நோபல் பரிசு வந்தது எப்படி
ஆல்பிரட் நோபல் ஆல்பிரட் நோபல் இவர் கண்டுபிடித்தது தான் டைனமெட் மற்றும் ஜெல்லட்டி இது 'சுரங்கங்கள் தோண்டுவதற்கும், அதிக பயங்கர யுத்தங்கள் செய்வதற்கும் ஏன் உயிர்களைக் கொள்வதற்கும் கூட பயன்பட்டது. இன்றும் அது பயன்படுகிறது. இதை ஆல்பிரட் நோபல் 1867 ஆம் ஆண்டு கண்டுபிடித்து வெளிகொணர்ந்தார். இதன் விளைவாய் அவருக்கு வருவாய் குறைவில்லாமல் எட்டு திசைகளிலும் இருந்து செல்வங்கள் வந்து குவிந்ததோடு மட்டுமல்லாமல், உடன் புகழும் வந்து சேர்ந்தது. இதனால், அந்த மனிதர் எவ்வளவு சந்தோசப்பட்டிருக்க வேண்டும்? எவ்வளவு பெரிய ஆடம்பர வாழ்க்கை வாழ்ந்திருக்க வேண்டும் அல்லவா. அதுதான் இல்லை. அதற்கு மாறாக அவரது மனம் துன்பப்பட்டது. சதாகாலம் அவரை சோகம் தன் பிடியில் வைத்திருந்தது என்றால்மிகையாகாது.
காரணம், டைனமிட்டை கண்டுபிடித்தபோது தன் கண் முன்னே தனது சகோதரர் உடல் முழுவதும் கருகி இறந்து போனார். அது ஆல்பிரட் நோபலை மிகவும் பாதித்தது. அதோடு மட்டுமல்லாமல், வேறொரு வேதனையும் அவரைத் தொற்றிக் கொண்டது. தான் கண்டுபிடித்த பொருள்கள் உலகில் பல்லாயிரக்கணக்கான மனித உயிர்கள் பலியாகிவிடுமோ என்பதுதான் அது.
தான் கண்டுபிடித்த டைனமிட்டால் ஒட்டுமொத்த நாடுகள் யுத்தம் தொடங்கி அது உலக யுத்தமாக வந்து விட்டால் இந்த பூமி பந்தில் மிஞ்சுவது என்ன? ஒன்றுமே இருக்காதே என்று வருந்தி ஏன் இந்த தவறை செய்தோம் என சிறுக, சிறுக மனம் சிதைந்து நோகத் தொடங்கியது. இதற்கு மாற்று வழிதான் என்ன என்று சிந்தித்து ஒரு முடிவுக்கு வந்தார். அதன் பயனாய் ஒரு திட்டம் தயார் செய்து, அதை உலகமே ஒன்றுமையுடன் வாழ வேண்டும் எனக் கருதி தான் கண்டுபிடித்த டைனமிட்டை பயன்படுத்தும் நாடுகளிடம் தான் தயாரித்த திட்டத்தைப்பற்றி எடுத்து உரைத்தார். ஆனால், அதை அந்த நாடுகள் ஒன்று கூட சட்டை செய்யவில்லை. இன்னும் சொல்ல போனால், அவரை சுத்தமாக உதாசினபடுத்தி செவி சாய்க்க மறுத்து விட்டது. காரணம் அவர் கண்டு பிடித்ததை விலைக்கு விற்றுவிட்டார். அதோடு அவருடைய பணி முடிந்தது என்பதுதான்.
இதனால் தான் வாழ்வே நொறுங்கி போனதாக 20 | உணர்க்கார் அல்பிரட் நோபல் ஒரு சல்லிக் காசுகூட தன் கையில் வைத்துக்கொள்ளாம ல் ஒட்டுமொத்தமாக அனைத்தையும் தன் பெய ரி லியே ஒரு - அறக்கட்டளையை நிறுவி தான் சம்பாதித்த செல்வங்களையெல்ல ாம் அதில் சேர்த்துவிட்டு இந்த பூமி பந்தில் ஆல்பிரட் நோபல் வாழும் அனைத்து உயிர்களுக்கும் குறைவில்லா வாழ்வு வாழ்ந்திட-பல ஆராய்சிகள் மூலம் பல அறிய பயனுள்ள கண்டு பிடிப்புகளை வெளிகொணர்ந்து கொடுப்பவர்களுக்கு தன்னுடைய அறக்கட்ளை மூலம் பாராட்டும் விருதும் மேலும் ஊக்கு விக்கும் வகையில் ஊக்கத் தொகைகளையும் வழங்க வேண்டும் என்று பதிவிட்டு பின் அனாதையாக இறந்து போனார்.
இன்று உலகலவில் இது உன்னதமான மிகப்பெரிய உயரிய விருதாகக் கருதப்படு கிறது . இவ்விருதினை பெறுகிறவர்கள் உலக மக்களால் போற்றதக்கவர்களாக மிகப்பெரிய மதிப்புடையவர்களாக கருதப்படுகிறார்கள். ஆல்பர்ட் நோபல் ஒரு நல்ல மனம் கொண்ட மனிதர் மட்டுமல்ல, பிற உயிர்களிடத்தும் இரக்கம் கொண்டவர் என்பதை உலகுக்கு பறைசாற்றி சென்று உள்ளார்.
இவரின் பெயரில் வழங்கப்படும் நோபல் பரிசுக்கு பிதாமகன், ஆல்பிரட் நோபல் என்பதோடு அவர் ஒரு பெருமதிப்பிற்குரிய மனிதர் ஆவார். பாதையில் ஒருவர் பயணம் செய்யும் சூழலை உணர்ந்து அதிலிருந்து முழுமையாக வெளியேறிவிட்டால் அதை விட வேறு எதுவும் மண்ணிப்பு இல்லை என்பதை இதன் மூலம் நிரூபித்து சென்ற ஆல்பிரட் நோபல் எண்ணம் என்றும் பிரதிபலிக்கட்டும் நாமும் ஒருமுறையாவது அவரைப்பற்றி சிந்திப்போம். சீர்பெறுவோம்.