரிகளை குறிவைத்து கொள்ளையடித்து வந்த, உத்தரப்பிரதேசத்தைச் சேர்ந்த பல கொள்ளையர்களைப் பிடிக்க முக்கியப் பங்காற்றியவர் முனிராஜ். அதிலும், கடைசியாக கோவை தங்கநகை வியாபாரி ஒருவரின் நகையை முழுவதுமாக மீட்டுக் கொடுத்ததிலும் முனிராஜின் பங்கு முக்கியமானது.


இப்படி தமிழகம் மற்றும் உ.பி என்று ரெண்டு மாநில மக்களும் ஹீரோவாக கொண்டாடி வரும் முனிராஜ், உ.பி சிறப்புக் காவல் படையான மொரதாபாத் 24-வது பட்டாலியன் கமாண்டராக இருந்தார். உ.பியில் தற்போது குடியுரிமை திருத்தச் சட்டத்துக்கு எதிராக போராட்டங்கள் வலுத்து வருகின்றன.


அதிலும், அலிகர் மாவட்டம் இந்தப் போராட்டங்களில் முன்னிலை வகிக்கிறது. அலிகர் முஸ்லிம் பல்கலைக்கழகத்தில் மாணவர்களும் ஆசிரியர்களும் குடியுரிமை திருத்தச் சட்டத்துக்கு எதிரான போராட்டங்களை தீவிரப்படுத்தி வருகின்றனர்.


அதேபோல, அலிகரின் பல்வேறு இடங்களில் பொதுமக்கள் கூடி தொடர் போராட்டங்களில் ஈடுபட்டு வருகின்றனர். இந்தப் போராட்டங்களை எப்படியாவது முடிவுக்குக் கொண்டுவர உ.பி அரசு முடிவு செய்துள்ளது அதன் காரணமாக, அலிகர்மாவட்ட எஸ்.எஸ்.பி-யாக இருந்த ஆகாஷ் குலாட்டி என்பவருக்கு, டி.ஐ.ஜி.-யாக பதவி உயர்வு கொடுக்கப்பட்டுள்ளது. இதையடுத்து, முனிராஜ் அலிகர் மாவட்ட எஸ்.எஸ்.பி-யாக பணியமர்த்தப்பட்டுள்ளார்.


"முனிராஜின் நடவடிக்கைகளைத் தொடர்ந்து கவனித்து வரும் உ.பி முதல்வர் யோகி ஆதித்யநாத், தற்போது நடைபெற்று வரும் போராட்டங்களைக் கட்டுப்படுத்தும் முக்கிய அஸைன்மென்டை முனிராஜ்க்கு வழங்கியுள்ளார். முனிராஜ் மட்டுமல்ல, உ.பி-யில் பணியாற்றும் 8 ஐ.பி.எஸ் அதிகாரிகள் மீதும் ஆதித்யநாத் தனிக்கவனம் செலுத்தி வருகின்றார்" என்கின்றனர் விவரம் அறிந்தவர்கள்.


சவால்கள் நிறைந்த அலிகர் மாவட்ட எஸ்.எஸ்.பி-யாக முனிராஜ் சனிக்கிழமை இரவு பதவியேற்றுள்ளார். பதவியேற்ற அடுத்த நொடியில் இருந்து பரபரப்பும் தொற்றிக்கொண்டது.


போராட்டத்தில் ஈடுபட்டிருந்த சிலர் லோக்கல் காவல்நிலையம் ஒன்றின் மீது கல் வீசியுள்ளதாகக் கூறப்படுகிறது. பெண்களும் நிரம்பியிருந்த அந்தக் கூட்டத்தை, பெரிய அசாம்பாவிதங்கள் ஏதுமின்றி தடுத்து நிறுத்தியுள்ளார் முனிராஜ். பரபரப்பாக இயங்கிக்கொண்டிருந்த 


இது கொஞ்சம் சென்ஸிட்டிவான ஏரியாதான். எனக்கு முன்பிருந்தவர்கள் கடைப்பிடித்த வழிமுறைகள் பலனளிக்கவில்லை . சட்டப்படியான சில நடவடிக்கைகள் எடுப்பதன் மூலம் நிலைமையைக் கட்டுப்படுத்த முடியும் என்று நினைக்கிறேன்.


அதேபோல, பேச்சுவார்த்தை நடத்துவதற்கும் அழைப்பு விடுத்துள்ளோம். எப்படியும் ஒரு வாரத்துக்குள் அலிகர் இயல்பு நிலைக்கு திரும்பிவிடும். மக்களுக்குச் சேவை செய்வதற்கு அரசாங்கம் எனக்கு மீண்டும் அளித்த ஒரு வாய்ப்பாகத்தான் இதை நான் பார்க்கிறேன்" என்று முடித்தார்.


Popular posts from this blog

பஞ்சாயத்து தலைவருக்கு எவ்வளவு சம்பளம் தெரியுமாகோடிகள், புரளும் (ஊராட்சிகளில் ஊழல் நடப்பது எப்படி....

மன்னிப்பு கேட்கிறவன் மனுஷன்.. மன்னிக்க தெரிஞ்சவன் பெரிய மனுஷன்.... இந்த விவகாரத்தில் யோகிபாபு பெரிய மனுஷன் தான்..!

நோன்பு சட்டதிட்டங்கள்-(ஷாபியீ, ஹனபி)