விஜய் சேதுபதிக்கு குவிகிறது வில்லன் வாய்ப்புகள்

தமிழில் முன்னணி நடிகராக இருக்கும் விஜய் சேதுபதிக்கு, வில்லன் வாய்ப்புகள் குவிந்து வரு வதாக தகவல் வெளியாகி உள்ளது. விஜய் சேது பதி இமேஜ் பார்க்காமல் வித்தியாசமான கதாபாத் திரங்களில் நடித்து வருகிறார். சூப்பர் டீலக்ஸ் படத்தில் நடித்த திருநங்கை கதாபாத்திரத் துக்கு பாராட்டுகள் கிடைத்தன. விக்ரம் வேதா, பேட்ட படங்களில் வில்லன் வேடம் ஏற்றார்.


இந்த படங்களுக்கு பிறகு அவருக்கு வில்லன் வாய்ப்புகள் குவிகின்றன. தற்போது விஜய்யின் மாஸ்டர் படத்தில் வில்லனாக நடித்து வருகிறார். அடுத்து பிச்சிபாபு சனா இயக்கத்தில் உருவாகும் உப்பெனா என்ற தெலுங்கு படத்திலும் வில்லனாக நடித்து இருக்கிறார்.


கதாநாயகிக்கு தந்தையாகவும், வில்லனாகவும் விஜய் சேதுபதி வருகிறார். உப்பெனா படத்தின் விஜய் சேதுபதி தோற்றத்தை படக்குழுவினர் வெளியிட் டுள்ளனர். இந்த தோற்றம் சமூக வலைத்தளத்தில் வைரலாகி வருகிறது. படம் ஏப்ரல் 2ந்தேதி திரைக்கு வருகிறது. விஜய் சேதுபதி நடித்துள்ளதால் தமிழிலும் டப்பிங் செய்து வெளியிட ஏற்பாடுகள் நடக்கிறது.


Popular posts from this blog

பஞ்சாயத்து தலைவருக்கு எவ்வளவு சம்பளம் தெரியுமாகோடிகள், புரளும் (ஊராட்சிகளில் ஊழல் நடப்பது எப்படி....

மன்னிப்பு கேட்கிறவன் மனுஷன்.. மன்னிக்க தெரிஞ்சவன் பெரிய மனுஷன்.... இந்த விவகாரத்தில் யோகிபாபு பெரிய மனுஷன் தான்..!

நோன்பு சட்டதிட்டங்கள்-(ஷாபியீ, ஹனபி)