நித்யானந்தா வெளியிட்ட புதிய வீடியோவில் தகவல்-கைலாசா தனி நாடு பணிகள் நிறைவு

கைலாசா’ தனி நாட்டை உருவாக்கி விட்டதாக நித்யானந்தா தனது புதிய வீடியோவில் தெரிவித்துள்ளார்.


வெளிநாட்டில் தலைமறைவாக உள்ள நித்யானந்தா அவ்வப்போது சமூக வலைதளங்களில் வீடியோ வெளியிட்டு பரபரப்பு ஏற்படுத்தினார்.


அவர், ஈகுவேடார் அருகே ‘கைலாசா’ என்ற பெயரில் தனி நாடு உருவாக்கும் முயற்சியில் ஈடுபட்டிருப்பதாக தகவல்கள் வெளியாகின.


இந்நிலையில் புதிய வீடியோ ஒன்றை நித்யானந்தா வெளியிட்டுள்ளார். அதில் கூறியிருப்பதாவது:


கடந்த 20 ஆண்டுகள் போராட்டத்துக்குப் பிறகு ‘கைலாசா’ தனி நாட்டை உருவாக்கும் பணிகள் நிறைவடைந்துள்ளன. வாடிகனைப் போல இந்து மதத்துக்காக ஓர் இடத்தை உருவாக்க வேண்டும் என்ற எனது ஆசை நிறைவேறிவிட்டது.


கைலாசம் குறித்த வேறு எந்த தகவல்களையும் தரப் போவதில்லை. சில நாடுகளுடன் தூதரகரீதியிலான உறவுகள் தொடங்கியுள்ளன.


தமிழ்நாட்டுக்கும் எனக்கும் எந்த சம்பந்தமும் இல்லை. இனிமேல் தமிழ்நாட்டுக்கு வரமாட்டேன். தமிழக ஊடகங்களைப் பொறுத்தவரை நான் இறந்துவிட்டேன்.


எனது மரணத்துக்குப் பிறகு எனது சொத்துகள் யாரைச் சென்றடைய வேண்டும் என்று உயில் எழுதி வைத்துள்ளேன்.


நான் இறந்ததும் எனது உடல் பிடதியில் உள்ள ஆசிரமத்தில்தான் அடக்கம் செய்யப்பட வேண்டும். இதுவே எனது கடைசி ஆசையாகும்.


இவ்வாறு தனது புதிய வீடியோவில் நித்யானந்தா கூறியுள்ளார்.


Popular posts from this blog

பஞ்சாயத்து தலைவருக்கு எவ்வளவு சம்பளம் தெரியுமாகோடிகள், புரளும் (ஊராட்சிகளில் ஊழல் நடப்பது எப்படி....

FIR-ல் வெளியான அதிர்ச்சி-பற்கள் பிடுங்கப்பட்ட விவகாரத்தை சிபிசிஐடி விசாரணைக்கு மாற்றி டிஜிபி சைலேந்திரபாபு உத்தரவிட்டுள்ளார்.

சமூக வலைதள யூடியூபருக்கு, 1 லட்சம் அபராதம் கட்டிய உதவி ஆய்வாளர் இசக்கி ராஜா – மனித உரிமை ஆணையம் உத்தரவு